Sabitlenmiş Tweet
வன்னியின் மைந்தன்
34.9K posts

வன்னியின் மைந்தன்
@vanni8
உன் வலி உன்னை சார்ந்தவர்களுக்கு புரியும் ஆனால் உன் வலியை உன்னைத் தவிர வேறு யாராலும் உணர முடியாது #JusticeForTamilGenocide
வன்னி Katılım Kasım 2022
2.7K Takip Edilen2.6K Takipçiler

கடந்த சில மாதங்களாக சிங்கள இணையத் தள பக்கங்களில் எங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என அவதானித்தேன் அதிலே பல காணொளிகளை நான் ஆற அமர இருந்து கேட்டேன் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று வரிக்கு வரி ஆராய்ந்து பார்த்தேன் அதிலே நான் பார்த்த ஒரு முக்கியமான விடயத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசலாம் என்று நினைக்கிறேன்
சிங்கள மாணவர்களுக்கான Online வகுப்புகளில் சிங்கள ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு வெறுமனே பாடத்தை படிப்பிக்காமல் "அரசியல்" பேசுகிறார்கள்
சரி அதில் என்ன பிரச்சனை என்று கேட்பியள்
ஒரு A/L படிப்பிக்கிற சிங்கள ஆசிரியர் (சுமார் 35 வயது இருக்கும்) தன்னுடைய பாடத்தை நிறுத்தி விட்டு சுமார் 500 பேர் உள்ள வகுப்பில் "அரசியல்" பேசுகிறான் அவன் பேசும் அரசியல் உண்மையானது என்றால் பிரச்சனை இல்லை ஆனால் ஒரு நாகத்தை விட அதிகமாக இனத்துவேச நஞ்சை கக்குகிறான்
👉LTTE எங்கள் இனத்தை படுகொலை செய்தார்கள்
👉LTTE பயங்கரவாதிகள் சிங்கள பெண்களை வெட்டிக் கொன்றார்கள்
👉கர்ப்பணிப் பெண்களின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து கொன்றார்கள்
👉LTTE பயங்கரவாதிகள் எங்களின் பல பன்சலைகளுக்கு (புத்த கோயில்களுக்கு) குண்டு வைத்து அழித்தார்கள்
👉LTTE பயங்காரவாதிகள் எங்களின் புத்த பிக்குகளை சுட்டுக் கொன்றார்கள்
இப்படியே அடுக்கிக் கொண்டே போகிறான்
முக்கியமாக மிகவும் "உணர்ச்சியோடு" மிகத்தெளிவாக சிங்களத்தில் தன்னுடைய மாணவர்களின் அடிமனதில் படியும் படியாக பேசுகிறான்
இன்னொரு சிங்கள ஆசிரியர் பாடத்தை இடையில் நிறுத்தி விட்டு "தமிழீழ வரைபடத்தை கீறி" எப்படி இறுதி யுத்தம் நிகழ்ந்தது என்றும் எப்படி மும்முனைகளில் இருந்து இராணுவம் முன்னேறி கிளிநொச்சியை பிடித்து LTTE பயங்கரவாதிகளை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி வீரத்தோடு அத்தனை LTTE பயங்கரவாதிகளையும் கொன்றோம் என விவரிக்கிறான்
இன்னொருத்தன் 1948 இல் இருந்து 2009 மே 18 வரை சிங்களவர்கள் இந்த நாட்டை எப்படி தமிழர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள் என்று விவரிக்கிறான்
இது எல்லாவற்றுக்கும் மேலாக
தன்னை NPP கட்சிக்காறனாக அடையாளப் படுத்தும் ஒரு சிங்கள ஆசிரியர்
👉என்ன தான் அரசியல் கருத்து முரண்பாடுகள் மகிந்த ராஜபக்சே மீது இருந்தாலும் அவர் தான் LTTE பயங்கரவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்றினார் கொடிய யுத்தத்தை தைரியமாக முடிவுக்கு கொண்டு வந்தார் முழு LTTE பயங்கரவாதிகளையும் கொன்று புதைத்தார் என்கிறான்
அது மட்டுமல்ல
👉மகிந்த ராஜபக்சே மிகவும் கௌரவத்தோடும் மாண்போடும் நடத்தப்பட வேண்டும் அவர் ஒரு யுத்த வீரர் அவரை நாம் போற்றுவோம் என்றும் புகழ்ந்து பாடுகிறான்
இன்னொரு காணொளியில்
👉மகிந்த ராஜபக்சே கோத்தாபய சரத் பொன்சேகா மூவரும் இந்த நாட்டின் ஒப்பற்ற தலைவர்கள் அவர்கள் தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனங்களில் இராணுவ வீரர்களின் நெஞ்சத்திலும் சிறந்த தலைவர்களாக இப்போதும் இருக்கிறார்கள் என்றும்
👉மகிந்த ராஜபக்சே போலவே நாமல் ராஜபக்சேவும் மிகச்சிறந்த தலைவர் என்றும் தந்தையப் போல உறுதியான முடிவுகளை எடுக்கக்கூடிய துடிப்பான இளம் தலைவர் என்றும் மாணவர்களுக்கு போதிக்கிறார்கள்
அதை விட இன்னொரு Youtube Channel Facebook page Wanesa Tv
போய்ப்பாருங்கள்
👉யுத்தத்தில் பங்கு பற்றிய இராணுவ வீரர்களை சந்தித்து எப்படி யுத்தம் செய்தார்கள் என்று நேர்காணல் செய்து உணர்வுபூர்வமாக பதிவிடுகிறார்கள்
👉யுத்தத்தில் ஒரு அப்பாவி தமிழர்களைக்கூட கொல்லவில்லை என்பது போலவும் கொன்றது அனைத்தும் பயங்கரமான புலிப் பயங்கரவாதிகள் என்பது போலவும் அவர்கள் சொல்லும் கதைகளை நீங்கள் பார்ப்பீர்கள்
சரி விடயத்துக்கு வருவோம்
👉நம்மில் எத்தனை பேர் அடுத்த சந்ததிக்கு எம்மண்ணில் நிகழ்ந்த கொடுமைகளையும் இனப்படுகொலையையும் பற்றி எடுத்துச் செல்கிறோம்
👉2009 க்கு பிறகு பிறந்த பிள்ளைகள் எத்தனை பேருக்கு எம்மண்ணில் நிகழ்ந்த வீரம் செறிந்த விடுதலைப் போராட்டம் பற்றிய வரலாறு தெரியும்?
👉இந்தியன் ஆமி எங்கள் மண்ணில் நிகழ்த்திய படுகொலை சம்பவங்கள் பற்றி தெரியும்?
👉செம்மணி படுகொலை பற்றி தெரியும்?
👉எங்கட வாத்தி மார் எத்தனை பேர் எங்கள் வரலாறுகளை எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்?
வாக்கு அரசியலை தாண்டி
👉எத்தனை தமிழ்த் தேசிய அரசியல் வாதிகள் எங்கள் பிள்ளைகளுக்கு எம்மண்ணில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி விளங்கப்படுத்தி உண்மையான வரலாற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்?
மகிந்த இறந்த பிறகு அல்லது கோத்தா செத்த பிறகு "சிங்கள பேரினவாதம்" செத்து விடும் அடுத்த தலைமுறை சிங்களப் பிள்ளைகள் இனவாதம் இல்லாத சிறிலங்காவை கட்டியெழுப்புவார்கள் என்று கனவு காணாதீர்கள்
"சிங்கள பேரினவாதம்" என்ற ஆபத்தான சிந்தனை தெற்கில் அடுத்த தலைமுறைக்கு மிகத்திட்டமிட்ட வகையில் மண்டைக்குள் மிக நூதனமாக ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது



தமிழ்
வன்னியின் மைந்தன் retweetledi

பௌத்தம் இலங்கையை எப்படி ஆட்டி வைக்கிறது
இரத்தம் தோய்ந்த நிலையில் சிறுமியின் உள்ளாடை தேரரின் விந்து துடைக்கப்பட்ட துணிகள்
பல்லேகம ஹேமரத்ன தேரர் இச்சிறுமியை அடிக்கடி வரவழைத்து பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளார் அத்துடன் இந்த மோசடிக்கு அத்தாட்சியாக 88 தொலைபேசி அழைப்பு சான்றிதழ் உள்ளன ஆகவே தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் தேரருக்கு எதிராக இருக்கும் போது தேரரின் விகாரைக்கு சென்று சந்தேகத்துக்கு இடமான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என சிறுவர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி சஞ்சீவினி அபேகோன் பொலிசாரை குற்றம் சாட்டினார்
முதலாவது முறையாக சிறிமியை கற்பழிப்பு செய்த போது வெளியான இரத்தம் தோய்ந்த சிறுமியின் உள்ளாடை சாட்சியாக இருக்கிறது
அது மட்டுமல்ல தேரரிடம் இப்படியான இந்திரியம் (விந்து) துடைக்கப்பட்ட துணித் துண்டுகள் ஆதாரமாக கிடைத்துள்ளன இவற்றை நாங்கள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பியுள்ளோம்
இதுபோன்ற இன்னும் பல அத்தாட்சிகள் சிறுமி மீது தேரர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதற்கான அத்தாட்சிகள் காணப்படுகின்றன
ஆகவே தேவைக்கும் அதிகமான அத்தாட்சிகள் இருந்தும் பொலிஸார் தேரரின் விகாரைக்கு சென்று தேரருக்கு சாதகமாக வாக்குமூலம் பெற்று அவரை பிணையில் விடுதலை செய்யும் அநீதியான வேலையை செய்துள்ளனர் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது
பதினைந்து வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவரை அவரது தாயின் உதவியுடன் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதாக அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரர் (அடமஸ்தானாதிபதி) பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியே குறித்த தேரர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக சீண்டல் செய்த விடயத்தை வாக்குமூலமாக வழங்கியுள்ளார் எனினும் குறித்த விடயத்தை பொலிஸாரும் அதிகாரிகளும் அசிரத்தையாக கையாண்டு ஹேமரத்ன தேரரை கைது செய்யாமல் காலம் கடத்தியிருந்தனர் அதன் காரணமாக சி6:வில் சமூக அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பலை உருவாகத் தொடங்கியது அதனையடுத்து கடந்த 09 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஹேமரத்ன தேரர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்
எனினும் அதற்கு முன்னதாக அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தொடர்ந்தும் மருத்துவமனையில் சகல வசதிகளுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார் அதுகுறித்து எழுந்த கண்டனங்கள் காரணமாக கடந்த 13 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்
இந்நிலையில் நேற்றைய தினம் வரை விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கு நேற்று அநூரதபுரம் பிரதான மாஜிதிரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
இதன் போது ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணை என்பவற்றை சமர்ப்பித்து ஹேமரத்ன தேரரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது

தமிழ்
வன்னியின் மைந்தன் retweetledi

இவரின் கதையை கேட்டுப் பாருங்கள்
இவர் தன்னைப் போன்று தமிழர்களை ஏமாற்றும் போலி அரசியலை புலிகளும் சிங்களவனுக்கு விலை போவதனூடாக செய்திருக்க வேண்டுமென நினைக்கிறாரா?
சிங்களவன் உண்மையான இதய சுத்தியுடன் தமிழர்களுக்கு தீர்வு கொடுக்க விரும்பியதில்லை என்பது ஒட்டுக்குழுத் தலைவனுக்கு தெரியாமல் போனதெப்படி
1990 களிலிருந்து 2009 வரை ஆட்சிக்கு வந்த பிரேமதாச விஜயதுங்கா சந்திரிகா மகிந்த என அத்தனை சிங்கள ஆட்சியாளர்களுடனும் சேர்ந்து தமிழினப் படுகொலைகளையும் படு பாதகங்களையும் புரிந்தவர் தமிழர்களுக்கான தீர்வை ஏன் பெற்றுக் கொடுக்கவில்லை?
சரி அப்போது புலிகளிடம் வடக்கு கிழக்கின் அதிகாரம் இருந்து என்று சொல்லலாம் அப்படியாயின் 2009 இன் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை மகிந்த கோட்டா கூட்டணியிடமிருந்து பெற்றுக் கொடுத்திருக்கலாமே?
யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள் ஒட்டுக்குழுவின் படுகொலைகளையும் காட்டிக் கொடுப்புக்களையும் நாம் மறந்து விடவில்லை
தமிழ்
வன்னியின் மைந்தன் retweetledi
வன்னியின் மைந்தன் retweetledi

1. ஆயுதப் போராட்டத்திற்கு முன் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்
1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் ஒவ்வொன்றாக இயற்றப்பட்டன.
மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு (1948): சுதந்திரம் அடைந்த உடனேயே, 'இலங்கை குடியுரிமைச் சட்டம்' மூலம் தேயிலைத் தோட்டங்களில் உழைத்த சுமார் 10 லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர்.
சிங்களம் மட்டும் சட்டம் (1956): பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க கொண்டு வந்த இந்தச் சட்டம், தமிழ மொழியின் உரிமையை நிராகரித்து, சிங்களத்தை மட்டுமே நாட்டின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசு ஊழியர்கள் வேலைகளை இழந்தனர்.
தரப்படுத்தல் முறை (1971): பல்கலைக்கழக நுழைவிற்கான 'தரப்படுத்தல் முறை' (Standardization) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் திறமை இருந்தும், தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வது திட்டமிட்டுத் தடுக்கப்பட்டது. குறிப்பாக யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
திட்டமிட்ட குடியேற்றங்கள்: தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பகுதிகளான திருகோணமலை, மட்டக்களப்பு, மற்றும் மணலாறு (வெலிஓயா) போன்ற இடங்களில் சிங்கள மக்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன.
2. ஆயுதப் போராட்டத்திற்கு முன் நடந்த படுகொலைகளும் இனக்கலவரங்களும்
அகிம்சை வழியில் போராடிய தமிழர்கள் மீது சிங்கள காடையர்களும், அரச படைகளும் கட்டவிழ்த்துவிட்ட மிக முக்கியமான படுகொலைகள் மற்றும் கலவரங்கள்:
1956 கலவரம் (கல்லோயா படுகொலை)
'சிங்களம் மட்டும் சட்டம்' கொண்டுவரப்பட்டதற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் அமைதி வழி (சத்தியாக்கிரகம்) போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் நடத்தினர். இது பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்லோயா (Gal Oya) பகுதியில் பெரும் கலவரமாக வெடித்தது. அங்கு குடியேற்றப்பட்டிருந்த சிங்களவர்களால் சுமார் 150-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுவே இலங்கையின் முதல் இனக்கலவரம் ஆகும்.
1958 இனக்கலவரம்
பண்டாரநாயக்க-செல்வா ஒப்பந்தம் சிங்கள எதிர்ப்பால் கிழிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. கொழும்பு, பொலன்னறுவை போன்ற இடங்களில் தமிழர்கள் வீதிகளில் வச்சு எரிக்கப்பட்டனர், பெண்கள் சீரழிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாகக் கப்பல்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை (யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று (ஜனவரி 10), பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த வேளையில், பொலிஸ் அதிகாரி சந்திரா பெரேரா தலைமையிலான சிங்கள பொலிஸார் துப்பாக்கிச் சூடும், கண்ணீர்ப்புகைத் தாக்குதலும் நடத்தினர். இதில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்தும், நெரிசலில் சிக்கியும் 9 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1977 இனக்கலவரம்
1977 பொதுத்தேர்தலில் தமிழர்கள் தங்களின் தனிநாட்டு கோரிக்கையான 'வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு' பெருவாரியாக வாக்களித்தனர். இதனால் ஆத்திரமடைந்த காடையர்களும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நாடு முழுவதும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1981 யாழ் பொது நூலகம் எரிப்பு
மே 31, 1981 அன்று, ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான, 95,000-க்கும் மேற்பட்ட அரிய நூல்களையும் ஏட்டுச்சுவடிகளையும் கொண்ட யாழ் பொது நூலகம் சிங்கள அமைச்சர்கள் முன்னிலையிலேயே பொலிஸாராலும் காடையர்களாலும் தீக்கிரையாக்கப்பட்டது. இது தமிழர்களின் அறிவுப் பாரம்பரியத்தின் மீதான மிகப்பெரிய கலாச்சாரப் படுகொலை (Cultural Genocide) ஆகும்.
3. ஆயுதப் போராட்டம் எவ்வாறு உருவானது?
அநீதிகளும், படுகொலைகளும் தொடர்ந்த நிலையில்தான் தமிழர்களின் போராட்டம் அகிம்சையிலிருந்து ஆயுதப் போராட்டமாக மாறியது.
அகிம்சையின் தோல்வி: தந்தை செல்வா போன்ற தலைவர்கள் 1956 முதல் 1970களின் பிற்பகுதி வரை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காந்திய வழியில் அமைதியான முறையில் போராடினர். அரசாங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் (பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம்) அனைத்தும் சிங்கள தலைவர்களால் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறியப்பட்டன. அமைதிப் பேரணிகள் வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டன.

தமிழ்
வன்னியின் மைந்தன் retweetledi

சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு லெப் கேணல் வீரமணி.!
சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.
வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.

மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று. சத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான். உள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான்.




தமிழ்









