
புனித வெள்ளி என்றாலே எனக்கு டோனால்ட் டிரம்ப்தான் நினைவுக்கு வருகிறார். காரணம், 2020ல் புனித வெள்ளி அன்று 'Happy Good Friday' என்று டிவிட்டரில் பதிவிட்டார்.
'அதில் என்ன தப்பு?' என்று நினைப்பவர்களுக்கு அப்போது நான் எழுதிய விளக்கத்தை மீள்பதிவிடுகிறேன்.
=========
Good Fridayவுக்கு யாருக்கும் வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள். ஏனெனில் இது பிரியாணி செய்து கொண்டாடும் பண்டிகை கிடையாது. இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். தங்களின் பாவங்களுக்காக கர்த்தர் சித்ரவதைப்பட்டு சிலுவையில் மரித்த நாளை கிறித்துவர்கள் உலகெங்கும் சோக நிகழ்வாகவே அனுசரிக்கிறார்கள். அன்றைக்கு பிரார்த்தனைகள், தியானம், உபவாசம் என்றுதான் கழிப்பார்கள். It's a day of solemn reflection.
எனவே, இந்த தினத்தில் வாழ்த்து சொல்வது மோசமான விஷயம். It's in poor taste.
ஞாயிற்றுக் கிழமைதான் இயேசு உயிர்த்தெழுகிறார் என்பதால் உண்மையான கொண்டாட்ட தினம் அன்றுதான். ஞாயிறு அன்று 'Happy Easter' என்று வாழ்த்து பகிர்வார்கள். விருந்துகளுடன் கொண்டாடுவார்கள்.
2016 தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் செய்த முழக்கங்களில் ஒன்று கிறித்துவ மதத்தை அமெரிக்காவில் மீட்டு நிறுத்துகிறேன் என்பதுதான். அவருக்குத் தொடர்ந்து அதிக வாக்குகள் கிடைப்பதும் 'பைபிள் பெல்ட்' என்று அழைக்கப்படும் தீவிர கிறித்துவர்கள் வாழும் மாகாணங்களில்தான். அந்த ரேஞ்சுக்கு கிறித்துவத்தை போற்றுவதாக பீற்றிக் கொள்ளும் தலைவருக்கு இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியவில்லை என்பதுதான் இங்கே மேட்டர்.
(11 ஏப்ரல் 2020)
=========
எனவே டிரம்ப் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய புனித வெள்ளி நல் வாழ்த்துகள்.
Happy Good Friday to all the fans and followers of Donald Trump.
தமிழ்









