பாலாஜி இராமச்சந்திரன்

11.6K posts

பாலாஜி இராமச்சந்திரன் banner
பாலாஜி இராமச்சந்திரன்

பாலாஜி இராமச்சந்திரன்

@Milkyboybala

CEO of MAGIZHCHI KULUMAM || CSC VLE - Digital E seva || 33456 - NSDL PAN CENTER || TACTV- Esevai Franchisee || VICE PRINCIPAL - SAN POLYTECHNIC || NTK - IT Wing

எட்டயபுரம் Katılım Ağustos 2010
1K Takip Edilen1.4K Takipçiler
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! உடனடியாக அகற்றப்படாவிட்டால் மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்திற்குட்பட்ட தாலூரில் கேரள மாநில அரசு மலையாள மொழியில் எல்லை அறிவிப்புப் பலகை வைத்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டம் நடத்தி அகற்றிய நிலையில், நேற்று மீண்டும் கேரள அரசு அத்துமீறி அறிவிப்புப் பலகை வைத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அத்துமீறி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைப்பதை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது. கடந்த 2017 ஆம் ஆண்டு, கேரள வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தமிழ்நாட்டின் தாலூர் எல்லைக்குள் 200 மீட்டர் தூரம் அத்துமீறி நுழைந்து, அவ்விடம் வரை தங்களுக்கு சொந்தமானது என்றுகூறி கேரள மாநில அரசு மலையாள மொழியில் அறிவிப்பு பலகையை வைத்தது. தமிழக எல்லையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட அப்பலகையை நாம் தமிழர் கட்சியினர் அடித்து உடைத்து அகற்றியதோடு, தமிழ்நாட்டின் எல்லையை காக்கத் தவறிய திமுக அரசை கண்டித்துக் கடும் எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தது. கேரள அரசு மீண்டும் அகற்றப்பட்ட அறிவிப்பு பலகையை வைக்க முயன்றபோது, நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் விழிப்படைந்த தாலூர் மக்களும் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராடி அதனை வைக்க விடாமல் மண்ணுரிமை மீட்டனர். அதன்பிறகு நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரிகள் அவ்விடத்தை அளந்து, அது கூடலூர் வட்டத்திற்கு உட்பட்ட தமிழகத்தின் எல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அதனையடுத்து கேரளா தனது ஆக்கிரமிப்பு முயற்சியைக் கைவிட்ட நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மீண்டும் கேரள அரசு தமிழக எல்லைக்குள் அறிவிப்பு பலகையும் பேருந்து நிலையமும் அமைக்க முயன்றதையும் நாம் தமிழர் கட்சி போராடி தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், நேற்று மீண்டும் தமிழக எல்லைக்குள் தமிழ்நாடு அரசு தமிழில் வைத்த அறிவிப்பு பலகையை உடைத்து எறிந்துவிட்டு, கேரள அரசு மலையாள அறிவிப்பு பலகையை அத்துமீறி வைத்துள்ளது. இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் நேற்று இரவு முதல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கேரள மாநில அரசு கேரள காவல்துறையினரை குவித்து, தமிழக எல்லைக்குள் அத்துமீறி நடப்பட்ட அறிவிப்பு பலகையைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு எல்லை பலகையை காக்கத் தவறிய தமிழ்நாடு காவல்துறையோ, எல்லை மீட்புக்காகப் போராடும் நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்துகின்றது. தமிழ்நாடு எல்லையைப் பாதுகாக்க திறனற்ற திமுக அரசு போராடும் நாம் தமிழர் கட்சியினரை அடக்கி ஒடுக்குவது ஏன்? இதுதான் திமுக அரசு மண்ணையும், மானத்தையும் காக்கும் முறையா? முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஒரு மரத்தைக்கூட வெட்ட அனுமதிக்காத கேரள மாநில அரசு, எந்தக் காலத்திலும் எவராலும் உருவாக்க முடியாத இயற்கையின் அருங்கொடையான தமிழ்நாட்டின் மலைவளத்தை கனிம வளங்களாக கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் வெட்டி ஏற்றப்படுவதை திமுக அரசு தடுத்து நிறுத்தாதது ஏன்? கேரளாவிலிருந்து தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் குப்பைகளும், மருத்துவக்கழிவுகளும் கொட்டப்படுவதையும் திமுக அரசால் தடுக்க முடியாதது ஏன்? மின்னிலக்க அளவீடு (டிஜிட்டல் சர்வே) என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு சொந்தமான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை கேரள எல்லைகளாகக் குறிப்பிட்டு அத்துமீறி எல்லைக்கல் நிறுவியபோதும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்தது ஏன்? முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிக்காக சென்ற தமிழகப் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதை திமுக அரசு தட்டிக்கேட்காது ஏன்? திமுக கூட்டணி கட்சிகள் ஆளும் கேரள அரசிடம் குறைந்தபட்ச பேச்சு வார்த்தைகூட திமுக அரசு நடத்தாது ஏன்? காங்கிரசிடமும், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தேர்தலில் போட்டியிடும் இடங்களைத் தீர்மானிப்பதற்காக பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி கடும் பேரத்தில் ஈடுபடும் திமுக, அதில் அணுவளவு அக்கறையும் தமிழ்நாட்டின் உரிமையை மீட்கும் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் காட்டாதது ஏன்? இதுதான் தமிழ் மண்ணின் மீதும், மக்களின் மீதும் திமுக அரசு கொண்டுள்ள அக்கறையா? தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால அவல ஆட்சியில்தான் கண்ணகி கோட்டத்தின் நில உரிமையையும், முல்லைப் பெரியாற்று நீர் உரிமையையும் கேரளாவிடம் தமிழ்நாடு இழந்தது. இன உணர்வும், மான உணர்வும் அற்ற இரு திராவிடக் கட்சிகளின் கையாலாகத்தனத்தின் விளைவே, தற்போது தமிழக எல்லையை தங்கள் எல்லைகளாக குறிப்பிட்டு அத்துமீறி நுழைந்து அறிவிப்புப் பலகை வைக்கும் துணிவை கேரள மாநில அரசிற்குக் கொடுத்துள்ளது. இனியும் திமுக அரசு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியை கேரளாவிற்கு தாரைவார்க்குமானால் அது ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். ஆகவே, நீலகிரி மாவட்டம் தாலூரில் தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு அத்துமீறி வைத்துள்ள எல்லை பலகையை உடனடியாக அகற்றி, உடைத்து எறியப்பட்ட தமிழ்நாட்டின் எல்லை பலகையை உடனடியாக நிறுவ வேண்டும். இதுபோன்ற எல்லை தாண்டிய அத்துமீறல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்கத் தமிழ்நாடு அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கேரள அரசிடம் கடும் எதிர்வினை ஆற்றிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். உடனடியாக, கேரள அரசின் அறிவிப்புப்பலகை அகற்றப்படாவிட்டால் கூடலூர் மக்களைத் திரட்டி மாபெரும் எல்லை மீட்புப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி தாலூர் எல்லையில் முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
18
818
1.5K
19.4K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
அமரகவி மக்கள் இயக்கம்
பல தலைமுறைகளாக தூர்வாரப்படாத, எட்டயபுரம் RC தெருவில் உள்ள சிவசங்கரன் பிள்ளை ஓடை காட்டுப்பன்றிகள் மற்றும் விஷ ஜந்துக்களின் கூடாரமாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா மாவட்டம் நிர்வாகம்? @CollectorTuty youtu.be/xT-pA7efN8Q
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
30
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
செந்தமிழன் சீமான்
பெண்களைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்! ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித் தொழுகிறார் பெரும்பாவலன் பாட்டன் பாரதி. ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே!’ என்று பெண்ணிய விடுதலைக்கு பெருமுழக்கம் எழுப்புகிறார் தாத்தா புரட்சிப்பாவலர் பாரதிதாசன். ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. 'பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!' எனும் பாக்களின் வழியே பாலினச் சமத்துவத்தைப் போதிக்கிறார் நம்முடைய மூதாதை திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானார். ‘பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!’ எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசியத் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன். பெண்களைப் போற்றிக் கொண்டாடுவதே தமிழர்களின் அறம் வகுத்துத் தந்த உயர்நெறியென அதனை அடியொற்றினார்கள் தமிழின முன்னவர்கள். தாய்வழிச்சமூகமான தமிழ்ச்சமூகத்தில் ஆதிகாலந்தொட்டே பெண்களுக்கு முன்னுரிமையும், முதன்மைத்துவமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது; தமிழ்ச்சமூகத்திற்கு பெண்களே தலைமை வகித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்புகளால்தான் பெண்களுக்குரிய தலைமை திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனம் வேரூன்றியிருக்கிறது. அத்தகைய அடிமைத்தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலத்தில் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக பள்ளிச்சிறுமிகள் முதல் கல்லூரி செல்லும் இளம்பெண்கள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சமூகப்பேரவலம் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத் துயரமும், கடந்த ஒரு மாதத்தில் 26 பள்ளிக்குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுந்துயரங்கள் நிகழ்ந்தன எனும் இதயத்தை அறுக்கும் செய்தியும், மனச்சான்று உள்ள எவரும் ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும். தமிழ்நாட்டில் பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க மாநில சமூக நலத்துறை, மாநில மகளிர் ஆணையம், மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றத் தடுப்பு பிரிவு, அனைத்து மகளிர் காவல்நிலையம் என பல்வேறு அமைப்புகள் இருந்தபோதிலும், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க, குழந்தைகள் நலம் மற்றும் மாநில குழந்தைகள் நல ஆணையம், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம், சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள், மாநில சட்ட குழுமம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி மையங்கள் என கணக்கிலடங்கா அரசு சார்ந்த, அரசு சாரா தன்னதிகார அமைப்புகள் மற்றும் சிறப்பு சட்டங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் இன்றுவரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. இக்கொடுமைகளுக்கு அடிப்படை காரணமாக அமைவது அரசு விற்கும் மதுவும், கட்டுங்கடங்கா கஞ்சா விற்பனையும்தான். திராவிட ஆட்சியில் நிலவும் கட்டற்ற போதைப்புழக்கத்தால் நாம் வாழும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதால்தான் பெண்கள் மீதான வன்கொடுமைகள் பன்மடங்கு பெருகியுள்ளது. அண்மையில் சென்னை படூரில் இரண்டாம் ஆண்டு்படிக்கும் சக மாணவிகளுடன் மது அருந்திய கல்லூரி மாணவி உயிரிழந்த கொடுந்துயரம், மதுவினால் தமிழ்ச்சமூகம் எந்த அளவிற்கு முற்றுமுழுதாய் அழிந்துகொண்டிருக்கிறது என்பதற்கு தக்கச்சான்றாகும். தமிழ் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் மது போதையினை ஒழிப்பதன் மூலம் மட்டுமே பெண்களின் பாதுகாப்பான நல்வாழ்வினை உறுதிசெய்ய முடியும்! பெண்களுக்கு எதிரான கொடுமைகளை முற்று முழுதாக களைந்திட, பெண்களை அரசியல் அதிகாரப்படுத்துவதே முதன்மை வாய்ப்பென்பதை உணர்ந்து, பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத்தரவும் நாம் தமிழர் கட்சி சமரசமின்றி சமர் செய்யும் என உறுதியளிக்கிறேன். இந்த ஒரு நாள் மட்டும் மகளிர் நாள் அல்ல ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம். உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!. பெண்களைப் போற்றுவோம்! பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
515
667
1.9K
361.4K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
பாண்டி கயத்தார்
சீமான் வாழ்க சீமான் ஒழிக இனி தமிழக அரசியல்
பாண்டி கயத்தார் tweet media
தமிழ்
0
1
2
36
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
தான் ஆசையாய் வளர்த்த பிள்ளை காணாமல் போகிறது அதனால் குடும்பத்திற்குள் குழப்பம் வருகிறது 20 ஆண்டுகள் கழித்து காணாமல் போன மகன் கிடைக்கிறான் மகிழ்ச்சியில் குடும்பமே கொண்டாடுகிறது ஆனால் வந்தவன் ஆளே மாறி வந்திருக்கிறான் என்பது போகப் போகப் தெரிகிறது அவனை இயக்குகிறவன் தவறான கதைகளை சொல்லி தன் குடும்பத்திற்கு எதிராகவே அவனை வளர்த்துள்ளான் என்பது அப்பாவிற்கு தெரியவர அப்பா அவனை போட்டுத் தள்ளுகிறார் ! நடிகர் விஜய்யின் GoAt படத்தில் தன் மகனை தவறானவன் என தெரிந்தவுடன் விஜய் எப்படி பொளந்தாரோ அப்படித்தான் நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்தவுடன் அண்ணன் சீமானும் பொளக்கிறார் ! That’s all bro ! @actorvijay @tvkvijayhq @Seeman4TN
Duraimurugan tweet media
தமிழ்
1.1K
985
5.1K
671K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
🌾கவிகண்ணா🌾
2,000 போலீசை பாத்தவடா நான்.. பாட்டி Suspend ஆகும்வரை பகிரவும்
தமிழ்
92
1K
2K
392.3K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
போலீசையே அடிப்பீங்களா? எங்க இப்போ அடிங்க பாப்போம்… கேட்டா அவர தெரியும் இவர தெரியும்னு சொல்றீங்க.. போதையில் எகுறல், வசமாக மாட்டியதும் கெஞ்சல்.. காவலர்களை தரக்குறைவாக பேசி கைகளை நீட்டி மிரட்டிய ஜோடி கைது செய்யப்பட்ட போது கைகளை கட்டி பம்மிய காட்சி.. #Chennai | #LoopRoad | #DrunkMan | #Police | #ApologyVideo | #PolimerNews
தமிழ்
176
990
4.3K
656.8K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
✒️Writer SJB✒️
✒️Writer SJB✒️@SJB56856832·
யார்யா இந்த பிரஸ் நிருபர் எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்கு🫶 ஒத்த வார்த்தையில் ஜோலியவே முடிச்சிட்டார்👌💪
தமிழ்
87
611
3.1K
120.3K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
பாண்டி கயத்தார்
எட்டயபுரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் அடிப்படை வசதிகள் அமைத்துத் தரக்கோரி ஆர்ப்பாட்டம் @NaamTamilarOrg
தமிழ்
0
16
33
280
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@geethajeevandmk
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
12
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@KanimozhiDMK
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
12
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
அமரகவி மக்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si@mlavilathikulam
YouTube video
YouTube
தமிழ்
0
1
1
10
பாலாஜி இராமச்சந்திரன்
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவி கிராமத்தில் 13 ஆண்டுகளாக சாலை சீர் செய்யப்படாமல் உள்ளது. பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என பலதரப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருகிறார்கள். லிங்க் 👇 youtu.be/od_1TNjaBCU?si… @CollectorTuty
YouTube video
YouTube
தமிழ்
0
0
0
13
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
செந்தமிழன் சீமான்
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? @CMOTamilnadu @mkstalin 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சவுக்கு சங்கர் பேசிய கருத்துகளுக்காக பல்வேறு வழக்குப் பாய்ச்சப்பட்டு, ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நேர்காணலில் நெறியாளுகை செய்ததற்காக பெலிக்ஸ் ஜெரால்டையும் தற்போது கைதுசெய்திருப்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல! பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்துக் கைதுசெய்யும் இச்செயல்பாடு ஊடகச்சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் கொடுஞ்செயலாகும். இது ஊடகச்சனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. காட்சி ஊடகங்கள், வலையொளிகளின் நேர்காணல்களில் பங்கேற்பாளர்கள் பேசும் கருத்துகளுக்கு அதன் நெறியாளர்களோ, அதனை ஒளிபரப்பும் ஊடகங்களோ ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை என்பது அடிப்படை ஊடகச்செயல்பாடு. அப்படியிருக்கையில், எதற்காக இந்த கைது நடவடிக்கை? திமுக அரசின் மீது விமர்சனங்களை வைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் வெளிப்படையாக விடுக்கும் அச்சுறுத்தல் இல்லையா இது? திமுக ஆட்சியின் கொடுங்கோன்மையைப் பேசியவர்கள் எல்லாம் குறிவைத்து அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாவார்களென்றால், நடப்பது மக்களாட்சியா? இல்லை! பாசிச ஆட்சியா? பேரவலம்! தம்பி சவுக்கு சங்கர் காவல்துறையினர் குறித்துத் தெரிவித்தக் கருத்துகள் தவறானவை; அதனை ஏற்க முடியாது. அப்பேச்சுக்காக அவரைச் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்துவதில் நமக்கு எந்தச் சிக்கலுமில்லை. அதேசமயம், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரைச் சிறைக்குள் வைத்துத் துன்புறுத்துவதும், அடித்து உதைத்து கையை உடைப்பதும், அடுத்தடுத்து பல பொய் வழக்குகளைப் பாய்ச்சி அலைக்கழிப்பதும் கொடும் அரசியல் பழிவாங்கும் போக்கு இல்லையா? தமிழ்நாடு முழுமைக்கும் போதைப்பொருட்களைப் புழங்கவிட்டுவிட்டு, சவுக்கு சங்கரின் வாகனத்தில் கஞ்சாவை எடுத்ததாகக் கூறுவது நம்பும்படியாக இருக்கிறதா? எப்போது வேண்டுமானாலும் கைதுசெய்யப்படலாம் எனும் நிலையிலிருந்த சவுக்கு சங்கர், தனது வீட்டிலும், அலுவலகத்திலும், வாகனத்திலும் கஞ்சாவை வைத்துக்கொண்டு சுற்றுவாரா? எதற்கு இத்தனைத் திரைக்கதை அமைக்கிறீர்கள் பெருந்தகைகளே? அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில், அவசர நிலையின்போது காவல்துறையால் சிறைக்குள் துன்புறுத்தப்பட்டதை இன்றளவும் பேசும் ஐயா ஸ்டாலின் அவர்கள், காவல்துறையை வைத்துக் கொண்டு இத்தகையக் கொடூரங்களை நிகழ்த்தலாமா? இதுதான் சமூக நீதி ஆட்சியா? விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு! திமுக கடந்த காலங்களில் காட்டிய பாசிச முகத்தை மீண்டும் காட்டத் தொடங்குகிறதா? 2006 - 2011ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்குப் பின்னர், பத்தாண்டு காலம் அதிகாரத்தை இழந்து நின்றது மறந்துபோனதா? அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் எத்தனைக் காலத்துக்கு ஆட்டம்போடுவீர்கள் பெருமக்களே? பெரும் சாம்ராஜ்ஜியங்களும், பேரரசுகளுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகளே வரலாற்றில் வீழ்ந்திருக்கிறார்கள். மக்கள் கொடுத்த அதிகாரத்தில்தான் நீங்களெல்லாம் இன்று உயரே நிற்கிறீர்கள்! மக்கள் புறக்கணிக்கத் தொடங்கினால் மொத்தமாய் சரிந்து விழுவீர்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால், உங்கள் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தானே! அதற்குப் பிறகு, எங்கே இருப்பீர்கள்? ஆட்சியில் இருந்துகொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, அடாவடித்தனமும், அட்டூழியமும் செய்யும் இதுபோன்ற பாசிச ஆட்சிகளையும், கொடுங்கோல் அரசுகளையும் மக்கள் கட்டாயம் தூக்கி எறிவார்கள் என ஆளும் ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன். இத்தோடு, ஊடகவியலாளர் தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு மீதான வழக்கையும், கைதுநடவடிக்கையையும், தம்பி சவுக்கு சங்கர் மீது சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையையும், புனையப்படும் பொய் வழக்குகளையும், அவர் மீதான அரசின் பழிவாங்கும் போக்கையும் வன்மையாக எதிர்க்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
238
1.1K
2.6K
160.4K
பாலாஜி இராமச்சந்திரன் retweetledi
RK_bytesᴺᵀᴷ
RK_bytesᴺᵀᴷ@BytesRk·
40 தொகுதிகளில் மக்களைக் கவர்ந்த வேட்பாளர்கள்🔥🔥🔥 #மக்களின்_சின்னம்_மைக் #Mike_VoiceOfPeople
தமிழ்
2
134
361
5.4K