Reshzan Thayaparan
51.7K posts

Reshzan Thayaparan
@Reshzankan
#Banker #Progressivist #sociopolitical TV show host #Chelsea *Views are personal

இலங்கையின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அண்மைக்கால செயற்பாடுகளை ஆராய்ந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு, எதிர்காலத்தில் அவர் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கும் முடிவை எடுக்கப்போவதாக தெரிகிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசா நிபந்தனைகளை மீறி அவர் கண்டபடி கருத்துகளை தெரிவித்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறியமுடிகிறது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதல் தமிழக அமைச்சராக அதுவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் அன்பு இளவல் பெருமதிப்பிற்குரிய தோழர் மாண்புமிகு வன்னியரசு @VanniTamizhVCK அவர்கட்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அர்ப்பணிப்பும் ஆளுமையும் கண்ணியமான தோழமைப்பண்பும் நிறைந்தவர். சாதிய எதிர்ப்புக்களத்தில் காயங்களையும் ரணங்களையும் சுமந்தவர். தலைவரின் நம்பிக்கைக்குரிய முன்னணி தளபதி தோழர் வன்னியரசு அவர்கள். அவரும் அவரது இணையரும் கட்சிக்கும் தலைமைக்கும் ஆற்றியப்பணிகள் எந்நாளும் நன்றிக்குரியன. தகுதியானவருக்கு அமைச்சர் பதவியை பரிந்துரைத்த தலைவருக்கு நன்றி. இந்த தருணத்தில் இந்த துறை சார்நதும் நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்தவும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன். தலைவர் திருமாவிடம் கற்று உறுதி செய்துகொண்ட பாடம் எனவும் நம்புகிறேன். இந்த சாதனைகளில் நினைவில் இருக்கும் சிலவற்றைமட்டும் பதிவிடுகிறேன். யாருமே இதை அங்கீகரிக்காமல் போனாலும் , பாராட்ட மனமின்றி கடந்து போனாலும் , மாறாக காழ்ப்புணர்ச்சியில் என் மீது அவதூறுகளை அள்ளி வீசினாலும் இந்தச்சாதனைகளை கள்ளங்கபடமற்ற விடுதலைச்சிறுத்தைகளின் காலடிக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தத் தலைமுறை தியாகத்தலைமுறையாக இருக்கட்டும் என தலைவர் @thirumaofficial விடுத்த அறை கூவலை ஏற்று எதிர்பார்ப்பு ஏதுமின்றி தம் வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற தோழர்களுக்கு இது சமர்பணம். இந்த சாதனைகளை பலமடங்கு விஞ்சக்கூடிய வகையில் தோழர் வன்னியரசு பணியாற்றி வரலாறு படைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தூய்மையான உள்ளத்தோடு வாழ்த்தி மகிழ்கிறேன். மாண்புமிகு புதிய முதல்வருக்கும் தமிழக அமைச்சரவைக்கும் எனது வாழ்த்துக்கள். கடந்த 2021 - 26 கால கட்டத்தில் மேற்க்கொள்ளப்பட்ட எமது முயற்சிகளும் , சாதனைகளும். …. எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் SC/ST பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதை போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது. SC/ST பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெரும் வகையில் (அதிகபட்சம் 1.5 கோடி ) ஆண்டுக்கு 200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். சர்வதேச பல்கலைக்கழகங்களில் நம் மாணவர்கள் பயில 36 லட்சம் முதல் 24 லட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு 200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும், பழங்குடியினருக்கு தொல் குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியல் வகுப்பார் பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் 200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச்சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

PTR Palanivel Thiagarajan | தேர்தல் தோல்வி.. பிடிஆர் பதிவு ஓட்டுக்கு பணம் கொடுக்காத, பொய்ப் பிரச்சாரம் செய்யாத வேட்பாளரிடம் தோற்றதிலும், ஓட்டுக்கு ரூ.1000 வழங்கிய வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததிலும் எனக்கு மகிழ்ச்சியே மதுரை மத்திய தொகுதியில் தவெக வேட்பாளர் முஸ்தபா வென்ற நிலையில், அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பிடிஆர் பதிவு Elecion 2026 | Musthafa | TVK | DMK #Elecion2026 | #Musthafa | #TVK | #DMK | #PTRPalanivelThiagarajan | #TamilNews | #NewsTamil24x7

Tamil Nadu Chief Minister C. Joseph Vijay on Monday expressed solidarity with the global Tamil diaspora on the occasion of Mullivaikkal Remembrance Day, pledging continued support for their rights. In a post on X, the Tamilaga Vettri Kazhagam (TVK) chief said: “Let us hold the memories of Mullivaikkal in our hearts. We will always stand by the rights of our Tamil kindred living across the seas.” D: newswire.lk/4ttk


இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த முதல்வரும் காலை பத்து மணிக்கு பணிக்கு வந்து வரும்போதே வீட்டிலிருந்து கையில் மதிய சாப்பாடு கொண்டு வந்து தலைமை செயலகத்தில் வைத்து சாப்பிட்டு அப்படியே பணியை மீண்டும் தொடங்கி மாலை நான்கு மணிக்கு வீடடுக்கு சென்றவர்கள் யாராவது உண்டா.. ஒரு அரசு ஊழியர் போல் மக்கள் பணியை செய்யும் முதல்வரே... தொடரட்டும் உங்களது மக்கள் பணி..




சிவி சண்முகத்தின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ளக்கூடியவை... 1. திருமாவை முதல்வராக்க திமுக முயற்சித்தது... 2. அதிமுகவின் ஒருபகுதி அதை விரும்பவில்லை... 3. இடதுசாரிகளின் நகர்வு தான் திருமா முதல்வராகும் ஆப்சன் உருவாக அடிப்படை... 4. திருமா சொன்னது போல இன்னும் தலித் முதல்வராக தமிழ்நாடு தயாராகவில்லை...

``திருமாவை CM ஆக்க சம்மதித்தோம்’’ ``தமிழகத்திற்கே மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை CM ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு அரிய வாய்ப்பு. திருமாவை CM ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. திமுக உடன் கூட்டணி முடியாது. திருமாவுக்காக செய்யலாம் என சம்மதித்தோம். ஆனால் விசிக ஆட்சி என்று தான் வரும் எனக்கூறி ஈபிஎஸ் முடியாது என மறுத்தார்’’ - சி.வி.சண்முகம் #EPS #ChiefMinister #CMVijay #CVShanmugam #SPVelumani #TNPolitics #ThanthiTV

``திருமாவை CM ஆக்க சம்மதித்தோம்’’ ``தமிழகத்திற்கே மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை CM ஆக்கலாம் என்ற யாரும் நினைத்து பார்க்காத, சிந்திக்காத ஒரு அரிய வாய்ப்பு. திருமாவை CM ஆக்கலாம் என திமுகவால் முன்மொழியப்பட்டது. திமுக உடன் கூட்டணி முடியாது. திருமாவுக்காக செய்யலாம் என சம்மதித்தோம். ஆனால் விசிக ஆட்சி என்று தான் வரும் எனக்கூறி ஈபிஎஸ் முடியாது என மறுத்தார்’’ - சி.வி.சண்முகம் #EPS #ChiefMinister #CMVijay #CVShanmugam #SPVelumani #TNPolitics #ThanthiTV



