செய்தி வாசிப்பாளராக @NewsTamilTV24x7 தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர், சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்கள், உடல் நலக் குறைவால் இன்று காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஊடகத் துறையில் பல சாதனைகள் படைக்கும் கனவுகளோடு இருந்த சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்களை, இளம் வயதிலேயே பறிகொடுத்திருக்கும் அவரது, குடும்பத்தினருக்கும், @NewsTamilTV24x7 ஊடக நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இந்தக் கடினமான நேரத்தில் இருந்து அவர்கள் மீண்டு வரவும், அவரது ஆன்மா சாந்தியடையவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, திருமதி.பவதாரணி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி..!
இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனைை அடைந்தேன்.
தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#Bhavadharani@ilaiyaraaja
@thisisRaj_ விழா எந்த வெள்ளமும் இல்லாமல் மிக சிறப்பாகவே நடைபெற்றது. மண்டபத்தை காலி செய்யும் போது உள்ளே வெள்ளமும் வந்தது. எல்லோரும் நலம். கடவுளுக்கு நன்றி!
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண் மருத்துவ சிகிச்சை, இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தவர். கண் மருத்துவக் கல்விப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். உயரிய பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.
டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு, நம் சமூகத்துக்கும், மருத்துவ உலகுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
@Shibin_twitz@annamalai_k ரீல் அண்ணாமலையின் சைக்கிள் அவரை 1996 ல் அடித்த அடி அப்படி..... அதனால் அண்ணாமலை என்றால் இயற்கையாகவே அவருக்கு ஒரு அலர்ஜி..... இப்ப இந்த ரியல் அண்ணாமலை பேரைக்கேட்டா கொஞ்சம் உதறல் எடுக்கத் தானே செய்யும்... இருந்தபோதும் ஒரு சிறந்த மூத்த அரசியல்வாதியாக அவரை மதிக்கவே தோன்றுகிறது...
தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு பத்திரிகை நிருபர் வைகோ அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்.
அதுக்கு வைகோ அண்ணாமலையா அது யார் ?அவர் எனக்கு தெரியாது என்று ஒரு பொய்யை சொல்லுகிறார் .
அதாவது அண்ணாமலை அண்ணாவை இழிவு , கேவலப்படுத்துகிறாராம் .
70 ஆண்டு காலம் அரசியலில் இருந்தும் யாரால் தூக்கி எறியப்பட்டாயோ அவன் காலிலே விழுந்து கிடந்து சுயமரியாதை இல்லாத ஒரு கேவலமான அரசியலை செய்து கொண்டிருக்கீங்க ,
சொந்த சின்னத்தில் நிற்க கூடாது ஒரு டிக்கெட் தான் தருவேன் என்று சொன்ன பிறகும் பல்லை இழித்து கொண்டு வாங்கி கொண்டு கட்சியை இன்னொரு கட்சிக்கு அடகு வைத்து கொண்டு ஒரு மலிவான அரசியலை செய்து கொண்டிருக்கீங்க .
ஆனால் நீங்க யார் என்று தெரியாது என்று சொன்ன அந்த இளைஞன் ஒரு கட்சியில் சேர்ந்த வெறும் இரண்டு ஆண்டில் அந்த கட்சி யாருடைய தயவிலும் நிற்காமல் தனியாக மக்களை தேர்தலில் சந்திக்கும் என்று அறிவிக்கிறார் .
நீங்கெல்லாம் தமிழக அரசியலில் ஒரு தேவையில்லாத ஆணி .
சிறு பிராயத்தில் இருந்து தர்மத்தையும் தயாள குணத்தையும் எங்களுக்கு ஊட்டி வளர்த்து தனது இறுதி காலம் வரை எங்களை தர்மத்தின் பாதையில் தொடர்ந்து வழிகாட்டிய எனது தாயார் கிருஷ்ணவேணி அம்மாள் சற்று முன்னர் சிவபதம் அடைந்தார்.
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநிலத் துணை செயலாளர் சேலம் மாநகரைச் சார்ந்த தம்பி சிவா அவர்களின் திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் திடுமென இன்று காலமாகிவிட்டார். கட்சியின் மீதும் தலைமையின் மீதும் மிகுந்த பற்றுதலைக் கொண்டவர். கட்சியின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது பங்கேற்பவர். அவரை இழந்திருப்பது மிகுந்த துயரளிக்கிறது. மறைந்த தம்பி சிவாவுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம்பி சிவா அவர்களின் அருமைத் துணைவியாரைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினேன்.
இயக்கத்தின் முன்னணித் தோழர்கள் அனைவரும் அவரது நல்லடக்க நிகழ்வில் பங்கேற்றனர்.
#VCK#JunctionShiva
மீள் பதிவு:
தம்பி இராதாகி ருஷ்ணன் மறைந்து 28 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மதுரை அருகே வாடிப்பட்டியில் திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கி மரணமடைந்தான். அவன் சென்ற இருசக்கர வண்டியில் அரசுப் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலைநசுங்கி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
அன்று கோ. புதூரில் ஒரு வீட்டு மொட்டை மாடியில் மாவீரன் மலைச்சாமி நினைவு நாள் கொண்டாடுவது பற்றி முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்து கொண்டிருந்தேன். இரவு 8 மணி இருக்கும். அப்போது அத்தகவலைச் சொன்னார்கள். தம்பி இராதாகிருஷ்ணன் விபத்தில் இறந்துவிட்டான் என்றும், அவனுடன் சென்ற அறிவழகன் என்பவர் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினர். மூளை நரம்புகள் வெடித்ததைப் போன்று நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்கிற கவலையும் அச்சமும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. மனமுடைந்து நொறுங்கிப் போனேன். அவனைப் பிணமாகப் பார்க்க மனம் ஒப்ப இயலாத நிலையில் விபத்து நடந்த இடத்திற்கே நான் போகவில்லை. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிணக்கூறாய்வு(போஸ்ட் மார்ட்டம்) பொழுது விடிந்த பின்னர்தான் நடக்குமென்றும் அதன்பிறகு அங்கிருந்து உடலைப் பெற்றுக்கொண்டு திருச்சி வழியாக அங்கனூர் வந்து சேர்கிறோம் என்றும் இயக்கத்தோழர்கள் மற்றும் தலித் அல்லாத சமூகங்களைச் சார்ந்த சில நண்பர்களும் கூறினர்.
ஆகவே நான் அடுத்த நாள் பகலில் மதுரையிலிருந்து அங்கனூருக்குப் போனேன். தம்பியின் உடலும் வந்து சேர்ந்தது.
இதற்கிடையில் அங்கே ஒரு வதந்தி பரவியிருந்தது.
தம்பி இராதா இறந்துபோனதாக சொல்வது பொய்யென்றும் திருமாவளனைத்தான் யாரோ கொலை செய்துவிட்டு உண்மையை மறைக்கிறார்கள் என்றும் ஊர்முழுதும் வதந்தி பரவியிருந்த விவரம் பின்னர்தான் தெரிய வந்தது.
நான் அங்கனூரில் இறங்கியதும் என் அப்பாவும் அம்மாவும் கதறி அழுது மண்ணில் விழுந்து புரண்டனர். பதறி, கதறி அழுத எனது தந்தை திடீரென மயங்கி விழுந்தார். அப்போது சுற்றி நின்றவர்கள் தான் சொன்னார்கள். "உன்னைக் கொலை செய்து விட்டார்கள் என்றுதான் தகவல். உன்னை உயிரோடு பார்த்தபிறகு தான் இறந்தது தம்பி இராதா தான் என்று நம்பினோம். உனக்கு ஒன்றுமில்லையே அது போதும் " என்றனர்.
அது இன்னும் ஆழமாக எனக்குள் வலியை ஏற்படுத்தியது. நான் உயிரோடு இருக்கிறேன் என்பதாலேயே தம்பி இராதாவின் மரணத்தை யாரும் பெரிதாகக் கருதவில்லை என்கிற வேதனை மேலும் கடுமையாக என்னை வாட்டியது.
அங்கனூரை ஒட்டியுள்ள சின்னாற்றங்கரையில் பொழுது மறைந்து இருள் சூழும் வேளையில் தம்பி இராதாவின் உடலை அடக்கம் செய்தோம்.
கடைசி வரையில் அவன் முகத்தைப் பார்க்கவே என்னால் இயலவில்லை.
இன்னும் அந்த குற்ற உணர்ச்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது. என்னால் அவன் சாவுக்கும்கூட உரிய மதிப்பளிக்கப்படவில்லையே என்று என் நெஞ்சை இன்றும் வருத்திக் கொண்டேயிருக்கிறது
'அவன் எனது தம்பி' என்பதைவிட ,விடுதலைச் சிறுத்தைகளின் தொடக்க காலத் தொண்டன் என்பதே சரியாகும். எனக்கு உதவியாக இருந்தான். என்னைச் சந்திக்க வருவோருக்கும் பணிவிடைகள் செய்தான். மதுரை பகுதிகளில் நடைபெற்ற இயக்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்றான். அன்றும்
கூட அலங்காநல்லூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னரே விபத்தில் சிக்கி மரணமடைந்தான்.
அவன் சாவு என்னைக் குற்ற உணர்ச்சிக்குள் வீழ்த்தியது.
அந்த துக்கத்திலிருந்து மீள இயலாத நிலையில் ஓரிரு மாதங்கள் மிகவும் வேதனைப்பட்டேன். என் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நான் துயரத்தில் வீழ்ந்ததால் என் பெற்றோர் எனக்கு ஆறுதல் கூறினார்கள். அதன் பின்னர் மீண்டெழுந்து எனது அரசியல் பணிகளை தொடர்ந்தேன். தொடக்கக்காலத்தில் களப்பணிகளில் எனக்கு உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு எனது செம்மாந்த வீரவணக்கம்!
@tamiltalkies@ebiiruban போன வருடம் எந்த நடிகருக்கு கொடுத்தாங்க ஸார்... அது வாங்கப்பட்டது என்றால் இதுவும் வாங்கப்பட்டது, அது கொடுக்கப்பட்டது என்றால் இதுவும் கொடுக்கப்பட்டது...
சந்திரமுகி 2 ட்ரைலர் டைட்டில் கார்டில் ராகவா இருக்கு. ஆனா லாரன்ஸ் இல்ல. படத்துல ஹீரோயின் கங்கனா ரனவத். பாஜக அனுதாபி.
தேசிய விருது வாங்க ஆசை இருப்பதால் லாரன்ஸ் எனும் பின்பாதி பெயரை நீக்கியுள்ளாரா ராகவா ஜி? - வலைப்பேச்சு கேள்வி.
ஓஹோ அப்படியா விசயம்? ஐயாவோட நிஜப்பெயர் லாரன்ஸ். ரஜினியோட 100 வது படம் ராகவேந்திரா. அதனால ராகவா எனும் முன்பெயரை சேர்த்தார். தன்னை ராகவேந்திரா சாமியின் தீவிர பக்தன் என்கிறார்.
ரஜினி சார் ஆன்மீகவாதி. பாஜக அரசின் நண்பர். ராகவா ஜீ இந்து மத அடையாளங்களுடன் இருக்கிறார். ஆனால் தன்னை கிறித்தவராக அடையாளம் காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
தற்போது நிஜப்பெயரான லாரன்ஸ் என்பதும் ட்ரைலரில் நீக்கப்பட்டுள்ளது.
All the dots are perfectly connected.
இதற்கு முன்பு மொட்டசிவா கெட்டசிவா படத்தின் டைட்டிலில் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ராகவா லாரன்ஸ் என்று வந்தது. கடும் எதிர்ப்பு வந்ததும் அதை நீக்கினார்.
ஆனால் சந்திரமுகி 2 ட்ரைலர் வெளியீட்டில் சூப்பர் ஸ்டார், மாங்காய், தேங்காய் கதை சொல்கிறார்.
மாங்கா மரத்துல திடீர்னு ஏன் மக்கள் சூப்பர் ஸ்டார் எனும் தேங்காய் காய்ச்சது ராகவா ஜி?
கேட்டா.. அந்த டைட்டிலை எனக்கே தெரியாம வச்சிட்டாங்கன்னு சொல்லுவீங்க. அதான?
ஹீரோவுக்கு தெரியாம இதெல்லாம் நடக்கும்னு நம்புற அளவுக்கு நாங்க மாக்கான்கள் இல்ல ஜி.
இனி நம்ம ராகவா ஜியோட நடவடிக்கைகளை உன்னிப்பா நோட் பண்ண வேண்டியதுதான்.