sathyanarayanan.s. retweetledi

Murali Seetharaman பதிவு..
"நமஸ்தே ஸதா வத்சலே மாத்ரு பூமே!"- RSS ஷாகாவில் பாடலாம்.
அதுதான் நியதியும் கூட.
புனிதமான தாய்மண்ணை போற்றி வணங்கும் பாடல் அது!
ஒவ்வொரு தேசிய தெய்வீக அபிமானியும் நெஞ்சில் ஏந்தி உணர்வுபூர்வமாக முழங்கும் பாடல் அது!
"நமஸ்தே ஸதா வத்சலே மாத்ருபூமே...!"- நெஞ்சில் தேசபக்தக் கனலை மூட்டும் கீதம் அப்பாடல்!
ஆனால் வெகுஜன அரசியல் - என்ற பொது வெளியில் வரும்போது - அரசியல் இயக்கத்துக்கு -"தாய் மண்ணே வணக்கம்!"- என்று பாடினால்தான் சாதாரண மக்களுக்குப் புரியும்.
அண்ணாமலை சொல்வதன் சாராம்சம் இதுதான்!
தமிழைப் புறக்கணித்து விட்டு இங்கே எந்த தேசிய இயக்கமும் காலூன்ற முடியாது.
இல்லை நாங்கள் இப்படியேதான் பேசிக் கொண்டே இருப்போம் - "ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா"- "க்ருஷி பீமா யோஜனா"- "உடே தேஷ் கா ஆம் நாகரிக் (UDAN) திட்டம்...
இப்படியேதான் பேசிக் கொண்டிருப்போம் என்றால் தாராளமாகப் பேசிக் கொண்டிருங்கள் - இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது உங்களால்.
நீங்கள் ப்ரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா - என்று முக்கி முனகிக் கொண்டு விளக்குவதற்குள் - திமுக காரன் - அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி - "கலைஞர் கனவு இல்லம்"- என்று மக்களுக்குப் புரிவது மாதிரி சொல்லிப் பெயரைத் தட்டிக் கொண்டு போய்க்கொண்டே இருப்பான்.
தமிழ்





























