
Thinakaran Rajamani
16.7K posts

Thinakaran Rajamani
@thinak_
Journalist | Tamil | Focused on Human Rights, Crime, Health, Politics & Environment | RTI | MA Journalism & Mass Comm.







Two tenders worth around Rs 43 lakh for works at Erukkandurai burial ground may have been fixed, concerns raised @BussyAnand








License Renewal செய்த கதை: இந்த மாதத்துடன் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்பதால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இணையத்தில் தேடிய போது ஆன்லைன் மூலமாகவே renewal செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அப்பாடா என்று அதற்குரிய படிவங்களை நிரப்ப ஆரம்பித்தால் போய் மருத்துவர் சான்றிதழ் வாங்கிட்டு வர சொல்லியது. யாரிடம் வாங்க வேண்டும் என்று தேடியதில் திருவான்மியூர் RTO அருகிலேயே இருக்கும் ஒரு மருத்துவர் மற்றும் அந்த பகுதியை சுற்றி இருக்கும் மருத்துவர்கள் பட்டியல் RTO இணையதளத்திலேயே இருந்தது. அது தவிர ஆன்லைன் விண்ணப்பத்தின் போது ஆதார் அட்டையை சரிபார்க்க பயன்படுத்துவதால் அவை இரண்டிலும் ஒரே பெயர் இருக்க வேண்டுமாம். எனக்கு ஆரம்பத்தில் எடுத்த ஆதார் அட்டையில் இனிசியல் போடாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே அதை மாற்றிக் கொண்டு வந்தால் தான் விண்ணப்பிக்க முடியும் என்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முயற்சிக்கு தடை போட்டுவிட்டார்கள். இனி நேரில் போக வேண்டியது தான் என்று படிவங்களை டவுன்லோட் செய்து அதை நிரப்பி, போட்டோ எடுத்து ஒட்டி, அங்கே போனதும் இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்வார்கள் என்பதால் இன்னொரு படிவத்தையும் தயாராக கையில் எடுத்துக் கொண்டு, பேனா பேப்பருடன் கிளம்பி போய் RTO அலுவலகத்தில் அமர்ந்திருந்த வரவேற்பாளர் பெண்மணியிடம் அனைத்தையும் கொடுத்து நான் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்று கூறினேன். விண்ணப்பத்தையும் எண்ணையும் பார்த்த அவர் இதெல்லாம் இப்போ ஆன்லைன்ல தான் சார் செய்யணும். இங்கேலாம் அதை செய்வதில்லை என்று சொல்லிவிட்டார். பிறகு எனக்கு ஆன்லைன்ல ஏற்பட்ட பிரச்சனையை விளக்க, இது கொஞ்சம் பெரிய பிரச்சினை தான் என்று அவரும் சொல்லிக் கொண்டார். பிறகு நீங்க வெளியில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யும் கம்ப்யூட்டர் சென்டர் போய் கேளுங்க என்றார். E சேவை மையமா என்று நான் கேட்க திரும்பவும் என்னை பார்த்துவிட்டு இல்லை இல்லை வெளியே கம்ப்யூட்டர் சென்டர் இருக்கும் போய் பாருங்க என்றார். எங்கே இருக்கும் என்று கேட்டதற்கு எனக்கு தெரியாது சார் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னார். இங்கேயும் செய்ய மாட்டீர்கள், எங்கே போக வேண்டும் என்றும் சொல்ல மாட்டீர்கள் என்றால் எப்படி என்று கேட்டதற்கு இப்போலாம் இங்கே எதுவும் பாக்கறது இல்லை என்று பதில் கூறி முடித்துக் கொண்டார். சரி இதை விடுங்க நான் எங்கே போய் மருத்துவ சான்றிதழ் வாங்கணும், அதையாவது சொல்லுங்க என்றால் அதுவும் அவருக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார். போட்டு வைத்த renewal திட்டம் போச்சு கண்மணி என்று சோகத்துடன் வெளியே வந்தால் அங்கே மூன்று பேர் வரிசையாக தங்கள் பைக் மீது விண்ணப்பங்கள் வைத்து விற்றுக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவரிடம் (சுரேஷ் - 9884633334, தேவைப்படுபவர்கள் அவருடைய சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்) போய் இங்கே மருத்துவ சான்றிதழ் எங்கே வாங்க வேண்டும் என்று கேட்க, உங்களுக்கு நான் renewal கூட சேர்த்தே வாங்கி தருகிறேன் அதற்கு 1500 ரூபாய் ஆகும் என்றார். என்னுடைய ஆதார் பிரச்சினை பற்றி சொல்ல வாங்க பாத்துக்கலாம் என்று அருகே இருந்த அய்யன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகத்துக்கு கூட்டி சென்றார். அங்கே என்னுடைய லைசென்ஸ் வாங்கி கொடுத்து இதில் எதாவது பிரச்சனை இருக்கா பாருங்க என்றார். அங்கே இருந்த பெண்மணி எதையோ தட்டி பார்த்துவிட்டு எல்லாம் கிளியர் பண்ணிடலாம் என்று சொல்லவே, அவங்க கிட்ட 1500 கொடுத்துவிடுங்கள் முடித்து கொடுத்து விடுவார்கள் என்றார். மருத்துவர் எங்கே இருப்பார் என்று நான் அப்பாவியாக கேட்க அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க என்றார். சரி என்ன தான் நடக்குது பார்க்கலாம் என்று வெய்ட் செய்ய, உங்களுக்கு ஒரு மருத்துவர் அழைப்பார், அதற்கு பிறகு ஒரு ஓடிபி வரும், அதை அவரிடம் சொல்லுங்க என்றார். போனிலேயே செக்கப் செய்வார்கள் போல என்று காத்திருக்க அந்த மருத்துவரும் (அகிலா குமார் - 9342948142) அழைத்தார். என்னை அவர் அழைத்த மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். போனில் நிறைய கேள்வி கேட்டு செக் செய்ய போகிறார் என்று நான் தயாராக அவர் முதலில் otp கேட்டார். நானும் பார்த்து சொல்ல அவர் ஓகே என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார். திரும்ப அழைப்பாரா என்று அங்கிருந்த பெண்மணியிடம் கேட்க அவளோ தான் சார் முடிந்தது. எனக்கு form அனுப்பி விடுவார்கள் என்று சொல்லிவிட்டார். அப்புறம் ஒரு 10 நிமிடங்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து கொண்டு இருந்தவர் இப்போவே உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டாச்சு நீங்க RTO போய் போட்டோ எடுத்துக்கோங்க. ஒரு வாரத்தில் உங்களுக்கு லைசென்ஸ் வந்துவிடும் என்று சொன்னார். நானும் அங்கே போக ஒரு 10 பேர் வரிசையில் நின்றார்கள். வெய்ட் ப்ண்ணி ஒரு படம் எடுத்து (வழக்கம் போல கொடூரமாக தான் இருந்தது) முடித்து கிளம்பி வந்து விட்டேன். அவர்கள் சொனந்து போல அடுத்த 4 நாட்களில் லைசென்ஸ் வந்துவிட்டது. கேள்விகள்: 1. நான் கொடுத்த 1500 ரூபாய் பணம் ரசீது இல்லாத சேவை கட்டணமா இல்லை மறைமுக லஞ்சமா? (அரசு கட்டணம் வெறும் 550 ரூபாய் என்று அந்த பெண்மணி விண்ணப்பிக்கும் போது சைடுல பார்த்துவிட்டேன்) 2. மருத்துவரையே பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் கொடுப்பது சரியா? 3. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி அடிப்படை சந்தேகங்களுக்கு கூட தனியார் கம்ப்யூட்டர் சென்டர்க்கு அனுப்பும் RTO அலுவலர்களின் செயல் சரியா தவறா? 4. இந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் டிரைவிங் லைசென்ஸ் renewal செய்வதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களா? 5. ஒரு முக்கியமான ஆவணமான லைசென்ஸ் renewal கொடுப்பதில் RTO அலுவலகம் அலட்சியம் காட்டுகிறதா? 6. இது வரை இப்படித்தான் நடந்தது என்றால் இனியும் இப்படித்தான் நடக்குமா? 7. தமிழ்நாடு சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பதற்கு RTO அலுவலங்கள் காட்டும் அலட்சியம் தான் காரணமா? பல மாற்றங்களை முன்னெடுக்கும் தவெக ஆட்சியில் இந்த RTO அவலத்திற்கும் மாற்றம் வருமா? @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @imrajmohan @TamilanParthib1




Greater Chennai Police is currently interrogating @PttvNewsX news anchor Vijayan. He was picked up last night, apparently, for questioning in the TVK MLA bribery case.





தவெக அரசின் கீழ் நடக்கும் குற்றங்களை சுட்டிக்காட்டும்போது முந்தைய அரசுகள் செய்ய தவறியவற்றை கூறி, நீங்களாவது செய்யுங்கள் என கூறுவதில் தவறே இல்லை. திமுக வாக்குறுதிபடி, அதிமுகவின் வேலுமணி, விஜயபாஸ்கர் (2016ல் செந்தில் பாலாஜி) போன்றோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்கள் தண்டனைகளை அனுபவித்து கொண்டிருப்பார்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை ஆகியிருப்பார்கள் & பின்னாட்களில் அதை பற்றி பேசவேண்டிய அவசியமே எழுந்திருக்காது (அறப்போர் இயக்கம் கோர்ட்டுக்கு சென்றபோதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன டீலிங் நடந்ததோ தெரியவில்லை). அதனால் அதிமுக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டாலும் இன்றுவரை அதனை நியாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. அதே போல், திமுக ஆட்சியில் நடந்த தவறுகள் மீது (including illegal PACL land registration. quarry mafia was even allowed to mine PACL land in Panayankurichi village in Tirunelveli) கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது பேசவேண்டிய தேவை எழாது. செய்த தவறுக்கு நடவடிக்கையும் எடுக்க மாட்டோம், பேசவும் கூடாது என்றால் எப்படி? ஒருவேளை தவெக அரசு ஊழல் அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிற்காலத்தில் மாற்று அரசு அதிகாரத்தில் அமரும்போது, தவெக செய்ய தவறியவற்றை சொல்லிக்காட்டிதான் ஆகவேண்டும்.

@chennaicorp @sameerangs @GSBediIAS @CMOTamilnadu @Chief_Secy_TN @TVKPartyHQ @TVKVijayHQ @TVKpulse @AadhavArjuna @raavanamavan7 @DavidManohar7 @PriyarajanDMK @rdc_south 📌2026-415MFA Road is still not laid. Request was raised in Feb 2026. GCC officials sleeping? When are the authorities going to realize they have crossed 5 months since the orgin of the complaint yet failed on their obligation executing the statutory duty of road relaying process. 📌No timeline (been 5 months) 📌No closure of the complaint 📌People continue to suffer using this road (fully broken) 📌Some brilliant Engineer has covered it with jalli now.

@thinak_ "முந்தைய அரசு" இந்த வார்த்தை இல்லாமல் பதிவர் பதிவிடமாட்டார்

திருநெல்வேலி, இருக்கன்துறை ஊராட்சியில் ரூ43 இலட்சம் மதிப்பிலான ஒப்பந்த அறிவிப்பில் (Tender ID:2026_RDTN_684085_1 & 2026_RDTN_684085_2) விதி மீறல் அறிவிப்பு உள்ளது. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில், 06.07.2026 அன்று வெளியிடப்பட்டு இன்று (15.07.2026) நிறைவுற இருக்கும் அந்த அறிவிப்பில் இருக்கும் நிபந்தனைகள், அரசாணை எண் G.O.(Ms.) No.115, Rural Development and Panchayat Raj Department - Date 30.06.2026 இக்கு முரணான வகையில், குறிப்பிட்ட பகுதியை சார்ந்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் வகையில் நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளது. எனவே, டெண்டர் செயல்முறையை இரத்து செய்து, நிபந்தனை விதிகளை மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்பு வெளியிடவேண்டும். இது குறித்த கடிதம் இன்று முதலமைச்சர் திரு.C.விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அமைச்சர் திரு.N.ஆனந்த், செயலாளர், திரு. பிரசாந்த் மு. வடநெரே,IAS, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. ஆனந்த் மோகன், IAS அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
