DevAnand.R.
2K posts


@heypriyanshere நாம மறந்தாலும், அந்த கொடநாடு வாசல்ல நின்னுட்டு வந்து, கைகட்டி தளர்பதி பேசிய வீடியோவைப் பார்க்கணும்னு தோணுது போல செல்லத்துக்கு....
தமிழ்


@saranya121289 எனக்கென்னமோ, டீச்சர் ப்ளவுஸ் டிசைன் காட்ட எடுக்கப்பட்ட வீடியோ போல தெரிகிறது....
தமிழ்

@mayavarathaan ஓரிஜினலைக் கண்டுபிடிக்க வழி சொல்லித்தர போகிறீர்கள் என ஆவலோடு படித்து, வலி வந்ததுதான் மிச்சம்.
நாங்கள் L G பெருங்காயத் தூள் வாங்குகிறோம், உண்மையான சரக்கு என நினைத்து...
தமிழ்

பிரபலமான கூட்டுப் பெருங்காய நிறுவனத்தின் பெருங்காயத்தூள் விற்பனை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ, அதே அளவு அதனுடைய போலியும் சந்தையில் நிறைய விற்பனையாகிக் கொண்டிருந்தன.
என்ன செய்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
விழி பிதுங்கிப் போனார்கள் அந்த நிறுவனத்தினர்.
ஒரு அதிபுத்திசாலி ஒரு ஐடியாவைத் தந்திருந்திருக்கிறார்.
"இது ஒரிஜினல்” அப்படின்னு அச்சிட்டு விற்பனைக்கு அனுப்புவோமா?
“ஏன்யா லூஸூ. அதை அப்படியும் அவனுங்களும் அச்சடிச்சுடுவாங்கல்ல?”
"ஹாலோக்ராம் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புவோம்”
இது நல்ல ஐடியாவாகப்பட்டது. ஒட்டி அனுப்பினார்கள். அடுத்த நாளே அதை விட கூடுதல் தெளிவான ஸ்டிக்கருடன் போலி பெருங்காயத்தூள் வந்தது.
அப்போதுதான் வேறொரு ஐடியா வந்தது.
“ஒவ்வொரு டப்பாவிலும் ஒரு க்யூ.ஆர். கோடு கொடுப்போம். அதை ஸ்கேன் செய்தால் ஒரிஜினலா இல்லையா என்று சொல்லி விடலாம். இப்போத்தான் எல்லாருமே கையில் மொபைல் போன் வெச்சிட்டிருக்காங்களே. இணைய இணைப்பும் இருக்கும்”
“அடடே.. செம்ம ஐடியாய்யா”
”அது சரி.. அதே க்யூ.ஆர். கோடை அவனுங்களும் காப்பி அடிச்சு வெச்சிட்டா என்ன செய்யுறது?”
“அதுக்கும் வழி இருக்குங்க. க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செஞ்ச உடனே அது வெப்சைட்டுக்குள்ளே நுழையும். அங்கே பேரு, மொபைல் நம்பரெல்லாம் வாங்கிக்கிட்டு அது நம்மளோட ஒரிஜினல் பெருங்காயமா, இல்லையான்னு சொல்லிட வெப்போம். ஒரு தடவை அப்படி ஸ்கேன் செஞ்சுட்டா அதோட அந்த க்யூ.ஆர். கோடை தடை செஞ்சிடுவோம். அதனாலே அதைக் காப்பி அடிக்க முடியாது”
“ப்ரில்லியண்ட் ஐடியா”
உடனே நடைமுறைப்படுத்தினார்கள். நிறைய செலவு செய்து விளம்பரப்படுத்தினார்கள்.
கடைகளில் வரிசையாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நேரே போய் அத்தனை க்யூ.ஆர். கோடுகளையும் ஸ்கேன் செய்து ஏதோ ஒரு பெயர், ஏதோ ஒரு மொபைல் நம்பர் கொடுத்து ஸ்கேன் செய்து விட்டு வந்து விட்டார்கள் எந்தப் புண்ணியவான்களோ.
பிறகென்ன.. வாடிக்கையாளர் போய் ஸ்கேன் செய்தால், “இது டூப்ளிகேட்டுங்க” என்று வந்துத் தொலைத்தது.
ஓரிரு வாரங்களிலேயே அந்த ஐடியாவும் புட்டுக்கிச்சு!
பழையபடி இப்போது அந்த நிறுவனம் அவ்வப்போது புகார் கொடுத்து சில விற்பனையகங்களிடமிருந்து போலிகளைக் கைப்பற்றி அதைச் செய்தியாக்குவதோடு சரி.
நாம் வாங்குவது போலியா, உண்மையா என்பது கடைக்காரருக்குத்தான் தெரியும்.
அதே நிறுவனம் இணைய தளங்கள் வழியே பெருங்காயத்தூளை விற்பனை செய்கிறது.
100 கிராம் பெருங்காயத்தூள் இந்தப் பதிவு எழுதும் போது :
Amazon : ரூ. 161
Zepto : ரூ. 153
Bigbasket : ரூ. 130
Flipkart : ரூ. 138
Jiomart : ரூ. 180
ஒரு பெருங்காயத்தூளிலேயே இத்தனை பிரச்னைகள். நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல்வேறு மளிகைப் பொருட்களில் எத்தனை எத்தனை போலிகள் இருக்கின்றன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
(கடந்த அக்டோபர் 10, 2025-ல் எழுதிய பதிவு)

தமிழ்

@saravanan_Ind1 இரண்டு வருடங்களுக்கு முன்......
ப்ளாஷ் பேக் :
கதிர் ஆனந்த் மற்றும் அருண் நேரு நேர்காணலின் போது, ஸ்டாலின் நிலைமை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீரோ!
அதுக்கும் , இதுக்கும் சரியாப்போச்சு....
தமிழ்

KN நேரு வின் கேள்வி : நாங்க 4 பேரு சீனியர் இருக்கும் போது நீ எப்படி துணை முதலமைச்சர் ஆன??
உதயநிதி : கலைஞர் குடும்பம் மட்டும் தான் துணை முதலமைச்சர் ஆக முடியும். மற்றவர்கள் எல்லாம் குடும்ப கொத்தடிமைகள் தான் என்று அப்பா சொன்னார்
துரைமுருகன் : அப்புறம் எதுக்கு நேர்காணலுக்கு வந்துருக்க?
உதயநிதி : வேற எதுக்கு.. தொண்டர்களையும் மக்களையும் ஏமாற்ற தான் 😉
தொண்டர்களையும், மக்களை லூசு நெனெச்சா கூட பரவாயில்லை... உட்கார்ந்து இருக்கிற துரைமுருகன், KN நேரு நிலைமையை நினச்சு பாருங்க.. 🤦♂️🤦♂️🤦♂️
@annamalai_k @ikkmurugan

தமிழ்

@teakkadai1 'சோ' என்ற மனிதரின் கொள்கைகள் தங்களோடு முரண்படலாம். அவர் பிரபலம் தான்.
தமிழ்

90களின் இறுதியிலும் 2000ன் ஆரம்ப காலகட்டங்களிலும் களை இழந்து கிடந்தது.
சாவி பத்திரிக்கையில் அடிக்கடி ராயர் மெஸ் பற்றி படித்து கேள்விப்பட்டு, ஒரு சுவை பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு நண்பர்களுடன் சென்று இருந்தேன்.
போகும்போதெல்லாம் நான் சென்னையில் பிரபலங்கள் சோ உட்பட இங்கே தான் சாப்பிடுவார்கள் என்று சொல்லிக் கொண்டே போனேன். (அவர்களைத்தானே பிரபலங்களாக அந்த கால பத்திரிகைகள் கட்டமைத்து இருந்தன).
ரவா தோசை ஆர்டர் செய்தோம். நண்பர்கள் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றார்கள்.
எண்பதுகளில் அந்த மெஸ் பற்றி எழுதும் பொழுது,
விறகு அடுப்பிலிருந்து புகை வந்து கொண்டிருக்கும் சுடச்சுட ஓடி வந்து இலையில் வைப்பார்கள் ஒரு சிலேட்டில் தான் கணக்கு போட்டு சொல்வார்கள் ரவா கிச்சடி அப்படி இருக்கும் என்றெல்லாம் படித்துப் படித்து,
நான் போயிருந்த சமயம் நான்கு மர டேபிள்கள் மட்டும். ஆள் அரவமற்ற மெஸ்ஸை பார்த்ததுமே பாதி சுவை போய்விட்டது...
Luckylook 💙@luckykrishna
பத்து, பதினஞ்சு வருசம் முன்னாடி ராயர் மெஸ்சுக்கு போறப்போ எல்லாம் ஆளரவமே இல்லாம இருக்கும். சாருநிவேதிதா மாதிரி சில இலக்கியவாதிகள் அவ்வப்போது வந்துப் போவார்கள். என்னிக்கு யூட்யூப் வந்ததோ, அன்னிலேருந்து ராயர் மெஸ்சுகளுக்கு அடிச்சது ஜாக்பாட்.
தமிழ்

@mayavarathaan Speed post - நியாயமான விலை, விரைவான சேவை, பாதுகாப்பான பட்டுவாடா...
தூதஞ்சலை தூக்கி எறிந்துவிட்டு, விரைவுத்தபாலை மட்டுமே பயன்படுத்துகிறேன்.
பக்கத்து மாநிலங்களுக்கு தூதஞ்சல் அனுப்பினால், கட்டணம் அதிகம். விரைவு அஞ்சலில் ஒரே விலை .
தமிழ்

தொண்ணூறுகளுக்கு முன்பெல்லாம் தகவல் தொடர்பு என்றாலே அது பதினைந்து பைசா தபாலட்டை மட்டுமே பிரதானம். மஞ்சள் நிற அட்டையில் ஒன்றரை பக்கம் நுணுக்கி, நுணுக்கி ஒட்டு மொத்தக் குடும்ப விஷயங்களையும் எழுதி அனுப்புவார்கள். பிள்ளையார் சுழி, தேதி, இடம் தவிர வேறு கூடுதல் தகவல் எழுத ஒரு இன்ச் இடம் கூட பாக்கி இருக்காது. பின் பக்கம் பாதி முகவரிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். நடுவில் கோடு போட்டிருப்பதால் அதைத் தாண்டி யாரும் எழுத மாட்டார்கள். அப்படி எதுவும் எழுதினால் கடிதம் போய்ச் சேராது என்ற பயம். பதினைஞ்சு காசு வேஸ்டாகிடும்.
ஒரு சிலர் முகவரி எழுதுவதே ஒரு தனிக்கலவர பூமியாக இருக்கும்.
K.K.R. முனுசாமி, S/o A.K.K. ராமசாமிப் பிள்ளை, புதிய நெம்பர் 22, பழைய நெம்பர் 18A,, ஒற்றைக்கல் அக்ரகாரத் தெரு, புத்திரபாக்கியநல்லூர் கிராமம், புத்திரபாக்கியநல்லூர் (P.O.), நன்னிலம் தாலூகா, தஞ்சை ஜில்லா, பின்கோடு 610105, தமிழ்நாடு, இந்தியா
- இத்தோடு நிறுத்தமாட்டார்கள் சிலர். மார்த்தாண்டம் செட்டியார் மளிகைக்கடைக்கு எதிர்ப்புறம் உள்ள சந்து வழியாகச் சென்றால் இடது பக்கம் மூன்றாவது வீடு என்று பின்குறிப்பெல்லாம் வேறு நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருக்கும்.
புத்திரபாக்கியநல்லூரில் மொத்தமாகவே 30 வீடுகள் இருந்தால் அதிகம். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் அந்தக் கடிதத்தைக் கொண்டு கொடுக்கும் தபால்காரருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நீட்டி முழக்கி முழு முகவரியையும் எழுதத் தேவையில்லை. முனுசாமி, புத்திரபாக்கியநல்லூர், நன்னிலம் என்று மட்டும் எழுதியிருந்தாலே மிகத் துல்லியமாகக் கொண்டு வந்து சேர்த்து விடுவார். ஊரிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட முனுசாமி இருந்தால் எந்த முனுசாமிக்கு எப்போது யாரிடமிருந்து எப்படிக் கடிதம் வரும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி.
ஊரில் வெள்ளெழுத்து வந்த பல பெரிசுகளுக்கும், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கும் தபால்காரர்தான் கடிதம் வாசித்துக் காட்டுவார். சுற்றுவட்டாரக் கிராமங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களின் அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் அவருக்கு அத்துப்படியாக இருக்கும். கொஞ்சம் வசதி வாய்ப்பு வாய்ந்தவர்கள், நீல நிற 35 பைசா இண்லேண்டு கவரை வாங்கி அதில் நுணுக்கி நுணுக்கி அதிகமாக எழுதி ஒட்டி அனுப்புவார்கள். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது பிரிக்கும் வரைக்கும் தெரியாது. ஆனால் அதைக் கிழியாமல் பிரிப்பதே ஒரு தனிக்கலை. அதற்கும் மேல் என்றால் foolscap முழுத் தாளில் எழுதி காக்கி நிறக் கவரில் 50 பைசா தபால் தலை ஒட்டி அனுப்புவார்கள். எடைக்குத் தகுந்த ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும். சில பிரகஸ்பதிகள் அதில் ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பித் தொலைப்பார்கள். வீட்டில் கொண்டு வந்து கொடுத்து அபராதத்துடன் இரட்டிப்புத் தொகையை வசூலித்துச் செல்வர்.
பொதுவாக பெரிய கிராமங்களில் தபால்காரர் வந்து விட்டுச் சென்ற ஒன்றரை மணி நேர வித்தியாசத்தில் மணியார்டர்க்காரர் வருவார். பல இடங்களில் தபால்காரரே மணியார்டர்க்காரராகவும் இருப்பார். வெளியூரிலிருந்து அனுப்பப்படும் தொகையை எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பவர் அவர். அரசில் அதற்காக அவருக்கு வழங்கப்படும் சம்பளம் தனி என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு வந்து தரும் ஐந்து ரூபாய், பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு காலணா, எட்டணா என்று அவர் பெரும் டிப்ஸை வைத்தே அவர் கூடுதலாக இரண்டு குடும்பங்களைக் கவலையின்றி நடத்தலாம்.
தீபாவளி, பொங்கல் சமயங்களில் வாழ்த்து அட்டைகள் குவியும். அலுக்காமல், சலுக்காமல் அத்தனையையும் கொண்டு வந்து தருவார்கள் அவர்கள். எப்போதாவது அதில் சிலவற்றைத் தூக்கி எரிந்து விட்டதாக செய்திகள் புகைப்படங்களுடன் நாளிதழ்களில் வெளியாகும். 99% வந்து சேர்ந்து விடும்.
தபால் வர ஓரிரு நாட்கள் தாமதமாகலாமே தவிர, வராமல் இருந்ததில்லை. அதுவும் எப்போதாவது அனுப்பப்படும் பார்சல்களுக்கு முழு முன்னுரிமைக் கொடுத்து கொண்டு வந்து தரப்படும்.
“முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை”, “வூடு பூட்டிருக்கு” என்றெல்லாம் பொய்க்காரணங்கள் சொல்லி கடிதங்கள் கொடுக்காமல் விடப்பட்டதில்லை.
தொண்ணூறுகளில் ப்ரொஃபஷனல் கூரியர் கம்பெனி முழு செயல்பாட்டுக்கு வந்தது.
“மாயூரத்தில் ஈவினிங் 7 மணிக்குள்ளே கொடுக்குற கடுதாசி மறுநாள் காலையிலே 11 மணிக்கெல்லாம் சென்னையிலே வீட்டுலே கொண்டு போய்க் கொடுத்துட்றாங்க” என்ற ஆச்சரியத்தில் ஆரம்பித்தது அவர்களுடைய சேவை.
அஞ்சல் கட்டணத்தை விட கூரியர் கட்டணம் மிக அதிகம் என்றாலும் அதனுடைய வேகத்துக்காகவே கூரியரைப் பயன்படுத்த ஆரம்பித்தவர்கள் அதிகம். பிறகு வந்தது எஸ்.டி. கூரியர், டிடிடிசி என்று வரிசையாக நிறைய.
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில் போட்டி காரணமாக இவர்களெல்லாம் ஓரளவு ஒழுங்காகத்தான் செயல்பட்டனர்.
ஆனால் இப்போதெல்லாம் இந்தக் கூரியர் நிறுவனத்தினர் செய்யும அட்டூழியத்திற்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது.
மாயூரத்திலிருந்து கோவைக்கு எந்தவொரு கூரியர் நிறுவனத்தில் அனுப்பப்பட்ட சிறு பார்சலும் முழுமையாக வந்ததாக, நேரத்திற்கு வந்ததாக, வந்து சேர்ந்தும் உடனே கொண்டு வந்து கொடுத்ததாக வரலாறு, புவியியல், அறிவியல் எதுவுமே இல்லை.
அலட்சியம்.. அலட்சியம்.. அலட்சியம்.. ஒட்டு மொத்த தனியார் கூரியர் நிறுவனங்களும் அலட்சியத்தில் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. எங்கு புகார் எடுத்துச் சென்றாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கென்று தனிச்சட்டம் எதுவும் இந்த நாட்டில் இருக்கிறது போல!
நிஜமாகவே இவர்களெல்லாம் கூரியர் தொழிலைத்தான் செய்கிறார்களா. அல்லது வேறு எதாவது செய்து கொண்டு வெளியில் கூரியர் என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறார்களா என்றெல்லாம் கூட சந்தேகம் அடிக்கடி எழும்.
நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டாலும் கண்டு கொள்வதில்லை. நுகர்வோர் வழக்கு தொடருவோம் என்று தகவல் அனுப்பினாலும் கண்டு கொள்வதில்லை. எருமை மாட்டின் மீது மழை பெய்தால் அது கூட சற்று அசையும். ஆனால் இவர்கள் காட்டும் அலட்சியம் ரொம்பவே அதிகம்.
இதற்கெல்லாம் பதிலாக அஞ்சலக பதிவுத் தபால் / ஸ்பீடு போஸ்ட்டே தேவலாம் போல என்ற நிலைக்குப் பலரைக் கொண்டு வந்து விட்டனர் இந்த அயோக்கியர்கள்.
அரசியல் பின்புலம், நினைத்துப் பார்ப்பதை விட அதிக வருமானம்.. இதெல்லாம் வந்த பிறகு சாதாரண பொதுஜனங்களெல்லாம் அவர்களுக்கு அலட்சியமாகப் போய் விட்டார்கள். இத்தனைக்கும் கட்டணமாக வசூலிப்பது கம்மி எல்லாம் இல்லை.
அதே போல ஒரே மாதிரியான கட்டணமும் கிடையாது. அதாவது ஒரே ஊரிலேயே வெவ்வேறு இடங்களில் ஒரே நிறுவனத்திம் முகவர் வெவ்வேறு ஆட்களுக்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றனர். சற்று பெரிய பார்சலாகக் கொடுத்தால் மூன்று மடங்கு அதிகக் கட்டணம்.. ப்ரீமியம் சர்வீஸ் என்றெல்லாம் மிளகாய் அரைக்கின்றனர். ஆனால் அதுவும் உடைந்து போய்தான் வந்து தொலைக்கிறது பெரும்பாலும். சமயங்களில் பிரித்துப் பார்த்து விட்டு, திரும்ப ஒட்டியெல்லாம் கொண்டு வந்து தருகின்றனர்.
பார்சல்களைப் பிரித்து அதில் எதுவும் வைத்து ஒட்டி, திரும்ப அதைப் பிரித்து எடுத்து விட்டு நம்மிடம் கொண்டு வந்து தருவதால்தான் தாமதமாகிறதோ என்ற சந்தேகமெல்லாம் கூட எழுந்துத் தொலைக்கிறது. காரணம்.. அந்த நிறுவன ஊழியர்களின் அதீத அலட்சியம்தான் காரணம்.
பல தனியார் நிறுவனங்கள் இப்போதெல்லாம் அரசு நிறுவனங்களை விடக் கேவலமாகத்தான் செயல்படுகின்றன. அட.. வர வர அமேஸான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள்கூட இப்படித்தான் செய்கின்றனர். இதையெல்லாம் ஒப்பிடும் போது மீஷோ செயலியில் விலையும் குறைவு. ஒவ்வொன்றுக்கும் OTP கொடுத்து டெலிவரி செய்ய வேண்டும் என்பதாலும், அப்படி டெலிவரி செய்தால் மட்டுமே டெலிவரி நபருக்குச் சம்பளம் என்பதாலும் அதில் சரியாக வந்து விடுகிறது.
இல்லையென்றால் கூரியர் ஆட்களுக்கு அதிகக் காசையும் கொட்டி அழுது விட்டு அவனுங்களோட பஞ்சாயத்து செய்வதே பலருக்கு வழக்கமாகி விட்டது.
நான் பல்லாண்டு காலமாக இந்த அலட்சியப் பேர்வழிகளை உபயோகிக்காமல் அஞ்சலகம் வழியாகவோ, நண்பர்கள் வழியாகவோ, பேருந்திலோ தேவையானவற்றை அனுப்புகிறேன். அதுவும் கூட ரொம்பக் குறைவுதான். அதே போல யாராவது எனக்கு எதுவும் கூரியரில் அனுப்புவதாகக் கூறினால் அது அப்படியே வந்து சேரும் என்ற நம்பிக்கையை வைத்துக் கொள்வதில்லை. வந்து சேர்ந்தால் நமக்கு நல்ல நேரம் என்று எடுத்துக் கொள்வதால் டென்ஷன் இல்லை.
#மீள்பதிவு

தமிழ்

@idhayachan35202 @sharmilacute10 Age doesn't matter for matter....
English

@SavukkuOfficial அப்போ திமுக கூட்டணியில் யார் நின்றாலும் MLA ஆகிவிடுவார்கள், எனக்கூறுகிறீர்கள்.
இந்தப்பதிவை எடப்பாடியார் பார்க்காமல் இருக்கக்கடவது.
தமிழ்

@Bacteria_Offl நாற்பதுக்கு மேல் உள்ள ப்ராப்ளம் பற்றியும் சொல்லி முழுமை பெறுங்கள்.
தமிழ்

படத்துல பாக்க நல்லாருக்கும்... உடம்பு முடியலனா மாத்திரை வாங்கி தர கூட ஒருத்தனும் இருக்க மாட்டான், அப்பவும் நம்ம தான் சமைக்கணும் இல்ல ஆர்டர் போடணும்...
ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாச்சும் குப்பைய வெளிய போடணும், வீட்ட கிளின் பண்ணனும், சமைக்கணும், பாத்திரம் கழுவனும், துணி துவைக்கணும், எல்லா வேலையும் ஒரே ஆள் செய்யணும்...
இந்த physical torture பத்தாதுனு மனசு விட்டு பேச ஒருத்தர் கூட இல்லாம இருக்க மெண்டல் பிரசர் இருக்கே... இதெல்லாம் வார்த்தைல சொன்னா புரியாது, அனுபவிச்சா தான் புரியும்...
இதெல்லாம் 40 குள்ள... அதுக்கு மேல இருக்க ப்ராப்ளம் வேற...
тαмιℓ🕶️@itz_me_TP
தனியா Theatre கு போறது தனியா Hotel கு போறது தனியா Room la இருக்குறது எல்லாம் சாபம்னு நினைச்சிட்டு இருக்காங்க.. ஆனால் அதெல்லாம் ஒரு தனி Feel Athu Oru போதை... 🥺🚶🏻🤦🏻
தமிழ்

@vijaymurugan_ @poopoonga இங்கு சுலபமாக எம்பி க்கள் கிடைத்து விடுகிறார்களே...
தமிழ்

@narsimp ஏழு ஸ்வரம் தானே சார்....
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி...
காட்சியமைப்பு மட்டுமே மாற்றிக்காட்டும்.
ஆனால் 'கப்புள் ப்ரெண்லி' முதல்பாதி புது வசந்தத்தை அடியொற்றி இருந்தது.
இந்த சிந்தனைகள் வராமல் இருந்தால், படத்தை (எந்த ஒரு) ரசிக்கலாம்.
தமிழ்

@dindiguldeva 👌. ஆனா இப்பிடிப்பாத்தா எல்லாப் படத்தையும் சேர்த்துரலாமே. வணக்கம் சென்னை, etc
தமிழ்

Couple Friendly. எளிய அன்பிற்கு எப்போதும் ஓர் இடம் உண்டு என்பதை இதுபோன்ற படங்கள் வரும்போதெல்லாம் உணரலாம். வேறு மொழிப்படங்களில் தமிழ் பேசுபவர்களின் மொழியை, பெயிண்ட் விளம்பரத்தில் தலதோனி பேசுவதுபோல் டப்பிங் ஆக்குவார்கள்.இதில் அப்படி அல்லாமல் இயல்பான சென்னை கதைக்களம். நாயக நாயகி அறிமுகம் ஆகக் காரணம் mobileApp என இன்றைய இயல்பில் துவங்கி, அவர்களுக்குள் முகிழ்க்கும் காதலும் இயல்பாகவே நிகழ்வதைக் காட்டியது நல் திரைமொழி.
நன்றாக இருந்த தாடியை ட்ரிம் செய்த மொழுக் காட்சியில் இருந்து திரைக்கதையும் அதுவரையிலான அடர்த்தியை இழக்கிறது.இத்தனைக்கும் த்ரில்லர் கோணம் போல் ரிசார்ட்/கேமிரா என நான்-லீனியராக நகரும்பொழுது ஏதோ நிகழும் போல என நினைத்தால், (தோழி ப்ரீத்தி பாத் டாப்பில் முதிர்காதலனுடன் இருக்கும் காட்சியை எல்லாம் கணக்குப்போட்டு ஏதோ க்ரைம் த் ரில்லர் ஆகப் போகிறது என நினைத்தவர்கள் கையைத் தூக்கவும்) நாம் நினைத்ததை விட பெரிய ட்விஸ்ட்டு நிகழ்வோடு படம் நகர்..ந்..து முடிகிறது.
ஆம், விடைபெறுதல்களால் ஆனது இவ்வாழ்வு.

தமிழ்

சு.வெங்கடேசன் இவர் உதயசந்திரனின் நெருக்கமான நண்பர்.இவர் மார்கசிஸ்ட் கட்சி மாநில குழுவில் குழுவை சேர்த்து,திமுக கூட்டணியில் இருந்து பிரித்து தவெக கூட்டணிக்கு செல்ல பலமாக சண்டை போட்டிருக்கிறார்.காரணம் இவர் எழுதிய வேள்பாரி நாவலை விஜய் படமாக்க சம்மதித்திருந்தார். அ.இ.பொ.செ.பேபி முடியாது என அ.இ. கட்சி லைனை சொல்லி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியை தக்க வைக்க போராடியுள்ளார்
தமிழ்

@narsimp பு வ - நான்கு வாலிபர்களாடு இளம்பெண்
க ப் - ஒரு வாலிபரோடு இளம்பெண்
பு வ - காதலன் சந்தேகம்
க ப் - காதலி அப்பா முரண்
பு வ - நண்பர்கள் உயர துணை.
க ப் - காதலன் உயர துணை.
முடிவு மட்டும் மாற்றம்..
இந்த காலத்திற்கு தேவையான ப்ரெஷ் காட்சிகள் (கண்ணியத்தோடு)
எனக்கு தோன்றியது.
தமிழ்

@giridhur @ChatGPTJob அறுபடை வீடு - திரு ஆவினன் குடி தான்.
ஆனால் பெரும்பாலானோர் மலைக்கோயில் செல்லத்தான் விரும்புகின்றனர்.
தமிழ்

@ChatGPTJob ஜன நாயகத்தை
பண நாயகமாக
பிண நாயகமாக
மாற்றிவிட்டது திராவிட மாடல் 😎🙃
தமிழ்

பழனி சென்று இருந்தோம் குடும்பத்தோடு.. பல வருடங்கள் கழித்து..ஆனால் மிகவும் கசப்பான அனுபவம். பார்க்கிங்கில் ஆரம்பித்து அனைத்து இடத்திலும் பணம் பணம் பணம்..
வின்சும் சரி ரோப் காரும் சரி சம்பாரிக்க மட்டுமே.. அதில் இடம் பிடிக்க 2 மணி நேரம் நிற்க வேண்டும்..குழந்தையோடு சென்றதால் அனுமதிக்க கேட்டால் ..ஒருவர் மட்டுமே குழந்தையோடு. அதுவும் 3 மாத குழந்தைக்கு தான் அனுமதி..
எவ்வளவோ கேட்டும் அங்கிருந்தவர்கள் மிகவும் அதிகாரத்தோடு நடந்து கொண்டார்கள். அதே சமயம் கரை வேட்டியோடு வந்தவர்களை முதலில் அனுமதித்தார்கள். அறநிலைய துறையின் கேவலமான நிர்வாகம்.. முருகனை மனதில் நினைத்து கொண்டு வெளியே வந்து ஒரு இளநீர் கடை வைத்தவரிடம் ஆதங்கத்தை கொட்டினேன்..அவரும் வேதனையோடு ஒத்து கொண்டார்.
பிறகு உண்மையான பழனி தண்டாயுதபானி திருஆவினங்குடியில் தான் இருக்கார்..அங்கு செல்லுங்கள்.. இது வெறும் மலை மட்டுமே என்று கூறினார். முருகன் வழி காட்டி வர சொல்லுவதாக எண்ணி கொண்டு நேராக ஆவினங்குடி போய் கந்தனை தரிசித்து விட்டு , சரவண பொய்கையையும் பார்த்து விட்டு கிளம்பினேன்..
இதே நான் சிதம்பரம் நடராசரை தரிச்சிக்க சென்ற போது கூட்டம் இருந்தது..ஆனால் ஒரு பைசா செலவழிக்கவில்லை..நேராக போய் நடராசரை தரிசிக்க முடிந்தது எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாமல்..
அரசுக்கு கோயில்கள் ஒரு வருமானமே தவிர அது ஆன்மிக வளர்ச்சிக்காக இல்லை.. மனது மிகவும் கஷ்டமாக இருந்தது..இந்துக்கள் எந்த அளவு ஏமாற்றபடுகிறார்கள், துண்புறுத்தபடுகிறார்கல் என்று புரிந்தது. பக்தியிலும் பணம், பதவியும் மட்டுமே முன்னிலைபடுத்த படுகிறது என்பது மோசமான செயலாகும்..

தமிழ்

@giridhur @ChatGPTJob பழனியில் பல தசாப்தங்களாக நடந்துகொண்டு இருக்கிறது.
திருச்செந்தூரில் இன்னும் கொடுமை...
தமிழ்

@SwethaLittle_ சினிமா காரங்களும், டிவி ப்ரோக்ராம்ஸ்லையும் காதல் ஆஹா, ஓஹோ என்று புழந்து தூறி இருப்பாங்க. பட் ரியாலிட்டி ல லவ் லைஃப் ந வேதனை. சொல்ல முடியாத நரகம்.
தமிழ்












