மருது 🐣
40.5K posts

மருது 🐣
@huntbees
Belongs to Tamilian stock! Tamil blood. Timeless culture. Endless pride.







@huntbees நீங்க இந்த நடிகர் சீமானைத்தானே சொல்லறீங்க 🤣🤣

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு! ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி





மேற்கு வங்கத்தில் தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் என்பவரை தேர்தல் முடிந்தவுடன் ஆட்சிக்கு வந்த பாஜக தலைமைச் செயலாளராக நியமித்தது இதை ராகுல் காந்தி வன்மையாக கண்டித்தார் பெரிய திருட்டுக்கு பெரிய மரியாதை என்று கூறியதோடு தேர்தல் ஆணையத்தோடு பாஜக கள்ள உறவு வைத்திருந்தது அம்பலமாகி உள்ளது என்று கூறினார் இப்போது கேரளாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ். முதலமைச்சர் சதீசன் தனது செயலாளர் பதவிக்கு மாநிலத்தில் தேர்தல் ஆணையராக பணியாற்றிய ரத்தன்கேல்கர் என்பவரை நியமித்திருக்கிறார் பாஜக காட்டிய பாதையில் கேரள காங்கிரஸ் பயணிக்கிறது மேற்கு வங்கத்தில் நடந்தது பெரிய திருட்டு என்று கூறிய ராகுல் கேரளாவில் நடந்த இந்த திருட்டுக்கு வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார்









8000 தனியார் மருத்துவ மையங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசை புரிதல் இல்லாமல் கண்டிக்கும் சீமான் @TVKVijayHQ @BussyAnand @arunraajkg @CMOTamilnadu @AadhavArjuna @CTR_Nirmalkumar @JhonArokiasamy @imrajmohan @KASengottaiyan @jagadishbliss



