Purujoththaman Thangamayl
15.7K posts

Purujoththaman Thangamayl
@itsmePurujoth
Father | Husband | Independent Journalist and Political Columnist
Maruthankerny, Jaffna, Colombo Katılım Ocak 2012
159 Takip Edilen3.2K Takipçiler

@itsmePurujoth இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா; God bless you always 🎉🥳🥳🎁
தமிழ்

வைகோவை விட மிக விரைவாகவும் கேவலமாகவும் திமுகவின் அடிமையாகிவிட்டார் கமல் ஹாசன். ரங்கராஜ நம்பியை நம்பி பின் சென்றவர்களின் முகங்களில் அவரே நாமத்தையும் சாத்தியிருக்கிறார். சார்ந்தோருக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள். @maiamofficial @ikamalhaasan #DMK
தமிழ்

எதிர்க்கட்சிகளின் அடிப்படையே அரசாங்கத்தினை விமர்சிப்பதுதான். ஆனால், எரிபொருள் நெருக்கடியில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புக்கள் இல்லை. இந்த நெருக்கடி நேரத்தில் விடயங்களை ஆய்ந்து அறிந்து ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும். (4) #gascylinershortage
தமிழ்

அநுரவின் இன்றைய உரை, நாடு தற்போது எதிர்கொண்டிருக்கின்ற எரிபொருள் நெருக்கடி தொடர்பில் குறிப்பிட்டளவு தெளிவுபடுத்தல்களை வழங்கியிருக்கின்றது. அரசாங்கம் நெருக்கடியைச் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்திருக்கின்றது என்றும் அநுர விளக்கியிருக்கின்றார்.(1) #IranIsraelWar
தமிழ்

ரஜினி
ஆட்சியாளர்களின் எக்காலத்துக்குமான அடிவருடி, கடைந்தெடுத்த சங்கி, துக்ளக் சோவின் சிந்தனை வாரிசு, தன் ரசிகர்களை அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லியே முப்பது ஆண்டுகளாக ஏமாற்றிய நடிகர். @rajinikanthஇன் அறிக்கையினால் எதுவும் நிகழ்ந்துவிடாது. அவரின் ஆழ்மன வன்மமே வெளிப்பட்டது.
தமிழ்

போர் ஒருபோதும் சமாதானத்தை உருவாக்குவதில்லை. அது பேரழிவின் அடையாளம் மாத்திரமே.(6) #Iran #IranAttack
தமிழ்

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கோரிக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுவதைக் காண முடிகின்றது. ஆனால், இந்தப் போரின் அடிமை சேவகர்களாக நிற்கும் சவூதி உள்ளிட்ட மேற்கு ஆசிய முஸ்லிம் நாடுகளை யாரும் கண்டிப்பதாக தெரியவில்லை. இது, பரிதாபத்துக்குரிய நிலை. (5) #Iran #IranAttack
தமிழ்

ஈரான் வீழ்கிறது. இஸ்ரேலின் போரை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியாவின் (மத்திய கிழக்கு) முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலின் அடிமைகளாக நின்று ஈரானை தோற்கடிக்கும் சதித் திட்டத்தின் பங்காளிகளாகியிருக்கின்றன. (1) #Iran #IranAttack
தமிழ்

"அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதற்காக என்னை தி.மு.க.வில் இணையச் சொன்னது அம்மாவின் ஆன்மாதான்..." என்று ஓபிஎஸ் பேட்டியளித்துவிட்டாரா?
ஒரு முன்னாள் முதல்வரின் அரசியல் சீரழிவுக் காட்சிகளை தமிழ்நாடு பதிவு செய்கின்றது! @AIADMKITWINGOFL @arivalayam @OfficeOfOPS
தமிழ்

இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு அவசரமாகத் தேவைப்படுவது சில ஆண்டு கால ஓய்வு மாத்திரமே. பாவம் அவர்களினால் எதுவும் முடியவில்லை. இப்படியே அவர்களை ஆட விட்டீர்கள் என்றால், கிரிக்கெட் என்றால் என்ன என்பதை நாம் மறக்க வேண்டி வரும். அது, இலங்கையின் எதிர்கால கிரிக்கெட்டுக்கு ஆபத்தானது. #NZvsSL
தமிழ்


