Naps s ~ நாப்ஸ் சி retweetledi

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு." - குறள் 595
தேர்தல் முடிவுகள் வெறும் எண்கள் மட்டுமே, ஆனால் மக்களின் கோரிக்கைகளுக்காகக் களத்தில் நிற்பதுதான் உண்மையான அரசியல் பலம். செங்கல்பட்டு, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், கொளம்பாக்கம் கிராமம் - வையாவூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் வேண்டி, நாம் தமிழர் கட்சியின் செங்கல்பட்டு சுற்றுச்சூழல் பாசறை பொறுப்பாளர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னெடுத்த தொடர் முயற்சிக்கு இன்று அரசாணையாக வெற்றி கிடைத்துள்ளது. ₹17,50,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமையவுள்ள இந்த நிகழ்வு, நாம் தமிழர் கட்சி அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி, மக்களுக்கான அதிகாரத்தை மீட்டெடுப்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள். நாம் தமிழர் கட்சி இந்த மண்ணின், மக்களின் பேரரணாகத் தடம் பதித்துக்கொண்டே இருக்கும். களம் தொடரும், எம் இனத்தின் வெற்றிக்கான அறப்பயணமும் தொடரும்.
@Seeman4TN @NaamTamilarOrg @_ITWingNTK
#NTKGreenPolitics #EnvironmentalWing_NTK

தமிழ்

























