Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
11.7K posts

Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர்
@Autokabeer
வாய்ப்பை எதிர்பார்த்து... | நாஞ்சில்நாடு | ஓட்டுனர் | எழுத்தாளன் | வனம் & வன உயிரின் ஆர்வலர் | ஒன்றே குலம் ஒருவனே தேவன்
kanyakumari 가입일 Ocak 2016
1.7K 팔로잉3.7K 팔로워

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் காவல்துறை தடுப்பை மீறி கடலில் குதித்த போதை ஆசாமி.
மக்கள் அதிகம் கூடி இருந்த மாலை நேரத்தில் கடலில் உள்ளே சென்ற நபரால் அரைமணிநேரத்துக்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது,
கடலோர காவல்துறை சார்ந்த வீரர்களுக்கு போக்கு காட்டிய நபர் வட மாநிலத்தை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
போராடி கரைக்கு கொண்டு வந்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.
தமிழ்

குவைத் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஈரான் நேரடித் தாக்குதல் - துபாய் துறைமுகத்தில் பதற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் துறைமுக நங்கூரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத்தின் "அல்-சல்மி" (Al-Salmi) கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது, மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:10 மணியளவில் ஈரான் படைகள் நேரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (KPC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான சமயத்தில் கச்சா எண்ணெய் முழுமையாக நிரப்பப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்ட கப்பலின் அடிப்பகுதி பலத்த சேதமடைந்ததுடன், கப்பலில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகும் அபாயம் நிலவுவதால், அவசரக்கால மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
நல்வாய்ப்பாக இந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சேதங்கள் குறித்த விரிவான தொழில்நுட்ப ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலில், குவைத் கப்பல் இலக்கு வைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்

குமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகள் மூடல் - மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் @stalin_ips அதிரடி.
கன்னியாகுமரி மாவட்டம் தோட்டியோடு பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு கல்குவாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு மூடப்பட்டன.
மாவட்ட காவல் துறை தலைமையிலான திடீர் நடவடிக்கையில் இவ்விரு குவாரிகளும் விதிமுறை மீறி இயங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. @kumari_police


தமிழ்

பாஜக- அதிமுக கூட்டணி மற்றும் தவெகவிற்கு ஆதரவு கிடையாது
முஸ்லிம்கள் உரிமையை பறிப்பது, கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டு உரிமையை பறிப்பது என வடமாநிலத்தில் ஆளும் பாஜக அரசுகள் போல
தமிழகத்தை மாற்ற துடிக்கும் பாஜக, அதிமுக, பாமக கூட்டணிக்கு சிறுபான்மையினர் ஆதரவு தரமாட்டோம், வாக்குகள் போட மாட்டோம்.
பாஜக எதிர்த்து பேச அச்சப்பட்டு மவுனமாக இருக்கும் விஜய்
அரசியல் பக்குவமடையாத விஜய், தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கை பெற்றவராக இல்லை.
R. அப்துல் கரீம் Misc
@tntjho தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - மாநில தலைவர்!
தமிழ்

சட்டமன்ற தேர்தல் - கன்னியாகுமரி மாவட்டம், பத்மனாபபுரம் தொகுதி:
தக்கலையில் மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் IPS @stalin_ips அவர்கள் ஆய்வு.
@kumari_police



தமிழ்

கன்னியாகுமரி திமுக வேட்பாளர் மேயர் மகேஷ் @MaheshRDMK
நாகர்கோவில் திமுக வேட்பாளர் எஸ். ஆஸ்டின் @SAustinDMK


தமிழ்

ஐஸ் இயந்திரத்தில் கால் சிக்கி தொழிலாளி படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம்- குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஐஸ் கம்பெனியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜாமுன் (23) என்ற வட மாநில தொழிலாளி பணியில் இருந்தபோது, அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது.
தகவலறிந்து விரைந்து வந்த குளச்சல் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளியை மீட்டு, சிகிச்சைக்காக குளச்சல் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தமிழ்

IPL அணிகளான RCB மற்றும் RR-இன் மதிப்பு.
RCB, 2008-ஆம் ஆண்டில் சுமார் ₹450 கோடிக்கு விற்கப்பட்டது.
RCB, 2026-ஆம் ஆண்டில் சுமார் ₹16,600 கோடிக்கு விற்கப்பட்டது.
RR, 2008-ஆம் ஆண்டில் சுமார் ₹270 கோடிக்கு விற்கப்பட்டது.
RR, 2026-ஆம் ஆண்டில் சுமார் ₹15,000 கோடிக்கு விற்கப்பட்டது.
RCB-க்கு பிரம்மாண்டமான 1500% உயர்வும், RR-க்கு 2330% உயர்வும் கிடைத்துள்ளது.

தமிழ்

ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்த குமரி மாவட்ட வனத்துறை
வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி கடல் ஆமைகள், கடற்பசு, கடல் குதிரை மற்றும் கடல் அட்டை போன்ற கடல்சாா் உயிரினங்களைப் பாதுகாக்க தமிழகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது...
இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை உயர் அதிகாரி முனைவர். அன்பு IFS அவர்கள் தலைமையின் கீழ்,
லெமூர் கடற்கரை பகுதியில் வனத்துறையால் சேகரிக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் குஞ்சு பொரிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அரிய வகை உயிரினமான பங்குனி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது வழக்கம்.
இந்த ஆமை முட்டைகளை பறவைகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு அவை சேகரிக்கப்பட்டு பொரிப்பகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆமை குஞ்சுகளாக வந்த பின்பு மீண்டும் கடலில் விடப்பட்டு வருகிறது.
தமிழ்

பணம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் சம்பந்தமான புகார்களை விரைவாக விசாரிக்க Quick Response Team (QRT) செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS @stalin_ips
மேலும், பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்(ம) whatsapp எண்கள்
Dr. R. STALIN IPS
SP Kanniyakumari -8122223319
Feedback centre- 7708239100
நாகர்கோவில் தொகுதி - 7358776100
குளச்சல் தொகுதி - 7358068100
கிள்ளியூர் தொகுதி - 7358034100
கன்னியாகுமரி தொகுதி - 7305282100
விளவங்கோடு தொகுதி - 7358063100
பத்மநாதபுரம் தொகுதி - 7397463100
தகவல் தரும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும் - @kumari_police
தமிழ்

@kathir1985hi இரண்டு பேருந்துகளுமே தப்பு தான்...
நடுரோட்டில் நிறுத்தி ஆள் இறக்கிய பேருந்து தப்பு.
பின்னால் வரும் பேருந்து வழி கிடைக்கவில்லை என்றால் நின்று அந்த பேருந்து சென்ற பிறகு செல்ல வேண்டும், இடது பக்கமாக முந்தி செல்வது மிக பெரிய ஆபத்து.
தமிழ்

@Autokabeer சிசிடிவி பார்த்தால் தெரிகிறது பயணியை இறக்கும் பேருந்து இடது புறம் ஓரமாக நிக்காமல் நடு ரோட்டில் நிக்கிறது தப்பு அரசு பேருந்து மேல் இல்லை
தமிழ்

கன்னியாகுமரி மாவட்டம் - புத்தேரி அருகே இன்று மதியம், சாலையில் செல்லும் மக்கள் உயிர் பலி வாங்க துடிக்கும் 4சி பஸ் சிஎல்ஆர் டிரைவர்கள்.
அரசு பேருந்து ஒன்னு பின்னால் வரும் பேருந்துக்கு வழி கொடுக்காமல் நடுரோட்டில் நிறுத்தி ஆள் இறக்கியுள்ளது.
பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்து, வலது பக்கம் ஓவர்டேக் செய்யாமல் (வழி இருந்திருக்காது) இடது பக்கமாக அதிவேகத்தில் முந்தி சென்ற சிசிடிவி காணொளி.
இரண்டு பேருந்துகளுமே சென்ற விதம் போக்குவரத்து சட்டப்படி குற்றமே.
தமிழ்





