Ajith
5.4K posts

Ajith
@iamarulajith
Father|Husband|Son|Electronics Engineer|Car enthusiast|IT Architect|Tweets are personal| F1|MotoGP|கலைஞர்| தமிழ் வெல்லும்🖤❤️





தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனி மெஜாரிட்டி கிடைக்காதது ஒரு பின்னடைவு எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால், அரசு அமைப்பதில் விஜய்க்கு சட்டரீதியாக எந்தச் சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. சட்டமன்றத்தில் ஒரு கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தனிப்பெரும் கட்சியாக (Single Largest Party) உருவெடுத்திருக்கும் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. அந்த அடிப்படையில், விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் விஜய் அரசுக்கு ஏற்படக்கூடிய ஒரே சவாலாக 'நம்பிக்கையில்லாத் தீர்மானம்' மட்டுமே. அதை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைந்து இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால், பாரம்பரிய அரசியல் எதிரிகளாக இருக்கும் இவர்கள் இருவரும் கைகோர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஒருவேளை தி.மு.க மற்றும் அ.தி.மு.க கைகோர்த்தாலும், மாற்றுத் தலைவராக யாரை முன்னிறுத்துவார்கள் என்ற கேள்வி எழும். மேலும், இத்தகைய அரசியல் நகர்வுகள் மக்கள் மத்தியில் விஜய் அவர்களுக்கு மிகப்பெரிய அனுதாப அலையையே உருவாக்கும். எனவே, எவ்வித இடையூறுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விஜய் அவர்கள் முதலமைச்சராகத் தொடர்வார்!


தேர்தல் முடிவ ஏமாற்றத்தை தருகிறது.. ஆனா இதுதான் மக்கள் முடிவு என்றால் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். எதிர்கட்சியாக மறுபடியும் திமுக தீவிரமாக பணியாற்றிடவே போகுது, அது மாறப்போவதில்லை.. தவெகவினர் இனி ஆளும் கட்சியாக எப்படி செயல்படுகின்றனர் என பார்க்கலாம்.












