TVK IT Wing Official@TVKHQITWingOffl
டியர் TVK விர்சுவல் வாரியர்ஸ்..
"எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.
திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது.
ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை. அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல்.
"யானை வரும் பின்னே,
மணி ஓசை வரும் முன்னே" - தமிழக அரசியல் மாற்றத்திற்கான மணியோசை.. இல்லையில்லை விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் செய்ய வேண்டியது.. இதில் கவனம் சிதறவேண்டாம். வாடகை வாய்களின் வன்ம பொய்ப் பிரச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மக்கள் விரோத திமுக அரசின் தோல்விகளையும், மக்களின் வலிகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்வோம். களத்தில் இறங்கி மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
எத்தனை தரகர்கள் பொய்பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும். தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நண்பா நண்பிஸ்.. பொய் பிரச்சார ஊடகச் செய்திகளை, வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள். மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம்!.