Sabitlenmiş Tweet

அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களாக (நவீன கொத்தடிமைகள்) பணியாற்றிய எங்களை கடந்த 31 டிசம்பர் 2025 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்றும், பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய எங்களை பணி நிரந்தரம் செய்யவும் உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும் அதை சிறிதும் மதிக்காமல் ஒரு தன்னாட்சி நிறுவனம் போல் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார் என்றும் அவர்களிடம் இதற்கான விளக்கம் கேட்க வேண்டும் என்றும் போராடிய எங்களை காவல்துறை மூலம் நேற்று (26.02.2026) இரவு 9:30 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற்றியது. எங்களை பணியில் இருந்து நீக்க யாருக்கு அதிகாரம் அவர்களிடம் நாங்கள் விளக்கம் கேட்க வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் தவறாகும். ஆனால் நிர்வாகம் யாரை கேட்டாலும் எங்களுக்கு இது தெரியாது மேலிடத்து உத்தரவு என்று தட்டிக் கழிக்கின்றனர். எங்களது 15 ஆண்டு கால இளமைக்காலத்தை உறிந்து விட்டு தற்போது தேவையில்லாத காகிதம் போல் தூக்கி எறிந்து விட்டது இந்த அண்ணா பல்கலைக்கழகம். இது எங்கள் 15 ஆண்டுகால உழைப்பு அவ்வளவு சீக்கிரம் இதை நாங்கள் விட்டு விட மாட்டோம். நாங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு போராடத் தெரியாது, மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது, போலியாக நடிக்க தெரியாது.... ஆனாலும் நாங்கள் போராடுவோம்.....
எல்லா வழிகளும் முடக்கப்பட்ட போது, நீதிமன்றமே எங்களின் கடைசி நம்பிக்கை.
நீதியில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன், எங்கள் போராட்டம் தொடரும்.
எங்களின் கடைசி நம்பிக்கை — நீதிமன்றம் மட்டுமே.
#நீதி #போராட்டம் #நம்பிக்கை #JusticeForTeachingFellows #AnnaUniversity
@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @astrokiru @thirumaofficial @tncpim @cpimspeak @ThanthiTV @TThenarasu @aloor_ShaNavas @TVKVijayHQ @SeemanOfficial @EPSTamilNadu @Senthilvel79 @U2Brutus_off @Saattaidurai @grok



தமிழ்
































