
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக மூன்றாவது முறையாக களம் காணும் வாய்ப்பை வழங்கிய கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் ஊக்கமளிக்கும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராக பணியாற்றும் நிலையிலும், மதுரை மத்திய தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்ததுடன், அவற்றை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பித்து வந்துள்ளேன். அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எனது மக்கள் பணியின் மீதான நம்பிக்கையோடும், எம் முன்னோர்களின் ஆசிகளோடும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பேராதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்த மதுரை மத்திய தொகுதி மக்களின் ஆதரவை மண்ணின் மைந்தனாக மீண்டும் நாடுகிறேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, தமிழர் நலனை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைத்திடுவோம்! வாக்களிப்பீர் உதயசூரியன்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
































