கர்ணர்𓃵⚖🍃
60.5K posts

கர்ணர்𓃵⚖🍃
@Real_kanjan
யாரோ என் புரொஃபைல பாக்க வந்துருக்காங்க டோய்💃💃 கவிதை எழுத தெரியாது கலாய்க்க மட்டும் தான் தெரியும்😉😉 #காஃப்டா #பேய்_இருக்கா_இல்லையா #கர்ணர் #பச்சமண்ணு😁


இதுக்கு பெரிய அய்யா ராமதாஸ் ஐ கூட கூட்டணியில் சேர்த்து இருக்கலாம். எவ வேலுவின் தனிப்பட்ட பகை முழுக்க திமுகவை முடித்துவிட்டு இருக்கு வட மாவட்டங்களில்..






உண்மையாவே அந்த ஊர்க்காரங்களை பாராட்டனும்.. பேக்ல அருவாளை ஒளிச்சி வச்சிட்டு பேச்சுவார்த்தைன்னு பொய் சொல்லி வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காப்ல பாடிபில்டர் ராஜ்போரோன். வீட்டுக்குள்ளயே கைகலப்பு ஆகி வெளில தள்ளினதும், வரண்டால இருந்துட்டு பாடிபில்டரும் மனைவியும் அவ்ளோ ஆணவ பேச்சு.. என் தயாரிப்பை குறை சொல்லுவியா வெளில வா மோதிப்பாப்போம்ன்னு ரவுடிசம். இவங்க வீட்டுக்குள்ள இருந்தே போலீசுக்கு தகவல் கொடுக்க, இன்னொரு பக்கம் சத்தம் கேட்டு ஊர்க்காரங்க ஒவ்வொன்னா வந்து வேட்டியை உருவி வெளுத்துட்டாங்க. கோவத்தின் உச்சிக்கு போன பாடிபில்டர் அப்போ தான் அருவாளை கையில எடுக்குறார். ஊர்க்காரங்க சுத்தி வளைச்சிட்டதால ஓடவும் முடியாம ஒளியவும் முடியாம வீடியோல மொத்தமா சிக்கி, பல அடிகளையும் வாங்கி இப்ப காவல்துறை விசாரணைல இருக்கார். கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யனும். திட்டமிட்டே அருவாளை கொண்டு வந்தது பெரிய க்ரைம். தக்க தண்டனை கொடுக்கனும். சிங்கம் படத்துல நல்லூர் ஸ்டேசனை செங்கல் செங்கலா பிரிக்கலாம்ன்னு வந்த மயில்வாகனம் சீன் தான் நியாபகம் வந்தது.. ஊர்க்காரங்களுக்கு பாராட்டுக்கள்.

16 வருசமா கரூரில் தான் இருக்கேன்! இப்ப வரைக்கும் நல்ல கடை சொல்றது மாதிரி ஒன்னு கூட இல்ல 😂

தோழர் திருமா @thirumaofficial போல் ஒரு தலைவரைப் பார்ப்பது அரிது. எந்தக் கட்சி தங்கள் குறையைப் பேசும்? நாங்கள் முழுதாக வேலைச் செய்தோம் என்று பொய் சொல்லாமல் தங்கள் கட்சியின் உண்மை நிலை என்ன என்று வெளிப்படையாக சுயபரிசோதனைக்கு உட்படுத்துவார். அதான் திருமா ❤️

“சசிகுமார் அவ்வளவுதான்” எனப் பலரும் முடிவு கட்டிவிட்ட நேரத்தில், பீனிக்ஸ் பறவையைப்போல் அவரை எழ வைத்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. படம் ரிலீஸாகி இன்றோடு ஒரு வருடம்… படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் சசி சார் போன் பண்ணினார். “நல்லா ஷூட் பண்றாங்க. படம் அருமையா வந்துட்டு இருக்கு. ஆனா, பட்ஜெட் மட்டும் ஜாஸ்தியாகும் போல… யுவராஜ்கிட்ட பேசி கொஞ்சம் சிக்கனமா பண்ணச் சொல்லுங்க. நம்மளை நம்பி முதல் போடுறாங்க. நாளைக்கு அவங்க சங்கடப்பட்டு நின்னுடக் கூடாது” என்றார் சசிகுமார் சார். தம்பி யுவராஜுக்கு போன் பண்ணி பல விஷயங்களைப் பேசிவிட்டு இறுதியாக, “படத்தைக் கொஞ்சம் சிக்கனமா பண்ணுங்க தம்பி…” என்றேன். எதிர்முனையில் பதில் இல்லை. “இப்பெல்லாம் சசி சாருக்கு பெரிய பிசினஸ் இல்லப்பா.. அகலக்கால் வைக்காதீங்க” என்றேன் வெளிப்படையாய். “சார், தயவுபண்ணி சசி சாரை குறைச்சு மதிப்பிடாதீங்க. அவர் 100 கோடி பிசினஸ்க்கு வொர்த்தான ஹீரோ. இந்தப் படம் நிச்சயம் ஒரு மேஜிக் பண்ணும். நீங்க பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்காதீங்க சார்” என்றார் யுவராஜ். அவர் சொன்னது போலவே 100 கோடிக்கான வசூல் பட்டியலில் இணைந்து வாகை சூடியது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்! “சசி சார் அவ்வளவுதான்” எனச் சொன்னவர்களே அவருடைய தேதிக்காக இன்றைக்கு க்யூவில் நிற்கிறார்கள். பந்தயக் குதிரையாக மறுபடியும் பாய்ச்சல் காட்டத் தொடங்கிவிட்டார் @SasikumarDir படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அத்தனை பேரும் கோடி நன்றிக்குரியவர்கள். “இங்கே யாரும் அகதி இல்லை” என ஓங்கி உரைத்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிச்சயம் காலம் கடந்தும் பேர் சொல்லும் காவியமாக நிலைத்திருக்கும்! One year of #TouristFamily






