MI 💙💙💙
16.7K posts

MI 💙💙💙 retweetledi
MI 💙💙💙 retweetledi

@AdmkNaresh தப்பில்ல மாப்ள
நான் யாருகூட இருக்கனும்னு நான் தான் முடிவு செய்வேன்
தமிழ்

@karthiuyirae3 அவன் சொல்றான்னு நம்பிகிட்டு ... Bjp இருக்கறப்ப எப்படி வருவானுக.. 40,50 னு வங்கிட்டு முதல்வர் கனவோட இருக்கவன் வருவானா ...
தமிழ்
MI 💙💙💙 retweetledi
MI 💙💙💙 retweetledi
MI 💙💙💙 retweetledi

காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் இனி நீங்க @NSNNatraj மட்டுமல்ல, உங்கள் கனவான உங்க மகனின் அரசியல் பிரவேசமும் இன்றோடு ஆழமாக குழி தோண்டி புதைக்கப்பட்டது!
மனுஷன்னா மானத்தோட வாழனும், உங்களை மாதிரி ஒரு ஆளுக்கு வாக்கு கேட்டதை வாழ்நாள் முழுவதும் எண்ணி வெட்கி தலை குனிவேன்!
அட..ச்சே...

தமிழ்
MI 💙💙💙 retweetledi
MI 💙💙💙 retweetledi

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தமிழ்
MI 💙💙💙 retweetledi
MI 💙💙💙 retweetledi

தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk
தமிழ்
MI 💙💙💙 retweetledi

மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு @EPSTamilNadu .... ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர்.. கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்..
கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார்.. அது அவருக்கு புதிதுமல்ல... எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர் கரூர் சம்பவத்தின் போது முதல் முதல் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது.. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா... என்றும் உங்கள் நிலை குன்றாமல் வாழ வாழ்த்துக்கள்...

தமிழ்
MI 💙💙💙 retweetledi

குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ @TVKPartyHQ
தமிழ்
MI 💙💙💙 retweetledi

EPS உள்ள இருந்தா இருப்போம் இல்லனா அவர் எங்க இருக்கரோ அங்க இருப்போம். அதுவும் இல்லனா பொழப்ப பாப்போம். ஒரு நாளும் CVS SPV CV ஈத்தரைகளை போல இருக்க மாட்டோம்.
#WeStandWithEPS
தமிழ்
MI 💙💙💙 retweetledi

சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
தமிழ்
MI 💙💙💙 retweetledi

எந்தப் பக்கமும் சாயாத தராசு போல செயல்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
-17வது சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
தமிழ்
MI 💙💙💙 retweetledi

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu @AIADMKOfficial

தமிழ்
MI 💙💙💙 retweetledi

குடிமராமத்து நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் @EPSTamilNadu 🙏
தமிழ்








