Dvkcoimbatore
130 posts

Dvkcoimbatore
@dvkcoimbatore
கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகம்🖤❤️🖤
கோயம்புத்தூர் Katılım Ocak 2025
61 Takip Edilen61 Takipçiler
Dvkcoimbatore retweetledi

*"கருப்புக் கொடி ஏற்றுவோம்!"*
*திராவிடர் விடுதலைக் கழகம் அறிவிப்பு !*
"இந்திய கூட்டாட்சி அமைப்பில் இருந்து தென்னாட்டை விலக்கி வைக்கும் ஆபத்தான தொகுதி மறு சீரமைப்பு மசோதாவை அவசர அவசரமாக தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறது ஒன்றிய பாஜக ஆட்சி.
மிகத் தந்திரமாக பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சனையோடு இதை இணைத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
இந்த மசோதா சட்டம் ஆகிவிட்டால் ஐந்து தென் மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வீதம் 24.3 சதவீதத்திலிருந்து 20.7 சதவீதமாக சரிந்து விடும் அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 38.1 சதவீதத்திலிருந்து 43.1 சதவீதமாக உயர்ந்து விடுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தள்ளிவிட்டு இப்போது அவசர அவசரமாக கொண்டு வருவதில் மிகப்பெரும் சதி அடங்கி இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஒன்றிய ஆட்சிக்கு விளைவுகள் கடுமையாகக் இருக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
நாளை தமிழ்நாடு முழுதும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் என்ற முதல்வரின் போர்க் குரலை ஏற்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் கருப்புக் கொடி ஏற்றி தென்னகத்தின் உரிமைப் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பெரியார் விடுத்த எச்சரிக்கை இப்போது செயல்பட துவங்கி விட்டது.இவர்களின் திட்டமான ஒற்றை இந்தியாவுக்குள் தென்னகம் குறிப்பாக தமிழ்நாடு தடையாக நிற்கும் என்ற முடிவுக்கு அவர்களே வந்து நாட்டுப் பிரிவினைக்கு உந்துகிறார்கள்."
- *கொளத்தூர் மணி,*
தலைவர்,
- *விடுதலை இராசேந்திரன்,*
பொதுச்செயலாளர்,
*திராவிடர் விடுதலைக் கழகம்.*
15.04.26
#Delimitation
#BlackFlagProtest

தமிழ்
Dvkcoimbatore retweetledi
Dvkcoimbatore retweetledi

பாஜக எங்கள் பண்பாட்டு எதிரி
காதலியை கருப்பு சிவப்பு விரட்டு அடிக்கும் - திருச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
விரிவாக படிக்க வாங்கிப் படியுங்கள் #புரட்சிப் #பெரியார் #முழக்கம் வார இதழை
dvkperiyar.com/?p=46077
@dvkperiyar
@DMKITwing
@dmk
@CMOTamilnadu

தமிழ்

“தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்!
திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!
மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்!”
~தெருமுனைக் கூட்டம்~
நாள் : 14 .03.2026
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்
திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மாவட்டம்
#DVKstandwithMKstalin

தமிழ்
Dvkcoimbatore retweetledi

கர்நாடக மாநில அரசு ஆணவப் படுகொலை தடுப்புச்சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்து இருக்கிறது; மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க முடிவாகும். இந்த சட்டத்திற்கு" இவர் நம்மவர் "என்ற மிக அழகான பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ஒரு ஆண் பெண்ணிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்டு பிறகு ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமை என்று இந்த சட்டம் கூறுகிறது. குடும்ப அழுத்தம் அல்லது ஜாதி சார்ந்த காரணங்களைக் காட்டி திருமணம் செய்ய மறுக்கும் நபருக்கு 5 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையோ ஆயுள் தண்டனையோ வழங்குவதற்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. தமிழ்நாடு அரசும்
இதேபோன்று சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!
சமூகத்தில் ஜாதி ஒரு புற்றுநோயாக பரவி நிற்கிறது. இதை அழிப்பதற்கு சட்டங்களும் தேவை; அத்துடன் சமூகத்தில் சாதி எதிர்ப்புக்கான இயக்கங்கள் நடத்துவது இதைவிட முக்கியமானது!
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஜாதி எதிர்ப்பை தனது கட்சியின் அரசியல் செயல்பாடாக ஏற்கவில்லை.
ஆனால் ஜாதி ஆணவப் படுகொலை நடக்கும்போது மட்டும் ஆளும் கட்சி
யின் மீது குற்றம் சாட்டுவது நேர்மையற்ற அரசியல். இந்த ஜாதிவெறி கொலைகளுககான பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உண்டு சமூகத்துக்கும் உண்டு.
குஜராத்தில் நடக்கும் பாஜக ஆட்சி கடந்த வாரம் ஒரு சட்ட த்திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது பெற்றோர்கள் ஒப்புதல் இருந்தால் தான் திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்கிறது அந்த சட்டம் . இதன் வழியாக ஜாதி மறுப்பு திருமணங்கள் தடை செய்யப்படுகின்றன. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் அவர்களை எதிர்த்துத்தான் ஜாதி மறுப்பு திருமணங்களே நடக்கின்றன. ஆக ஜாதியைப் பாதுகாக்க பாஜக ஆட்சி துடிக்கிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மதமாற்ற தடை மசோதா ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதமாற்றம் செய்து கொண்டால் 10 ஆண்டு சிறை 7 லட்சம் ரூபாய் அபராதம்.
இதைவிடக் கொடுமை இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பிரிவு; பெண்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டோர் அல்லது பட்டியலின ஜாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் மதம் மாறினால் 7-ஆண்டு சிறை ; 5 லட்சம் அபராதம் என்று கூறுகிறது அந்தப் பிரிவு.
விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதையை பறித்து அவர்களை இழிவு படுத்துகிறார்கள். மதமாற்ற தடைச் சட்டத்தில் குறிப்பாக பட்டியல் பிரிவினரை இணைக்கிறது இந்த சட்டம் . இப்படி ஒரு சட்டம் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழ்நாட்டிலும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகள் திருமணப் பதிவுக்கு பெற்றோர்கள் ஒப்புதலை கட்டாயப்படுத்துகிறார்கள் என்று இரு நாட்களுக்கு முன்பு "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு செய்தி வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படி எதுவும் சட்டம் இல்லை ஆனால் அதிகாரிகளின் ஜாதி மனநிலையால் இப்படி செயல்படுகிறார்கள் .
தமிழ்நாடு அரசு இந்த அதிகாரிகள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் அதிகாரிகளிடையே நிலவும் ஜாதி உணர்வு செயல்களை கண்காணிக்க குழுக்களை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் மட்டுமல்ல; ஜாதி உணர்வோடு செயல்படும் அமைச்சர்களும் கண்காணிக்கப் பட வேண்டும்.
ஆக ஜாதியைப் பாதுகாக்க பாஜக ஆட்சி துடிக்கிறது.
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
14.03.2026.
#anticaste #moment
#Against #caste #marriage
@DMKITwing

தமிழ்

*TEA KADAI PANCHAYAT*
*மோடியின் கலவர கேடி வேலையை அம்பலப்படுத்திய கோவை திவிக தோழர்கள் !!*
#dvk #coimbatore
தமிழ்
Dvkcoimbatore retweetledi

1971-ஆம் ஆண்டு தேர்தல் வரலாற்றுப் பின்னணி!
சேலம் மூடநம்பிக்கை மாநாட்டில் நடந்தது என்ன?
சேலம் மூடநம்பிக்கை மாநாடு குறித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய வரலாற்றுப் பின்னணி.
dvkperiyar.com/?p=46080
@dvkperiyar
@DMKITwing
@arivalayam
@dvkcoimbatore

தமிழ்
Dvkcoimbatore retweetledi

ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு தரம் தாழ்ந்த பேச்சை பேச முடியுமா? இந்த கேள்வியைத்தான் மோடியின் திருச்சி பேச்சு எழுப்புகிற கேள்வி.
தமிழ்நாட்டு மக்கள் பணத்தின் ஏடிஎம் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கிறது என்று எப்படி ஒரு பிரதமரால் பேச முடிகிறது? இப்படி ஒரு உளறலுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? இதற்கு பதில் வேண்டுமா?
ஏடிஎம் இல்லாமலே நன்கொடைகளை சட்ட விரோதமாக பல்லாயிரம் கோடிகளில் வாரி சுருட்டி நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானவர் இந்த உத்தமர் மோடி!
தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை கொண்டு வந்தாரே நினைவிருக்கிறதா ?
கருப்புப் பணத்தை பாரத ஸ்டேட் வங்கி வழியாக வெள்ளையாக்கி தன்னுடைய பெயரால் உருவான அறக்கட்டளையில் கொட்டச் சொன்னவரே இந்த மோடி தான் .
நிதியை வழங்குங்கள் உங்கள் பெயர்களை மறைத்து வைத்திருக்கிறோம் என்று சொல்லிய
வரும் இவர்தான்.
அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்கலாம் என்று பெயரளவில் சொல்லிக் கொண்டு பெரும்பகுதி நிதியை சுருட்டிக் கொண்டது பாஜக.
2019 இல் இருந்து 2024 வரை இவர்கள் சுருட்டி தொகை, ரூ.8250 கோடி. உச்ச நீதிமன்றம் தலையிட்டு இந்த நிதி சுருட்டல் சட்டவிரோதமானது என்று மோடியின் மண்டையில் ஓங்கி குட்டியது.
நிதி அளித்தவர் பட்டியலை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த அந்த வங்கி பட்டியலை வெளியிட மாத கணக்கில் தவணை கேட்டது;
உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை ; அடுத்த சில நாட்களிலேயே வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டது. அப்போதும் கூட நன்கொடையாளர்களின் பெயர்களை கண்டுபிடித்து விட முடியாமல் மூடி மறைக்கும் பட்டியலை வெளியிட்டது.
மீண்டும் உச்ச நீதிமன்றம் தெளிவான பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இவையெல்லாம் வங்கியின் முடிவுகள் அல்ல; மேலிருந்து மோடி நிதி மோசடியை காப்பாற்ற அரசு எந்திரங்கள் நடத்திய திருவிளையாடல் !
பெயர் பட்டியல் வெளியான பிறகு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. மோடி பெயரிலான அமைப்புக்கு நன்கொடை வாரி வழங்குகிறவர்களுக்கு வரிச்சலுகைகள் காண்ட்ராக்ட் என்று வாரி வழங்கப்பட்டுள்ளன. இந்த விபரங்கள் இப்போதும் இணையத்தில் இருக்கின்றன.
ஊழலை சட்டமாக்கி உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் தான் இப்போது ஏடிஎம் பற்றி இங்கே வந்து காதில் பூசுற்றுகிறார்.
திமுகவினர் 8 வயது குழந்தையையும் விட மாட்டார்கள் என்ற மோடியின் பேச்சை மக்கள் நிச்சயம் வெறுக்கவே செய்வார்கள். குழந்தைகளை அரசியலுக்காக பாலுறவுக்கு பயன்படுத்திய
எப்ஸ்டின் ஃ பைலில் மோடியின் பெயரும் இடம்பெற்று இருப்பதாக கூறுகிறார்கள் .
அந்த நினைவில் இருந்து இன்னும் மோடி விடுபடவில்லை போலும்!
சொல்லப்போனால்
தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபடும் பாஜக பேச்சாளர்கள் கூட இப்படி இப்படி பேசுவதற்கு கூசுவார்கள்
இதுதான் அவரது ஆன்மீகக் கதை!
விடுதலை இராசேந்திரன்
11.03.2026
@DMKITwing

தமிழ்

“தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்!
திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!
மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்!”
~தெருமுனைக் கூட்டம்~
தோழர் நிர்மல்குமார் உரை
நாள் : 07.03.2026
திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மாவட்டம்
#DVKstandwithMKstalin
தமிழ்

“தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்!
திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!
மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம்!”
~தெருமுனைக் கூட்டம்~
இடம்:சின்னியம்பாளையம்,சிங்காநல்லூர்,சவுரிபாளையம்,பீளமேடு பகுதிகளில்
நாள்:07.03.2026
திராவிடர் விடுதலைக் கழகம்
கோவை மாவட்டம்
#DVKstandwithMKstalin

தமிழ்
Dvkcoimbatore retweetledi

அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற ஆளுநர் பதவிகளை எல்லாம் இப்போது ஒன்றிய ஆட்சி - மாவட்ட காவல் துறை அதிகாரிகளைப் போல இடமாற்றம் செய்து பந்தாடி வருகிறது.
மேற்குவங்க ஆளுநர் சி.பி ஆனந்த போஸ் பதவி விலகி உள்ளார்; அந்த இடத்தில் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார் .
தமிழ்நாட்டின் ஆளுநர் மாளிகையை
ஆர்.எஸ். எஸ் பாஜக தலைமை அலுவலகமாக செயல்பட வைத்த அனுபவங்கள் அவருக்கு உண்டு; ஆனால் அந்த அரசியல் எல்லாம் தமிழ்நாட்டில் செல்லுபடி ஆகவில்லை.
அதுமட்டுமின்றி அரசியல் சட்ட விதிகளை மீறி செயல்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய "சான்றிதழ்களை" தோளில் சுமந்து கொண்டு மேற்கு வங்கம் போகிறார்.
வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத தமிழ்நாட்டில் இவரை வைத்துக்கொண்டு இனி எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு அமித் ஷா உறுதியாக வந்து விட்டார். எனவே தேர்தலை சந்திக்கும்
மேற்கு வங்கத்துக்கு பயன்படுத்திப் பார்க்க முயற்சிக்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஏடுகளில் பாஜக வெளியிடும் விளம்பரங்களை உற்று நோக்கினால் ஒரு உண்மை புரியும்;
தமிழ்நாடு அரசு சாதனை படைக்கிறது! என்பதை அந்த விளம்பரங்கள் ஒப்புக் கொள்கின்றன. " வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு" என்பதே அந்த விளம்பரங்களின்
தலைப்புகளாக இருக்கின்றன.
தமிழ்நாடு ஆளுநரின் மாற்றம் பற்றி அமித் ஷா அரசியல் மாண்பு கருதி தமிழக முதல்வரிடம் பேசவில்லை; இது "பாரதிய மாடல்" ஆனாலும் கூட
தமிழ்நாடு முதல்வர் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து க்கூறி வழி அனுப்பி வைத்துள்ளார்.
இது "திராவிட மாடல்" இங்கேதான் முதல்வரின் பெருந்தன்மை நிமிர்ந்து நிற்கிறது!.
விடுதலை இராசேந்திரன்
08.03.2025
@DMKITwing
@arivalayam
@dvkperiyar

தமிழ்

~மகளிர் உரிமைத் தொகை~
இத்திட்டத்தை பாஜகா,அதிமுக,தவெக என்று யாரெல்லாம் ஏளனம் செய்தார்களோ ,அவர்கள் எல்லாம் மகளிருக்கு தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்துக் கொண்டிருக்கிறார்கள்
திவிக தலைவர் கொளத்தூர் மணி 🖤
#dvk #kolathurmani #DVKstandwithMKstalin

தமிழ்

*இறையாண்மைக்கு அவமானத்தை ஏற்படுத்திய மோடி!!*
திவிக தலைவர் கொளத்தூர் மணி 🖤
#kolathurmani #dvk #DVKstandwithMKstalin

தமிழ்











