Narendran D retweetledi

இன்று, புதிதாக தயாரிக்கப்பட்ட நான்கு ‘அம்ரித் பாரத்’ விரைவு இரயில்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கின்ற இந்த இரயில்களில், தமிழகம்-மேற்கு வங்கம் மற்றும் அவற்றிற்கு இடையிலான பகுதிகளை இணைக்கும் வகையில் இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் இடம்பெற்றுள்ளது.
நியூ ஜல்பைகுரி-நாகர்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி இடையிலான இரண்டு இரயில்களானது, தொழில் மற்றும் ஏனைய பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அமைகின்றது.
மேலும், மேம்பட்ட மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ‘வந்தே பாரத்’ இரயிலும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டு மக்களின் தேவை உணர்ந்து, இரயில்வே துறையில் புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும் நாட்டு மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@RailMinIndia @GMSRailway
#PMModiInBengal #JitbeBJPJitbeBangla
தமிழ்























