CSK CITIZEN retweetledi

விரக்தியின் விளிம்பில் இருக்கின்ற நாம் தமிழர் தம்பிகள், புதிய நம்பிக்கையாக எங்களை நோக்கி வருவதை தடுக்கும் பொருட்டு இம்மாதிரியான மிகக் கேவலமான செயல்களில் இறங்கி இருக்கின்றனர் சிலர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் சிலரே ஒவ்வொரு மாவட்டத்திலும் அலைபேசி வாயிலாக நம்பிக்கையற்ற நிலையில் இருக்கின்ற பொறுப்பாளர்களிடம் "வெற்றிக்குமரன், புகழ், தனசேகரன் ஆகியோர் சீமானுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் நாம் தமிழர் கட்சிக்கு திரும்பி விடுவார்கள், ஆகவே நீங்கள் அமைதியாக இருங்கள். உங்களுக்கான பொறுப்புகள் உங்களைத்தேடி வரும். அவர்கள் இணைந்து விட்டால் பாதிக்கப்படுவது நீங்களாகத்தான் இருப்பீர்கள்" என்று வதந்தியை பரப்பி, எம்மை நோக்கி வருபவர்களை தொடர்ச்சியாக தடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக நான் சீமானிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு வீடியோ தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
நான் எதற்கு சீமானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்? தன்னை இழந்து, தனது பொருளாதாரம் தனது இளமை, என அனைத்தையும் இழந்து இந்த இன விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழ் இளைஞர்களிடமும், தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டியவர் சீமானே.
ஆகவே, இந்த மாதிரியான அறமற்ற செயல்கள் செய்வதை நிறுத்திவிட்டு உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு கொஞ்சமாவது உண்மையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
என்றும்
தேசியத்தலைவர் வழியில்..
வெற்றிக்குமரன்.

தமிழ்












