Charan Kumar

4.8K posts

Charan Kumar banner
Charan Kumar

Charan Kumar

@icharan14

Cinephile 🎥, Chartered Accountant, Aspiring to grow in life...

Dubai, United Arab Emirates Katılım Şubat 2021
364 Takip Edilen174 Takipçiler
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது. நாட்டையே அதிரச் செய்த இந்த அநீதிக்கு எதிராக, விடாமல் போராடிய ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தார், சாத்தான்குளம் ஊர்ப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபித்த சிபிஐ விசாரணை அதிகாரிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தனிப்பட்ட முறையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன். கொடுங்குற்றம் இழைத்தவர்கள் எவ்வித சலுகையுமின்றி ஆயுட்காலம் உள்ளவரை கடும் உழைப்புடன் சிறை வைக்கப்பட வேண்டுமென்பதே என் நிலைப்பாடு. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரின் குடும்பங்களை எண்ணிப்பார்க்கிறேன். மனிதத்தன்மையற்ற காரியத்தில் ஈடுபட்டு, ஒரு பாவமும் அறியாத தங்களது குடும்பத்தாருக்கு எவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கிறார்கள்? போலீஸாரின் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்தவர்களைப் பார்க்காமலே சான்றிதழ் அளித்த மருத்துவர், ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டவர், உண்மைகளை மறைக்க முயன்ற அதிகாரிகள், இருவரும் மூச்சுத் திணறலால் இறந்தார்களென மனசாட்சி இல்லாமல் பேசிய ஆட்சியாளர்கள் ஆகியோருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறோம், நம்மை யார் என்ன செய்துவிட முடியும் எனும் துணிச்சலில் குற்றமிழைப்பவர்கள் எவராயினும், அவர் எத்தகைய செல்வாக்கு படைத்தவரெனினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
தமிழ்
319
896
2.9K
322.2K
Charan Kumar retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவேண்டும்! 'வெல்வோம் ஒன்றாக' எனும் முழக்கம் முழுமையுற வேண்டும்! மாண்புமிகு முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்! ------------------ திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அடுத்து எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. இதுவும் மிக இலகுவாக விரைவாக நடந்தேறும். இந்நிலையில், திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் கூட்டணியை ஆதரிக்கும் நிலை எடுத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. அக்கட்சியின் தலைவர் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்ற ஒரு மகத்தான திரைக் கலைஞர். நான்கு சதவீத அளவலான வாக்கு வங்கியைக் கொண்ட ஒரு அசியல் தலைவர். அவர் நம்மோடு மனமுவந்து களத்தில் நிற்பது தான் நமது கூட்டணிக்கு நலம் பயக்கும். மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டுள்ள இத்த நிலைப்பாடு குறித்தும் கூட்டணியில் நடந்தேறிய பேச்சுவார்த்தைகள் குறித்தும் விடுதலைச் சிறுத்தைகளின் கருத்துகளைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களது மேலான பார்வைக்கு வெளிப்படையாக முன்வைப்பது எமது சனநாயகப் பொறுப்பு எனக் கருதுகிறோம். கருத்தியல் அடிப்படையிலும், கொள்கை பகைவர்களை வீழ்த்தி வெல்வதற்கான உத்திகளின் அடிப்படையிலும், தொலைநோக்குப் பார்வையோடு ஓரணியில் திரண்டு 'மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி'யாக நாம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். 2017 ஆம் ஆண்டிலிருந்து நாம் ஒருமித்த கருத்தோடு இதுநாள் வரையில் ஒற்றுமையாக கைகோர்த்துக் களமாடிவருகிறோம். தேர்தலுக்குத் தேர்தல் வாக்குகளுக்காக மட்டுமே கூடிக் கலையாமல், மக்கள் நலன்களை முன்னிறுத்தி மாநில அளவிலும் இந்திய அளவிலும் வாதாடுகிற போராடுகிற ஒரு 'கூட்டியக்கமாகவே' தொடர்ந்து தொய்வின்றி இயங்கிவருகிறோம். நம்மிடையே அவ்வப்போது கருத்து முரண்கள் எழுந்தாலும் அவற்றின் அடிப்படையில் சிறுசிறு உரசல்கள் நிகழ்ந்தாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக கூட்டணியின் கட்டுக்கோப்பில் ஒரு மெல்லிய கீறலோ, சிறிய சிராய்ப்போ ஏற்படாமல் மிகுந்த நல்லிணக்கத்தோடு ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக இருந்து செயலாற்றி வருகிறோம். இதற்கு தங்களின் சகோதரத்துவமான - நல்லிணக்கமான அணுகுமுறையே அடிப்படை காரணமாகும். கடந்த சில ஆண்டுகளாக மேலும் சில கட்சிகளும் சமூக அமைப்புகளும் இக்கூட்டியக்கத்தில் இணைந்து நம்மோடு களமாடி வருகின்றன. இக்கூட்டியக்கத்தில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஒரு பேரியக்கமாகப் பரிணமித்துள்ளது. இது இந்திய அரசியல் களத்தில் ஒரு புதுமையே ஆகும். இப்படி ஒரு 'மெகா கூட்டணி' இந்தியாவில் வேறெங்கும் இல்லை எனலாம். தங்களின் ஆற்றல் வாய்ந்த தலைமைத்துவத்துக்கே இப்பெருமை உரித்தாகும். இந்தக் கூட்டியக்கத்தின் அல்லது கூட்டணியின் முதன்மையான நோக்கம் 'தேர்தல் மட்டுமே அல்ல' என்பதைக் கடந்தகால நமது செயற்பாடுகள் உணர்த்தும். சமூகநீதி என்னும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தும் களம்பல அமைத்து வலதுசாரி பிற்போக்கு சக்திகளை எதிர்த்து அவரவர் வலிமைக்கேற்ப தனித்தும் தேவையான சூழல்களில் கூட்டியக்கமாக இணைந்தும் செயல்பட்டிருக்கிறோம். அதேபோல அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஏராளமான வெற்றிகளை ஈட்டிச் சாதித்திருக்கிறோம். 2019, 2021, 2024 என நாடாளுமன்ற-சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளைக் குவித்திருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அவரவர் வலிமைக்கேற்ப அவரவரின் பங்களிப்பு கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒரு கட்சியின் வலிமை என்பது அக்கட்சியின் வாக்குவங்கியை மட்டுமே குறிப்பதாகாது. அது மிகவும் குறிப்பான ஒரு அளவுகோல்தான். ஆனாலும், வாக்கு வங்கி வலிமை மட்டுமின்றி, ஒரு கட்சியின் கருத்தியல் வலிமை, அக்கட்சி மீதான மக்களின் நன்மதிப்பு மற்றும் அக்கட்சியின் தலைமை மீதான நன்மதிப்பு போன்றவையும் அக்கட்சிக்குரிய வலிமைக்கான அளவுகோல்கள் ஆகும். அதாவது, "வாக்குவங்கி வலிமை, கட்சிக்குரிய நன்மதிப்பு, கட்சியின் தலைமைக்குரிய நன்மதிப்பு, கருத்தியல் வலிமை மற்றும் கட்சியின் பொருளாதார வலிமை" போன்ற யாவும் ஒருகட்சியின் வலிமைக்கான அளவீடுகளாக இருக்கும். (1/2)
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
604
2.2K
358.6K
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
செம்மஞ்சள் பிழம்பு எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார். இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார். முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது. நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள். நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள். பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது. ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு. அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது. கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும். அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான். ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது. 'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.' (விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்) அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது.. நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா.
TIMES NOW@TimesNow

BREAKING || Reports: Iran Targets US-UK Base in Indian Ocean Iran fires missiles towards Diego Garcia: Reports No impact on Diego Garcia after strike: Reports - Ballistic missiles fire at the US-UK base @srinjoyc1 & @aakaaanksha with more details.

தமிழ்
451
877
2.6K
584K
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
தமிழ்
150
777
4.2K
124.7K
Charan Kumar
Charan Kumar@icharan14·
@DrDineshCFP Automatic monthly calculation of accrual n amortization from available POs n prepaids
English
0
0
0
545
Dr. Dinesh | Investment Planning Specialist
AI வச்சு எதாவது automate பண்ணணும்னு மனசுல இருக்கா? Productivity-ஆ இருந்தாலும் சரி, finance-ஆ இருந்தாலும் சரி எந்த idea-வா இருந்தாலும் comments-ல போடுங்க. நாமளே கூட discuss பண்ணலாம் அந்த idea-வ நிஜம் ஆக்க முடியுதான்னு கூட பாக்கலாம்
தமிழ்
36
17
313
180.7K
Charan Kumar retweetledi
SmartBarani
SmartBarani@SmartBarani·
#ThaaiKizhavi Deleted scene 😭 Dont miss the end 😝
English
26
1.3K
6K
236.8K
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
“சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா? நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது… இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்” சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை.
தமிழ்
1.4K
1.9K
8.5K
1M
Charan Kumar retweetledi
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚
நம்ம மக்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் - வெள்ளக்காரன நம்ம ஆளுங்க கேள்வி கேட்டா உடனே 'நண்பன்' மனோபாலா மீம் போட்டு தாழ்வு மனப்பான்மைய காட்டுவாங்க. #KamalHaasan ட்ரம்புக்கு போட்ட டிவீட் ஏன், எதுக்குன்னு இங்க தெளிவா விளக்கிருக்கானுங்க. பாத்து படிங்க தம்பிஸ்.
தமிழ்
8
140
303
11.8K
Charan Kumar retweetledi
Dr. Westley
Dr. Westley@Weslypvl·
இன்று இந்தியா முழுவதும் மகளிர் உதவி தொகை பல வடிவங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு விதை போட்டது உலகநாயகன் "கமல்".
தமிழ்
4
91
240
3K
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது. மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை உருவாக்குவோம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம். பகிர்வோம், உயர்வோம். #GiveToGain #IWD2026 #WomensDay2026
தமிழ்
105
482
1.8K
99.5K
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
To The President of the United States of America @POTUS Dear Mr. President, We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores. Please mind your own business to the best of your abilities. Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace. We wish your country and its people peace and prosperity. Kamal Haasan - A Proud Indian Citizen Founder, Makkal Needhi Maiam
English
3.3K
8.9K
47.5K
4M
Charan Kumar retweetledi
Charan Kumar retweetledi
Sandhithome_Kanakalil
Sandhithome_Kanakalil@saravana_17·
Well, this is how I flirt but you're not nerdy enough to understand that😔
English
7
52
383
22.7K
Charan Kumar retweetledi
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
ஒரு சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால், முதலில் பெண்களின் வாழ்வில் ஏற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இதைத் தமிழ்நாடு புரிந்துகொண்டது, அதன் வழியே செயல்படுகிறது என்பதன் அடையாளமாக எத்தனையெத்தனை திட்டங்கள்! புதுமைப் பெண் திட்டம் — நாளைய எதிர்காலத்துக்கான விதை விடியல் பயணம் — ஒளியாய் நகரும் நம்பிக்கை நடை மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் எழுச்சியில் மாநிலத்தின் உயர்வு இவை வெறும் ஏட்டுத் திட்டங்களல்ல… மாற்றத்துக்கான நாற்றங்கால்கள். இவை அத்தனையையும் செய்து காட்டியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், என் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய நண்பர் திரு. @mkstalin அவர்கள். அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். @CMOTamilnadu
Kamal Haasan tweet media
தமிழ்
401
1.4K
6.8K
307.3K
Charan Kumar retweetledi
Ravi
Ravi@tamilravi·
India needs English more than Hindi.
English
189
129
1.1K
27.3K
Charan Kumar retweetledi
TVK Party HQ
TVK Party HQ@TVKPartyHQ·
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு: தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. ​பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்
தமிழ்
496
1.3K
4.1K
542.4K