TVK Fact Check

62 posts

TVK Fact Check banner
TVK Fact Check

TVK Fact Check

@TVKFact_check

தவெக மீதான அவதூறுகளை ஆதாரத்துடன் அடித்துடைக்கும் அறத்தின் பக்கம்.

Katılım Mayıs 2025
2 Takip Edilen5.5K Takipçiler
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
இது முற்றிலும் பொய்யான செய்தி,யாரும் நம்ப வேண்டாம் ! #tvkfactcheck #TVKVijay
TVK Fact Check tweet media
தமிழ்
4
208
580
18.1K
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
கடந்த 14.08.2025 அன்று அறவழிப் போராட்டம் நடத்திய சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தது. அப்போது நமது கழகத் தோழர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததை தவறாக சித்தரித்து, பொய்யான தகவல்களை பரப்பும் திமுகவினர்.
TVK Fact Check tweet media
தமிழ்
7
174
269
10K
TN Fact Check
TN Fact Check@tn_factcheck·
நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்! தவறான தகவல் 1 : “மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மை : தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90‌ சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது. நாகப்பட்டினம் ‌ மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன. தவறான தகவல் 2 : கடல்சார் கல்லூரி ஏது ம் நாகப்பட்டினத்தில் இல்லை. உண்மை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது. தவறான தகவல் 3 : மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா? உண்மை : சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது. தவறான தகவல்களைப் பரப்பாதீர்! ஆதாரம்: timesofindia.indiatimes.com/city/chennai/t… cms.tn.gov.in/cms_migrated/d… tnjfu.ac.in dinamalar.com/news/tamil-nad… @CMOTamilnadu @TNDIPRNEWS
தமிழ்
284
758
1.4K
366.1K
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
பொய்களை பரப்பும் ஊடகங்கள் மற்றும் இதழ்களை யாரும் நம்ப வேண்டாம் ! @BussyAnand #tvkfactcheck #TVKVijay #TVKForTN
TVK Fact Check tweet media
தமிழ்
1
173
292
6.7K
TVK Fact Check retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
TVK Vijay tweet mediaTVK Vijay tweet media
ZXX
851
5.4K
12.9K
840.1K
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
திமுக ஊடகங்களின் இந்த வார உருட்டு, YouTube சேனலை சார்ந்த நபரை தவெகவிற்கு சர்வே செய்யும் நபராக புனைந்து, புதிய பொய்யை பரப்பி வருகின்றனர். #tvkfactcheck #factcheck #tvkvijay #TVKForTN #TVKForTN2026 #dmk #dmknews
TVK Fact Check tweet media
தமிழ்
4
447
662
18.3K
TVK Fact Check retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தலைவர் அவர்கள் உத்தரவின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நாளை (15.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும் திருவுருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
49
2K
4.9K
93.6K
TVK Fact Check retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா? மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்.
தமிழ்
490
5.7K
13.8K
689.9K
TVK Fact Check retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவெடுத்தும் அதற்கு ஒரு வருடமாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
438
4.9K
13.5K
697.2K
TVK Fact Check retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
TVK Party HQ tweet media
ZXX
53
1.6K
3.9K
87.8K
TVK Fact Check retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: (1/3)
TVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet mediaTVK Party HQ tweet media
தமிழ்
22
1.5K
2.8K
54K
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
தமிழகமே தலைவரின் வெற்றித் தீர்மானங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வேளையில், இதை விரும்பாத திமுக அனுதாபிகள், இத்தகைய பொய்களைப் பரப்பி வருகின்றனர். யாரும் நம்ப வேண்டாம்! #tvkfactcheck #tvkvijay #tvkmeeting #tvkfortn #ThalapathyVIJAY #Tvkfor2026
TVK Fact Check tweet media
தமிழ்
3
327
614
18.4K
TVK Fact Check retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
மாண்புமிகு @CMOTamilnadu திரு. @mkstalin அவர்களுக்கு...
TVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet mediaTVK Vijay tweet media
தமிழ்
533
6.4K
15.4K
1.1M
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
Phone-யில் பேசாமல் களத்தில் மக்களுடன் தலைவர் விஜய்! #என்றும்_மக்களுடன்_விஜய் #TVKforPeople #ThalapathyVijayForPoeple #TVKVijay
தமிழ்
0
39
71
1.4K
TVK Fact Check
TVK Fact Check@TVKFact_check·
திருப்புவனம் அஜித்குமார் இல்லத்தில் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்! #என்றும்_மக்களுடன்_விஜய் #TVKforPeople #ThalapathyVijayForPoeple #TVKVijay
தமிழ்
1
76
164
2.5K
TVK Fact Check retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்! அஜித்குமார் காவல் மரண வழக்கில் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. எந்த அளவிற்குக் கொடூரமாக, மனிதாபிமானம் அறவே அற்று, சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக, தமிழக உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் காவல் துறை நடந்துகொள்கிறது என்பதை இந்தச் சம்பவம், வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றது. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் அழுத்தத்திற்குப் பிறகும், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தலையீட்டிற்குப் பிறகும் தான் காவல் துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியது என்பதை நாடறியும். இந்த ஆட்சியின் போது நடந்த பல்வேறு காவல் மரண வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, அவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை இந்த அரசு பெற்றுத் தந்துள்ளதா? கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும். அஜித்குமார் காவல் மரண வழக்கில் காவல் துறையினரே கொலைக் குற்றவாளிகள் என்பதால், இதனைத் தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால், விசாரணை நியாயமாக நடைபெறாது. எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, விரைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது போலவே இந்த வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து, விரைந்து விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும். இத்தகைய கொடூர சம்பவம் இனி ஒருபோதும் நடைபெறாது என்று உள்துறை அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உறுதியும் உத்திரவாதமும் அளிக்க வேண்டும். இல்லையேல் பாமர மக்களை வதைக்கும் அதிகார துஷ்பிரயோக மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையிலான இந்த அராஜக அரசுக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வரலாற்றில் திமுக நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வியை மக்கள் பரிசாக அளிப்பார்கள் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
941
8K
19.8K
1.3M