Sabitlenmiş Tweet
சீமான்
4.9K posts

சீமான்
@SeemanOfficial
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZb
Tamil Nadu, India Katılım Ekim 2017
7 Takip Edilen648.4K Takipçiler

என்னுயிர் அண்ணா…
உன் வாழ்வே எனது வழிகாட்டி… உன் சொற்களே எனது திசைகாட்டி…
உலகம் முழுதும் பரந்து விரிந்து வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் அனைவருக்கும் நம் தேசியத் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது அகவை தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் நெஞ்சார்ந்த பெருமிதமும், உள்ளத்து பெருமையும் கொள்கின்றேன்.
#தமிழினத்தலைவர்69



தமிழ்

நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக வேண்டும்!
காற்றும் இசையாகும் வாசித்தால்; சொற்களும் கவிதையாகும் யோசித்தால்; உலகமே நட்பாகும் நேசித்தால்!
உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை? எல்லோரும் அந்த வேசத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட காலம் வாழவேண்டும் என்பது பலரின் ஆசை; ஆனால் பலருக்கும் பயன்படுமாறு வாழ நினைப்பவர் மிகச்சிலரே! .
‘புல்லாங்குழல்’ பழையதாக இருந்தாலும் அதிலிருந்து புதிய இசை நிச்சயமாகத் தோன்றும்; முதுமையும் அதுபோலத்தான்!
ஒருவன் கெட்டவன் என்று சொன்னால் உடனே நம்பிவிடுகிறார்கள்; ஆனால் நல்லவன் என்று சொன்னால் நிரூபிக்க வேண்டி இருக்கிறது!
கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள்; சரியாகவில்லை என்றால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்!
தமிழ்

தமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி நிற்பது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும், தன் மதிப்புமிகு நேரத்தையும், ஒப்பற்ற ஆற்றலையும் தந்து கொண்டிருக்கின்ற
என் ஆருயிர் தம்பி இயக்குனர் சோழன் மு.களஞ்சியம் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
தம்பி மென்மேலும் வெற்றிபெற பேரன்புகொண்டு வாழ்த்துவோம்!
நாம் தமிழர்!

தமிழ்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லறைத்தோட்டங்களை முறையாக பாதுகாத்து பராமரிக்க, அவற்றை கிறிஸ்தவ திருச்சபைகளிடம் ஒப்படைக்க வேண்டும்!
naamtamilar.org/5asm
@CMOTamilnadu @mkstalin


தமிழ்

🔴தற்போது நேரலையில்..!
youtube.com/live/CJ4B3oBC1…
நீரின்றி அமையாது உலகு!
மண் வளம் காக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்
திருவைகுண்டம் பேய்குளம் | 19-06-2023

YouTube
தமிழ்

தமிழ் வரலாற்றுப் பேராய்வாளர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 30 நூல்கள் அடங்கிய இரண்டாம் தொகுப்பு முன்வெளியீட்டு திட்டத்திற்குத் துணை நிற்போம்!
naamtamilar.org/msvk5q



தமிழ்

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
naamtamilar.org/uk1sim
@CMOTamilnadu @mkstalin



தமிழ்

இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும் என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன் தமிழை ஆட்சி மொழியாகக் கேட்கிறிர்கள்? என்று கேள்வி எழுப்பியதிற்கு, நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன். இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்!
இந்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னத்தி ஏராக விளங்கக்கூடிய உண்மையும் நேர்மையும் தூய்மையும் எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர்!
நமது ஐயா கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களினுடைய 127ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று (05-06-2023). போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரிய அந்தப் பெருமகனின் பிறந்தநாளில் நாம் பெருமிதத்தோடு அவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

தமிழ்

தமிழிளம் தலைமுறையை முழுவதுமாக பலி கொடுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்! naamtamilar.org/tbh9qn
@CMOTamilnadu @mkstalin
வேலூரைச் சேர்ந்த பதினாறே வயதான அன்புமகள் விஷ்ணுபிரியா தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்பத்தின் நிலைகண்டு, மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
மலிவுவிலை மதுக்கடை என்ற பெயரில் தமிழ்க்குடும்பங்களை சிறுக சிறுக சீரழிக்கும் தமிழ்நாடு அரசின் மனச்சான்றற்ற கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.


தமிழ்

ஓடிசா தொடர்வண்டி விபத்தில் சிக்கிய உறவுகளின் உயிர் காக்க, குருதிக் கொடை வழங்க படை திரள்வோம்! naamtamilar.org/kkqsr2 ஒருங்கிணைப்பு
@KKPNTK


தமிழ்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ரீகன் ரொனால்டு பிராங்ளின் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ஜாண் போஸ்கோ அவர்கள் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பி ரீகன் ரொனால்டு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ஜாண் போஸ்கோ அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

தமிழ்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான #NationalSpaceSociety (NSS) பன்னாட்டு மாணவர்களுக்கிடையே நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில், உலகின் 19 நாடுகளிலிருந்து 26,725 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் விஜேந்திரகுமார் – மேனகா இணையரின் அன்புமகன் அர்ச்சிகன் 5ஆவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
இலங்கை அரசால் இனவழிப்புக்கு உள்ளாகி மண்ணையும், மக்களையும், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து விடுதலைப்போரின் வலி சுமந்து, ஈழத்தாயகத்திலிருந்து பெற்றோருடன் தமிழ்நாட்டில் ஏதிலியாக வாழ்ந்துவரும் நெருக்கடிமிகு நிலையிலும், கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ளதோடு, தன் இனத்தை அடிமைப்படுத்திய இலங்கை நாட்டிற்கும் சேர்த்து பெருமை சேர்த்துள்ள அன்புமகன் அன்புமகன் அர்ச்சிகனுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, புலம் பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் அர்ச்சிகனுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
I am proud and happy to learn that Archchihan, son of Vijendra Kumar and Menaka, who migrated from Tamil Eelam and are living in Tamil Nadu, has won 5th place in the Gerard K. O’Neill Space Settlement Contest conducted by the U.S. space agency, the National Space Society (NSS), at the international level.
I express my love and appreciation to Archchihan, who has seized the smallest opportunity to showcase his brilliance and made not only the Tamil race stand tall but also made Sri Lanka that treated Tamils has slaves with his untiring efforts and extraordinary skills, bearing the brunt of the decades-long war, having suffered genocide perpetrated by Sri Lanka and losing the land, loved ones, and possessions, and living in Tamil Nadu with his parents, far away from the Tamil Eelam motherland.
My heartiest congratulations to Archchihan, who has proved that anything can be achieved under any hardship with hard work and untiring self-motivation and has set an example for the Tamils living in exile.
naamtamilar.org/anel8t


தமிழ்

மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்!
naamtamilar.org/676w
@CMOTamilnadu @mkstalin


தமிழ்

Thank You, Congressman Bill Johnson for Reintroducing Resolution Calling for Referendum!
I would like to thank you for partnering with Congresswoman Deborah Ross in reintroducing the resolution that aims to get justice for Tamils who continue to be oppressed even after 14 years since the end of the decades-long Sri Lankan war. I thank you for pointing out in the resolution that accountability for grave human rights violations can only be promoted by referring Sri Lanka to the International Criminal Court and providing justice to the victims.
I strongly believe that a permanent political solution is the key for the Tamils in Sri Lanka to have a better future. The democratic system of conducting a referendum in Tamil Eelam, the traditional homeland of the Tamils, holds their "real" freedom. Once again, I would like you to extend continued support to the Tamils demand for justice and accountability.
@RepBillJohnson

English

Thank You, Congresswoman Deborah Ross for Reintroducing Resolution Calling for Referendum!
I would like to express my deepest gratitude to you for reintroducing the resolution that aims to get justice for Tamils who continue to be oppressed even after 14 years since end of conflict in Sri Lanka. I appreciate you emphasizing in the resolution that accountability for serious human rights crimes can only be fostered by referring Sri Lanka to the International Criminal Court and bringing justice to the victims.
I am certain that a permanent political solution is essential for the Tamils of Sri Lanka to have a better future. The democratic mechanism of holding a referendum in Tamil Eelam, the Tamils' traditional homeland, ensures their "real" freedom. I would like to thank you for your continuous support for the Tamils’ demand for justice and accountability.
@RepDeborahRoss

English

பாலியல் அத்துமீறலுக்கு நீதிகேட்டு அறவழியில் போராடிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது அரசப்பயங்கரவாதத்தை ஏவுவதா?
naamtamilar.org/Ws83bx

தமிழ்

மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் அன்புமகள் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடிப்படை வசதிகள் ஏதுமற்று, குறைந்தபட்ச கற்கும் வாய்ப்புகள் கூடக் கிடைக்கப்பெறாத, தமிழ்நாட்டின் வதை முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். அந்த வகையில் தனிப்பட்ட முறையில் தாங்கள் செய்த பேருதவி ஒரு குழந்தையின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த போதிலும், அதனை தமிழ்நாடு அரசே முன்னெடுக்கும்போதுதான் நம்மையே நம்பி வந்துள்ள ஈழச்சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.
ஆகவே, மாண்புமிகு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுச்சென்று, ஈழத்தமிழர் முகாம்களில் வசிக்கும் அனைத்து குழந்தைகளின் உயர்கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@ptrmadurai

தமிழ்

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!
விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!
இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்தும் பெருமகன்!
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர்!
பேரன்பிற்கினிய மூத்தவர், சட்டத்தரணி
தடா நா.சந்திரசேகரன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்!

தமிழ்






