Arappor Iyakkam

11.6K posts

Arappor Iyakkam banner
Arappor Iyakkam

Arappor Iyakkam

@Arappor

Official Twitter id of Arappor Iyakkam

Chennai, India Katılım Kasım 2015
360 Takip Edilen99.9K Takipçiler
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்கள் குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே அரசாங்கம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் மூடப்பட்டு பிறகு அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் மீண்டும் திறக்கப்பட்ட 52 குவாரிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ஜெயகாந்தன் IAS மூலம் குறைத்து, அதையும் தவணை முறையில் கட்ட அனுமதி பெற்று, சட்ட விரோத குவாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறார்கள். இந்த குவாரிகளை நிரந்தரமாக மூடி, அமைச்சர் தனது நடவடிக்கைகளை துவங்க கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த மோசடிக்கு துணை போன ஜெயகாந்தன் ஐஏஎஸ் மற்றும் முன்னாள் திமுக MLA துரைமுருகன் ஆகியோர் மீதும் விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் கோரிக்கை வைக்கிறது. @drtkprabhu_TVK @CMOTamilnadu @TVKVijayHQ
தமிழ்
29
672
1.4K
28.1K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ @srinathtvk இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
தமிழ்
77
994
1.8K
89.8K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
ரூ 400 கோடி ஊழல் அதிகாரி காசி சஸ்பெண்ட் ! அப்போதைய மின்சார வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் உட்கார்ந்து டெண்டர் செட்டிங் செய்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் ஈடுபட்ட காசி பணி இடை நீக்கம் ! சிறைக்கு எப்பொழுது செல்வார்கள் ? 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார வாரிய டெண்டர்கள் ரத்து. ஊழலை ஒழிக்க முதலவர் விஜய் என்ன செய்ய வேண்டும் ?
தமிழ்
45
1.1K
3K
69.1K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
ஒரே பேராசிரியர் பல்வேறு கல்லூரிகளில் வேலை செய்வதாக கணக்கு காட்டி தங்கள் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வாங்கி இருக்கிறார்கள். பேராசிரியரே இல்லாதவர்கள் பெயர்களை நிரப்பி கணக்கு காட்டி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இந்த ஏமாற்று பேர்வழிகள் நடத்தும் தனியார் கல்லூரிகள் தான் நமது மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது என்று நினைத்தால் மனம் பதறுகிறது. இந்த ஏமாற்று பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் இவர்கள் மாணவர்களை ஏமாற்றுவதை அனுமதிக்க கூடாது. தனியார் கல்லூரிகளில் செய்யப்படும் ஆய்வுகளை வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிடுங்கள். கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களும் பெற்றோர்களும் அதை பார்த்து முடிவு செய்யட்டும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான அறப்போர் whatsapp குழுவில் இணைய - chat.whatsapp.com/JJTzH1z4fDqFfW… உங்கள் கல்லூரியில் போலியாக பேராசிரியர்களை கணக்கு காண்பிக்கப்படுகிறது என்றால் தொடர்புக்கு : arappor.it@arappor.org @CMOTamilnadu
Arappor Iyakkam tweet media
தமிழ்
9
234
435
10.2K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
கல் குவாரிகளில் எப்படி முறைகேடு நடைபெறுகிறது? இந்த முறைகேடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது? இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது? இந்த தண்டனையில் இருந்து கல் குவாரி கொள்ளையர்கள் எப்படி தப்பித்தார்கள்? திமுக ஆட்சியில் நடந்தது என்ன? விரிவான காணொளி - youtu.be/5TMT14W52jc
YouTube video
YouTube
Arappor Iyakkam tweet media
தமிழ்
42
673
1.9K
60.6K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
அறப்போர் புகார் கொடுத்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து டெண்டர் செட்டிங் வேலை செய்த பைனான்சியல் கண்ட்ரோலர் காசி பணி இடை நீக்கம்.
Arappor Iyakkam tweet media
தமிழ்
53
1.4K
3.6K
62.3K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறையின் இந்த செயலியை பயன்படுத்தி புகார்களுக்கு தீர்வு கண்டவர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா? சாலையின் நடுவே இருக்கும் ஒரு குழியை புகார் அளிக்க 4 பக்கத்தில் இருந்து பல்வேறு கோணங்களில் படம் எடுத்து போட்டால் தான் புகாரையே ஏற்றுக் கொள்வார்களாம். location link கொடுத்தால் போய் பார்க்க மாட்டார்களாம். அப்படியே கஷ்டப்பட்டு படம் எடுத்து போட்டால் பதில் கூட வராது. ட்விட்டர் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை பிரிவுக்காக ஒரு ஐடி உருவாக்கி படம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். தற்பொழுது அந்த அட்மின் கூட ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டார். தமிழக மக்கள் தினந்தோறும் பயன்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் புகார்களை தெரிவித்து தீர்வு காண வழி பிறக்குமா? @CMOTamilnadu @chennai_Highway
Arappor Iyakkam tweet media
தமிழ்
15
126
367
15.1K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
2 வருடங்களுக்கு முன்பாக, அண்ணா பல்கலைக்கழக தனியார் பொறியியல் கல்லூரிகள் பல போலி பேராசிரியர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்கள் தங்கள் கல்லூரியில் வேலை செய்வதாக கணக்கு காட்டி ஆய்வுக்குழுவுடன் கூட்டு சதி செய்து மோசடி செய்த விஷயத்தை அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி புகார் அளித்தது உங்களுக்கு நினைவிருக்கும். இது வரை அந்த மோசடியில் ஈடுபட்ட கல்லூரிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக் குழு மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் திமுக ஆட்சியில் நடந்த ஆய்வுகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அறப்போர் கோரிக்கை வைத்ததை அடுத்து ஆய்வுகளை வீடியோ எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த வீடியோ பதிவுகளை பொது மக்கள் பார்வைக்கு அரசு வைக்கவில்லை. அந்த வீடியோக்கள் இனியாவது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுமா? இந்த வருட ஆய்வு துவங்க இருக்கும் நிலையில், ஆய்வு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் வீடியோ பதிவு குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பதால் அறப்போர் இயக்கம் TVK அரசுக்கு மீண்டும் நினைவூட்டியது. இதையடுத்து தற்பொழுது ஆய்வுக்குழுக்கள் ஆய்வு செய்வதை வீடியோ எடுக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் பொது மக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், எந்த கல்லூரியில் எந்த பேராசிரியர் வேலை செய்கிறார் என்று தெரிந்து கொள்ள இது வசதியாக இருக்கும். ஆய்வு நடைபெறும் சமயத்தில் அதில் கலந்து கொண்டு அதற்கு பிறகு அங்கே வேலைக்கு வராத பேராசிரியர்கள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளவும் இது உதவும். லட்சக்கணக்கில் மாணவர்களிடம் கட்டணம் வாங்கி முறையான பேராசிரியர்களை நியமிக்காமல் ஏமாற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மாணவர்கள் மத்தியில் அம்பலப்பட இது பயன்படும். மேலும் கடந்த முறை அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் புகார் அளித்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்க வேண்டியதும் மிக அவசியம். இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு முன் பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்த கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்து கொள்வது தடை செய்யப்பட வேண்டும். அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் நடத்தும் கல்லூரிகள் என்பதால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மக்களை ஏமாற்றி தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை மாற வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் எந்த வகையிலும் இனி பாதிக்கப்படாது என்ற உத்திரவாதத்தை TVK அரசு மக்களுக்கு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் இந்த chat.whatsapp.com/JJTzH1z4fDqFfW… இணைப்பின் மூலம் அதற்குரிய அறப்போர் whatsapp குழுவில் இணையலாம். கல்லூரிகள் குறித்த உங்கள் புகார்களை arappor.it@arappor.org என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
Arappor Iyakkam tweet media
தமிழ்
8
247
583
13.2K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
வாம்மா லிமிடெட் டெண்டர் : சென்னை மாநகராட்சி. இயற்கை பேரிடர் சமயங்களிலும் மற்றும் ஒரு பெரிய பணி நடக்கும் போது அதற்கு உதவக்கூடிய வகையில் செய்யப்படும் சிறிய பணிகளுக்காக போடக்கூடிய Limited Tender என்ற வழிமுறையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டெண்டர்கள் போடப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களை மட்டுமே பயன்படுத்தி, 24 மணி நேரத்தில் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியிலும், அதற்கு பிறகு Model Code of Conduct முடிவடைந்த நாள் முதல் இன்று வரைக்கும் (48 limited டெண்டர்கள்) போடப்பட்ட அனைத்து லிமிடெட் டெண்டர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கடைசியாக போடப்பட்ட 10 கோடி மதிப்புள்ள 48 limited டெண்டர்கள் அறப்போர் புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. @CMOTamilnadu @chennaicorp @sameerangs
தமிழ்
15
245
601
19.2K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி அன்று ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களின் விவரங்களை நீங்கள் படத்தில் காணலாம். சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த டெண்டர்கள் மூலம் யார் என்ன மோசடி செய்தார்கள் என்று உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசு ஊழியர்களும், அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும். @CMOTamilnadu @chennaicorp @sameerangs @TVKVijayHQ
Arappor Iyakkam tweet media
தமிழ்
80
1.7K
3.3K
103.7K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் tntenders.gov.in இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு இயந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன்றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.
தமிழ்
37
730
2.2K
115.6K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆச்சரியப்பட என்ன இருக்கு? அவர்கள் ஏற்கனவே ஊழலில் கூட்டணி அமைத்தவர்கள் தானே! அதற்கு உதாரணம் தான் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஊழல். பாமர பொது மக்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களை வாங்குவதில் செட்டிங் செய்து கிறிஸ்டி என்ற நிறுவனத்திற்கு அதிக விலைக்கு டெண்டர் கொடுத்து அதன் மூலம் அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்படுத்தி இருந்தார்கள். அதாவது கிறிஸ்டி நிறுவனத்திற்கும் அவர்களுக்கு டெண்டர் செட்டிங் செய்ய உதவியவர்களுக்கும் 2028 கோடி லாபம். டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டது குறித்து மேலும் தெரிந்து கொள்ள் இந்த youtu.be/Pfe5VrmWPQY காணொளியை பாருங்கள். இந்த வீடியோவிற்கு பிறகு நடந்த மேலும் பல கோடி ஊழல் ஆதாரங்களையும் சேர்த்து ரூ 2028 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் 2021 இல் கொடுத்தது ஆட்சி மாற்றம் நடந்து திமுக அரசு பதவி ஏற்ற பிறகும் அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக திமுக ஆட்சியில் கிறிஸ்டி நிறுவனத்திற்கு மேலும் பல டெண்டர்கள் கொடுக்கப்படுகிறது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டணி இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டு மேலும் பல ஊழல்கள் மூலம் நம்மை கொள்ளை அடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். என்ன செய்ய போகிறது TVK அரசு? ஊழலில் திளைக்கும் கிறிஸ்டி நிறுவனம் இனி டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுமா? ரேஷன் ஊழல் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? @CMOTamilnadu
YouTube video
YouTube
Arappor Iyakkam tweet media
தமிழ்
22
443
917
18.3K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகள் எவ்வாறு போலியாக பேராசிரியர்களை கணக்கு காட்டி அரசையும், மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வந்தது என்று அறப்போர் இயக்கம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அம்பலப்படுத்தியதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இது குறித்து மேலும் விவரங்களுக்கு இந்த youtu.be/bYJvDmdzYUw?si… காணொளியை பாருங்கள். இது குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளித்ததை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போலி பேராசிரியர்கள் மீது பெயரளவுக்கு ஒரு FIR போடப்பட்டுள்ளது. ஆனால் இது வரை அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. போலி பேராசிரியர்களை கணக்கு காட்டி மோசடியாக அங்கீகாரம் வாங்கிய எந்த தனியார் பொறியியல் கல்லூரிகளும் தண்டிக்கப்படவில்லை. கடந்த வருடம் நடந்த ஆய்வின் போது வீடியோ ரெக்கார்டிங் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் சார்பாக அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து ஆய்வுகள் முழுவதும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறப்போர் கேட்டிருந்தது. ஆனால் இன்று வரை அந்த வீடியோக்கள் வெளியிடப்படவில்லை. இந்த முறை தற்பொழுது ஆய்வு துவங்கி இருக்கிறது. கடந்த முறை உத்தரவில் இருந்த வீடியோ ரெக்கார்டிங் தற்பொழுது உத்தரவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல்வேறு அரசியல்வாதிகளுக்கு சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதால் இந்த கல்லூரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்பொழுது மீண்டும் அவர்கள் மோசடி செய்யும் விதமாக ஆய்வு குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. வெளிப்படைத்தன்மையுடன் ஆய்வுகள் நடக்குமா என்று தற்பொழுது சந்தேகம் எழுகிறது. புதிதாக பதவி ஏற்ற TVK அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம் என்று உறுதி அளித்துள்ளதால், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் ஆய்வுகளில் அவர்களது வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறோம். ஆய்வுகளை வீடியோ ரெக்கார்டிங் செய்து அரசு இணையதளத்தில் வெளியிட உத்தரவிடுவீர்களா முதலமைச்சர் விஜய் அவர்களே! @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ இளம் தலைமுறையினரின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள TVK அரசு அவர்களின் கல்வித்தரத்தை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான இந்த வேலையை எந்த அரசியல் பாகுபாடும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான அறப்போர் whatsapp குழுவில் இணைய - chat.whatsapp.com/JJTzH1z4fDqFfW…
YouTube video
YouTube
Arappor Iyakkam tweet media
தமிழ்
21
267
528
11.7K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
Right to Service Act. தமிழ்நாட்டு மக்களுக்கு நெடுங்காலமாக மறுக்கப்படும் சேவை உரிமை சட்டம் இனியாவது வருமா..? @CMOTamilnadu
Arappor Iyakkam tweet media
தமிழ்
34
326
877
17.5K
Arappor Iyakkam
Arappor Iyakkam@Arappor·
எழில் நகர் துரைப்பாக்கம் வாழ் மக்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பிரச்னை அவர்களது தண்ணீர் பிரச்சனை.. மெட்ரோ வாட்டரை கேட்டல் TNUHDB என்று கை நீட்டுவதும் TNUHDB ஐ கேட்டால் மெட்ரோ வாட்டர் பிரஷர் இல்லை என்றும் மாற்றி மாற்றி கூறுகிறார்கள். பிரச்சனையை நேரில் ஆய்வு செய்து கண்டு பிடித்து தீர்வு காண்போம் என்று மெட்ரோ வாட்டர் AE கார்த்திக்கும் TNUHDB AE இந்திராவும் நேற்று முன் தினம் பேசி இருந்தார்கள். நேற்று இரவு பார்த்தால் எந்த ஆய்வும் செய்யாமல் புகாரை தீர்வு செய்ததாக முடித்து வைத்துள்ளனர் மெட்ரோ வாட்டர். ஆனால் வால்வு திறந்து இருந்தும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் விழவே இல்லை. இப்படி இருந்தால் மக்கள் எப்படி வாழ்வார்கள் என்று கொஞ்சமாவது இந்த இரு துறைகளுக்கும் அக்கறை இருக்கிறதா? இதில் அடிக்கடி TNUHDB தனது பக்கத்தில் மக்கள் வாழ்வை மேம்படுத்தியதாக பதிவு வேறு செய்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறது! முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் ஆட்சியிலாவது இந்த மக்களின் குரல் கேட்கப்படுமா? இவர்களின் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படுமா? இப்பொழுது உடனடியாக எழில் நகரில் தண்ணீர் வராத பிளாக்குகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்ய முடியுமா? இல்லை நீங்களும் இவர்களை ஏமாற்றப் போகிறீர்களா? @TNUHDB_Official @CHN_Metro_Water @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
13
188
308
10.8K