Data Engineering company for training and jobs@ChatGPTJob
இந்த கண்ணாடி காரன் பெயர் இளங்கோவன், இவனைப் பார்த்தால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பஞ்சு மிட்டாய் விக்ரவன் போல டம்மி பீஸ் ஆக இருக்கிறான் என்று நினைத்து விடாதீர்கள்.
சபரீசன் நடத்தும் “PEN இந்தியா” என்ற தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனத்தில் தலைமை மீடியா ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் வரை தமிழ்நாட்டில் ஊடகங்கள் என்ன செய்தி போட வேண்டும், எப்படி கருத்துக்கணிப்புகள் வெளியிட வேண்டும், எப்படி செய்தி போட வேண்டும், எத்தனை மணிக்கு போட வேண்டும், எந்த செய்தியை போடக் கூடாது, எது ப்ரேக்கிங் நியூஸ், டிக்கரில் என்ன ஓட வேண்டும் என்பதைக் குறித்த முடிவுகளை எடுப்பவர் இவர்தான்.
தமிழ்நாட்டில் உள்ள பல செய்தி சேனல்களுக்கு எடிட்டர் இன் சீப் போல செயல்படுகிறார். இவருடைய சம்மதம் இல்லாமல் எந்த சேனலும் கருத்துக்கணிப்புகள் வெளியிட முடியாது. திமுக தோற்கும் வகையில் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டால் அந்த சேனல்களுக்கு உடனடியாக அழுத்தம் வரும்.
ஏதாவது ஒரு செய்தி சேனல் திமுகக்கு சங்கடம் ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டால் முதலில் இளங்கோவன் பேசுவார். அவர் சொன்னதை சேனல் கேட்கவில்லை என்றால் தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறை அதிகாரி பேசுவார். அதற்குப் பிறகும் கேட்கவில்லை என்றால் நேராக முதல்வர் அலுவலகத்தில் இருந்து போன் வரும்.
ஊடகங்களில் பணியாற்றுபவர்களில் செய்தியாளர் முதல் நிறுவன உரிமையாளர் வரை பலர் இந்த “PEN” நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்குகிறார்கள். தொலைக்காட்சி ஊடகங்களையும், அவற்றுடன் இணைந்த யூடியூப் சேனல்களையும் கட்டுக்குள் வைத்திருக்க மாதம் தோறும் சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள்.
இந்த பணத்தை வாங்கி இருப்பதால் பல ஊடகங்கள் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. யாராவது எதிராக நடந்தால் அந்த மீடியாவை வரிசையில் பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் அல்லது நேராக மிரட்டுவார்கள்.
இதற்குப் பிறகும் ஒரு பெரிய வலையமைப்பு இருக்கிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து மாதம் பணம் வாங்கி செயல்படும் யூடியூப் சேனல்கள் மட்டும் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன. அந்த சேனல்களில் எந்த மாதிரி செய்தி போட வேண்டும், எந்த தலைப்பில் வீடியோ போட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் இளங்கோவன் கொடுத்து விடுகிறார்.
ஆனால் சன் நியூஸ், கலைஞர் டிவி, நக்கீரன், தினகரன் போன்ற ஊடகங்களுக்கு இளங்கோவன் தனியாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவை அவர்களுடைய சொந்த மீடியா என்பதால் அவர்கள் விரும்பும் செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன.
இந்த முழு பின்னணியையும் மக்கள் புரிந்து கொண்டு தான் பத்திரிகைகள் வெளியிடும் கருத்துக்கணிப்புகளையும், தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளையும் ப்ரேக்கிங் நியூஸ்களையும் பார்க்க வேண்டும். இல்லையென்றால் திரையில் தெரியும் செய்தி ஒரு பக்கம், அதன் பின்னால் இயங்கும் அரசியல் இன்னொரு பக்கம் என்பதைக் கவனிக்காமல் விடக்கூடாது. :சவுக்கு சங்கர், ஓய்வு பெற்ற மூத்த பத்திரிக்கையாளர்..