

Kottampatty RanjithKumar Tdk
7.8K posts

@ranjithtdk
ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை - மேதகு வே. பிரபாகரன் | என்றென்றும் தமிழர் தலைவர் அண்ணன் @KKSelvakumaroff வழியில்❤️ | தமிழர் தேசம் கட்சி
















தமிழக அரசியல் வரலாற்றில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சனநாயக நாட்டில் ஆட்சியதிகாரம் என்பது வெறும் அதிகாரம் மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நிற்கும் ஒரு பெரும் பொறுப்பாகும். @arivalayam தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக, மக்கள் நலனை எப்போதும் உயர்த்திப் பிடிப்பதே எங்களது லட்சியம். அந்த வகையில்,அமையவுள்ள புதிய அரசு கீழ்க்கண்ட முக்கிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தோழமை சக்தியாக நான் வலியுறுத்துகிறேன்!.. அரசு என்பது மேல்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல; கடைக்கோடியில் வாழும் பாமர மக்களின் கண்ணீரைத் துடைப்பதே உண்மையான அரசு. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் சிறு, குறு தொழில்களைப் பாதுகாப்பதில் புதிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் தனிப்பெரும் அடையாளம் நமது 'மாநில சுயாட்சி'. நிதிப் பங்கீடு மற்றும் மொழி உரிமை ஆகியவற்றில் தமிழகத்தின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் மத்திய அரசிடம் போராடிப் பெறுவது இந்த அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த சமூக நீதிப் பாதையில் தமிழகம் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையைச் சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், அனைத்து சமூகத்தினருக்குமான சமமான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, பாசனத் திட்டங்களை விரைந்து முடிப்பதோடு, காவிரி உள்ளிட்ட நதிநீர் உரிமைகளில் தமிழகத்தின் பங்கினை உறுதி செய்ய வேண்டும். இயற்கை வளங்களைச் சுரண்டுவதைத் தடுத்து, பசுமைத் தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் இலவசமாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், கிராமப்புற சுகாதார மையங்களை மேம்படுத்துவதும் மிக அவசியம். தேர்தல்கள் வரும், போகும்; ஆனால் மக்கள் நலன் என்பது நிரந்தரமானது. அமையவுள்ள புதிய அரசு, மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல், வெளிப்படைத்தன்மையுடனும், ஊழலற்ற முறையிலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. மக்களுக்காகப் பணியாற்றும் எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிக்கும் எங்களது தார்மீக ஆதரவு என்றும் உண்டு. அதேவேளையில், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் சூழலில், ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக களத்தில் நிற்போம்!..







இன்றைய தினம் 14.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விராலிமலை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்களை ஆதரித்து, விராலிமலை மற்றும் குடுமியான்மலை ஆகிய பகுதிகளில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்! விராலிமலை சட்டமன்ற தொகுதியில், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, சனநாயகத்தை வேரூன்ற செய்வோம்!... வாக்களிப்பீர் உதயசூரியன்!. #வெல்வோம்_ஒன்றாக















