Vj Sriram ( உ.ஸ்ரீ )

12.1K posts

Vj Sriram ( உ.ஸ்ரீ ) banner
Vj Sriram ( உ.ஸ்ரீ )

Vj Sriram ( உ.ஸ்ரீ )

@vjsriram7

Age 26 | Reporter @Vikatan | learning journalism | எல்லாருக்கும் எல்லாமும் |

Katılım Nisan 2016
4.7K Takip Edilen1.2K Takipçiler
Vj Sriram ( உ.ஸ்ரீ )
பெண்கள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படவிருக்கும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
0
1
2
100
Vj Sriram ( உ.ஸ்ரீ )
இதே ஜெகதீசன் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். அப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் Detailed Result இல் அவர் 'General' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தவெக கட்சி வட்டாரத்திலும் ஜெகதீசன் தலித் சமூகம் இல்லை என உறுதிப்படுத்துகின்றனர்.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
Prabhakar Tamilarasu || பிரபாகர் தமிழரசு@pkr_madras

வணக்கம் ஶ்ரீராம், இது தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் “Detailed Results” ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதில், வேட்பாளரின் “Category” பகுதியில் அவர் பட்டியல் சமூகம்(SC) என்றே குறிப்பிட்டுள்ளனர். இது அதிகாரப்பூர்வமான தகவல். இரண்டு- தென் மாவட்டத்தில் மற்றுமொரு பொதுத் தொகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தவெக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால், அவர் தன்னை “பட்டியல் சமூகம்” என அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை, அதனால், அது எந்த அரசு ஆவணத்திலும் இல்லை. (ஆனால், தவெக.,வின் கட்சி ஆவணத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது) நன்றி.

தமிழ்
0
1
2
1.1K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழின் யூடியூப்பில் @dsureshkumar அவர்கள் @TVKVijayHQ சார்பாக இணையத்தில் பரப்பப்படும் நிறைய பொய் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்திருப்பார். அதேமாதிரி, @IndianExpress இதழில் தவெகவின் ஐ.டி.விங் யுக்திகள் பற்றி ஒரு கட்டுரை வெளியாகியிருக்கும். அதை முன்வைத்து @pkr_madras சில சேனல்களில் பேசியிருக்கிறார். இரண்டிலுமே ஒரு பொதுவான பிழை இருக்கிறது. அதாவது இரண்டிலுமே சங்கராபுரம் பொது தொகுதியில் தவெக தலித் வேட்பாளரை நிறுத்தியதாக கூறுகிறார்கள். அதில் உண்மையில்லை. தவெக சார்பில் சங்கராபுரத்தில் போட்டியிட்டவர் ஜெகதீச பாண்டியன். நாம் தமிழர் கட்சியில் நீண்ட காலம் பயணித்தவர். அவர் தலித் இல்லை. சங்கராபுரம் பொது தொகுதியில் தவெக தலித்தை நிறுத்தவில்லை.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
1
50
176
66.8K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
சென்னை மாநகராட்சியின் மே மாத மாமன்ற கூட்டத்தை நடத்துவதற்கான எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என மாநகராட்சி வட்டாரத்தில் தகவல். கடைசியாக பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்திருந்தது. அதன்பிறகு தேர்தல் காரணமாக மாமன்றம் கூடாமல் இருந்தது. வழக்கமாக ஒவ்வொரு மாத இறுதியிலும் மாமன்ற கூட்டம் நடக்கும். இந்த மாதம் அதற்கான அறிகுறியே இல்லை. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் அரசியல் வேறுபாடின்றி இயங்க வேண்டும். ஆட்சியில் இருப்போரும் உள்ளாட்சியை கையில் வைத்திருப்போரும் இணக்கமான போக்கை கையாள வேண்டும். #Chennai #Corporation
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
1
6
58
17.6K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
ஏப்ரல் 6 ~ கொளத்தூரில் கரூர் சம்பவம் போன்ற ஒன்றை நடத்த சென்னை கமிஷனர் அருண் திட்டமிட்டார் ~ (வில்லிவாக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதவ் அர்ஜூனா பேசியது) மே 25 ~ காத்திருப்புப் பட்டியலில் இருந்த அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமனம். Timeline Story : @vikatan vikatan.com/government-and…
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
0
30
91
11.1K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
இடைத்தேர்தல் நடைபெறப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயரப்போகிறது. (இன்னும் அதிகமாகலாம்) ராஜினாமா கடிதத்தை கொடுக்க சபாநாயகர் அறைக்கு வந்து சேர்ந்தார் அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
1
0
6
439
Vj Sriram ( உ.ஸ்ரீ )
குக்கர் பரிசு! நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் தி.நகரில் உள்ள தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் தொகுதி மக்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள 3 லி 'குக்கர்'களை பரிசாக வழங்கினார்.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet mediaVj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
2
14
162
17.7K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
தலைமைச் செயலகத்தில் அழகிரி மகள்! - தவெகவில் இணைகிறாரா? 'இன்று முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர்களை மட்டுமே சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என்றார். ஏற்கனவே தவெக அரசின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டிருந்தார்.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
1
51
573
20.1K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
அதிகாரம் எளியவர்க்கு அதில் என்ன ஆத்திரம்?
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
0
0
11
7.1K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
'ஆட்சியிலும் பங்கு அதிகாத்திலும் பங்கு' என்பது விசிகவின் நீண்டகால முழக்கம். காலம் இப்போதுதான் கனிந்திருக்கிறது. தோழர் திருமாவுக்கும் விசிகவினருக்கும் வாழ்த்துகள் இது நீண்ட நெடிய போராட்டத்துக்கான வெற்றி❤❤
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
0
0
5
78
Vj Sriram ( உ.ஸ்ரீ )
முன்னாள் சபாநாயகர் தனபாலை அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சந்திக்க நேர்ந்தது. பையனுக்காக வந்தீங்களா சார்? என்றேன். 'என் மகன் அமைச்சர் ஆகிறான். மனதார வாழ்த்திவிட்டு செல்ல வந்தேன். விஜய் எம்.ஜி.ஆரையும் ஜெவையும் போற்ற பெரிய மனது வேண்டும். புரட்சித்தலைவரின் ஆட்சியைப் போல இந்த ஆட்சி இருக்குமென நம்புகிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லை. ஓய்வெடுக்கப் போகிறேன்' என்றார்.
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
2
75
888
68K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
பிப்ரவரி 19 ஆம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார் ரஞ்சித் குமார். அடுத்த மூன்று நாட்களில் காஞ்சிபுரத்தில் ஒரு மண்டபத்தில் மாநாடு நடத்தி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தார். வேட்பாளர் அறிவிப்பின் போது எம்.ஜி.ஆர் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். காஞ்சிபுரம் வேட்பாளர் ஆனார், வென்றார். இப்போது அமைச்சர் ஆகியிருக்கிறார். #TVK
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
0
8
79
15.4K
Vj Sriram ( உ.ஸ்ரீ )
கொங்கு மண்டலத்தில் இருந்து மட்டும் 9 எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி கொண்ட பிராந்தியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதைப் போல தெரிகிறது.
தமிழ்
2
0
6
286
Vj Sriram ( உ.ஸ்ரீ )
தன்னுடைய தொகுதிக்கு விஜய் பிரசாரம் செய்ய வரவில்லை என்பதால் ஹாலோகிராம் முறையில் விஜய் பேசுவதை போல வித்தியாசமாக பிரசாரம் செய்திருந்தார் கும்பகோணம் வினோத். வெற்றி பெற்றவர் இப்போது முதல்வர் விஜய் முன்பாக அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். #Ministry
Vj Sriram ( உ.ஸ்ரீ ) tweet media
தமிழ்
1
0
6
301