

Sunandha TS
8.5K posts

@SunandhaTS
IT Wing President - Naam Tamizhar Party; Digital Entrepreneur












பதக்கங்களை கங்கையில் வீச இருந்த மல்யுத்த நட்சத்திரங்கள் - தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தலைவர்





பெரியார் மரபும், பிரபாகரன் மரபும் ஒன்றல்ல...வலிந்து செய்யப்படும் ஒப்பீடு... (பிரபாகரன் பார்ப்பனிய எதிர்ப்பு பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறாரா?) தமிழ்நாட்டு தமிழ்நாட்டு தமிழர்கள் பெரியார் மரபில் நின்று, அண்ணா வழியில் நின்றுதான் (வைகோகிட்ட சந்தேகம் கேட்டுக்கோங்க) ஈழ விடுதலை கோரிக்கையை ஆதரித்தார்கள்.... அந்த மரபில் நின்று ஊன்றி நின்று பார்த்தால் திமுகவும், அதிமுகவும் ஒன்றல்ல என்ற எளிய உண்மை புரியும் இரண்டும் ஒன்று, புவிசார் அரசியல் புரிதல் கிடையாது என்று பொத்தாம் பொதுவாக அடித்துவிடுவதற்கும், தன்னுடைய தொடக்கம் தொட்டு, திமுக தமிழ்நாட்டு அரசியலில் செய்து வந்த தலையீட்டை மறைப்பதற்கு மிகவும் துணிச்சலான முரட்டுத்தனம் வேண்டும். இந்திய வல்லாதிக்கம் அனைத்து அதிகாரத்தையும் மையத்தில் குவித்து வைத்திருந்த போது, 1967-1976 வரையிலும், தொடர்ந்து அதிகார குவிப்பை ஆட்சியிலிருந்தபடியெ எதிர்த்து வந்திருக்கிறது. பின்னர் இந்திய ஆளும் வர்க்கம் தங்களுக்கு தோதான எம்.ஜிஆரை திணிக்கும் நோக்கில், 1976ல் ஆட்சியை கலைத்தது. (மிகத்தவீரமாக, அதிகார வர்க்கத்திற்கு பார்ப்பன நீக்கத்தை செய்த கலைஞரால் கடுப்பான பார்ப்பன லாபிதான் காரணம் என்று விக்கிலீக்ஸ் குறிப்பு கூறுகிறது) அதே காலக்கட்டத்தில்தான் தன்னுடைய பிராந்திய நலன் ஈழ போராட்ட குழுக்களுக்கு பயிற்சியும், உதவியும் அளித்தது. “அண்ணாயிசம்” என்ற கருவாட்டு சாம்பாரை அறிமுகப்படுத்திய, உச்சபட்ச ‘புரட்சி’ நடிகரை மேற்படி போராளிகுழுவில் ஒரு குழு நட்பு சக்தியாக ஏன் கருதியது? நடுவில், தமிழீழம் ஏன் இல்லை என்ற அற்புதமான நூலை முரசொலி மாறன் அவர்கள் எழுதினார்... உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும் ‘ஓரள்வு’ அறிவுக்கூர்மையோடு சில வாதங்களை முன்வைத்திருந்தார்....எவனும் ஏன் பரிசீலிக்கலை என்று கண்டிப்பாக கேட்க மாட்டோம்..ஏன்னா, உங்க அளவுக்கு அறிவு கிடையாது... 1989ல் தான் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அதுவரையிலும், தான் உயிரோடு இருக்கும் வரை தன்னுடைய Image trapன் மூலம் தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு போதுமான சேதாரங்கள் செய்து முடித்தார் ‘புரட்சி’ தலைவர் எம்.ஜி.ஆர் அவர் இறந்ததற்கு நன்றியோடு போராளிகள் வீரவணக்கம் எல்லாம் கூட செய்தார்கள் 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தது. தில்லி பறந்தார் ஈழத்தாய் ஜெயலலிதா, புலிகளை தங்களுடைய Proxy இராணுவமாக பயன்படுத்துகிறார் கருணாநிதி என்று குற்றஞ்சுமத்தினார். ஆட்சியும் கலைக்கப்பட்டது. ஆட்சி கலைப்பு குறித்து அதுவரையிலும் இந்திய அரசியலில், குறிப்பாக தமிழ்நாட்டு அரசியலில் ‘தலையிடா’ கொள்கையை கடைபிடித்த மேற்படி போராளி குழு... தங்கள் பெயரை சொல்லி ஆட்சி கலைக்கப்பட்டதை குறித்து வருந்தினார்களா, அது குறித்து ஏதேனும் அறிக்கை வெளியிட்டார்களா என்று தெரியவில்லை... பின்னர் தேர்தல் வந்தது, ராஜீவ் கொலை செய்யப்பட்டார். இது வரலாறு, பூகோள அரசியல் மதிநுட்பம் தெரிந்தவர்களிடம் ஒரே ஒரு கேள்வி, மக்கள் விரோத ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்தி காண்பித்த எம்.ஜி.ஆரிடம் தோழமையோடு இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு..அதுவும் முன் நிபந்தனை ஏதுமில்லாமல்.... அப்படியிருக்க, மோடி என்ற பேரபாயத்தை எதிர்கொள்ள காங்கிரஸை துணைக்கு சேர்த்துக் கொள்வதே பார்ப்பனியம் என்று கயிறு திரிப்பது, சரியா? என்று நாம் எப்போதும் கேட்க கூடாது. ஏனென்றால், அவர்கள் தெய்வப்பிறவிகள், மற்றெல்லோரும் கேள்வி கேட்கும் தகுதியில்லாதவர்கள் ஈனப்பிறவிகள் (தொடரும்...)



