
Dr Easwar | Arzt | Arts | AI
9.9K posts

Dr Easwar | Arzt | Arts | AI
@dreaswar
#Artist | #ArztForACause art for CerebralPalsy awareness | #Doctor @childortho | #Medical #AI @AushadhaProject | #IITM | #ParamahansaYogananda devotee












ஆளுநர் குடியிருக்கும் மக்கள் மாளிகைக்குச் சில கேள்விகள் திருவள்ளுவர் காற்றைப்போல் பொதுவானவர்; காற்றுக்கு ஏன் காவிப் பூச்சு? திருவள்ளுவர் மானுடத்தின் பொதுச்சொத்து ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ என்று பாரதியால் பொதுமைப்படுத்தப்பட்ட புலவனுக்கு திருநீறு என்ற உள்ளூர் அடையாளம் எதற்கு? தர்மார்த்த காம மோட்சம் என்ற நாற்பொருளிலிருந்து விடுபட்டு அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளை மட்டுமே முன்னிறுத்தியவனுக்கு உருத்திராட்சம் என்ற உருட்டுமாலை தேவையா? அண்டமெங்கும் விரிந்திருக்கும் ஆகாயம் என்று கருதப்படும் வள்ளுவரை மதம் என்ற சின்னச் சிமிழுக்குள் அடக்குவது வரலாற்றின் வழு இல்லையா? மெய்த் தமிழர்கள் மீண்டும் மீண்டும் எதிர்த்துக்கொண்டிருக்க ஆளுநர்கள் மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்வது உங்கள் அதிகாரத்தால் எங்களைக் காயப்படுத்துவது ஆகாதா? அன்புகூர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்; தாங்கமாட்டார்கள் தமிழர்கள் வள்ளுவரை வாழ விடுங்கள் #திருவள்ளுவர்


















