
திரை பிரபலங்கள் மறையும் பொழுது ஏற்படும் வருத்தத்தை விட ஊடகங்கள் அதை வைத்து காசு பார்க்கும் வேலையை செய்யும் கேவலமான நிலையை நினைக்கும்பொழுது தான் கோபம் கோபமாய் வருகிறது நானும் அதே துறையில் தான் இருக்கிறேன் ஆனால் ஒரு துளி கூட எனக்கு இதில் விருப்பம் கிடையாது மறைந்த பாக்கியராஜின் மனைவி அழுதபடி வருகிறார் அதை நேரலை செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இது ரணமான விஷயமாக இருக்கும் என்பதை இந்த ஊடகங்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறது நடிகை ராதிகா தயவு செய்து கொஞ்சம் பிரைவசி கொடுங்கள் என கையெடுத்து கும்பிடுகிறார் பாக்யராஜ் வீட்டில் அழுதபடி ராதிகா என்ன சொன்னார் தெரியுமா என கேப்ஷன் போட்டு கேவலமான ஒரு வேலையை செய்கிறார்கள் இந்த ஊடகங்கள்! களத்தில் இருக்கும் என் சக பத்திரிகையாளர் நண்பர்களிடம் பேசும் பொழுது பெரும்பாலானவர்களுக்கு இதில் விருப்பமில்லை ஆனாலும் கட்டாயத்தில் செய்கிறார்கள். செய்தி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களோ அல்லது முதலாளிகளோ இதில் முடிவு எடுக்க வேண்டும் அடித்து சொல்கிறேன் தார்மீகமாக எல்லாம் இவர்கள் திருந்தப் போவதில்லை தனி தனி உரிமை சட்ட பிரிவுகளை பயன்படுத்தி இதற்காக ஒரு சட்டம் ஒரு சட்டம் அல்லது அரசாணை உடனடியாக இயற்றப்பட வேண்டும். உயிர் இழக்கும் குடும்பத்தாரிடமிருந்து ஊடகங்கள் யாரும் வர வேண்டாம் என அறிக்கை வரவேண்டும் அப்படி வந்ததற்குப் பிறகும் யாராவது நேரலை செய்கிறேன் பேட்டி எடுக்கிறேன் என்று அவர்கள் வீட்டு வாசலிலோ அல்லது சுடுகாட்டு வாசலிலோ இருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் நண்பர்கள் பணி புரிந்தவர்கள் என பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்றால் ஊடகங்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாராளமாக தெரிவிக்கட்டும் இல்லையென்றால் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ வெளியிடட்டும். ஆனால் மக்களையும் இதில் குறை சொல்ல வேண்டி உள்ளது அவர்கள் பார்ப்பதால் தான் இவர்களும் காட்டுகிறார்கள் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் போராடுகிறார்கள் நீட் தேர்வு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி வீடியோ போட்டாலும் செய்திகளாக எழுதினாலும் படிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லை ஏனென்றால் மக்களுக்கு தேவைப்படுவது எமோஷனல் சென்சேஷன்! Stop this nonsense right now!!!


























