நிறம் இனம் அழகு மதம் சாதினு எல்லாமே நம்ம தேடி வாங்கிட்டதா? இல்லைதானே ? குணம் மட்டும் தானே நமக்கான அடையாளம்.. அதான் நீ எனக்கு. அவ்வளவு தான் நீ எனக்கு..!
பழிசொல்லியே பழகிய உதடுகளில்
பலிவாங்கவே ஒத்தியெடுத்த முத்தம்;😘
#வாரிக்கையன்
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்,
கலைஞர் பேனா+ஆட்டோகிராப்,
உதயசூரியன் சம்பந்தப்பட்ட லோகோஸ்,
இப்டி போட்டோஸ் HD இருந்தா ஷேர் பண்ணுங்க..
For T-shirt printing purpose
நன்றி.
எப்போது நினைத்தாலும் பிழைபட்ட ஓர் சொல் எல்லா அன்பிலும் உண்டு;
ஒரு சிறிய அவமானம், எப்படியும் வந்துவிடுவாய் என்று நம்பிக்கையோடு இருந்த நொடிகள்;
தவித்த தருணத்தில் வெவ்வேறு திசைகளில் இருந்த உடல்கள்;
உன் விரலால் துடைப்பாய் என்று நம்பி அழுத நினைவுகள்;
தேடித்தேடி வாங்கி வைத்த பரிசுகள்;
உன் வாழ்வில்
என்னோடிருந்ததை ஏதென்று சொல்வாய்;
கருணையின் அருகில் இருந்தேன்
தீக்கொழுந்தின் நுனியில் கருகாதிருந்தேன்;
இனித்த கடலின் கரையில் இருந்தேன்;
மரணமற்ற பார்வையின் கண்களை கண்டிருந்தேன்;
சகலமும் நுகர்ந்து சுதந்திரமாய்
உன் ப்ரியத்தின் பனிக்குடத்தில் இருந்தேன்.
#வாரிக்கையன்
திசை தொலைத்தவன் மலையிறங்க வான் பூத்த நிலவொளியாய்;
அவள் நீயாய் மாறிக்கொண்டே இருந்தாள்;
எல்லாவற்றையும் உன்னோடு ஒப்பிட்டு உன்னை உன்னதமாக்கும் ஒவ்வொரு நாளும் இந்த பைத்தியம்.
#வாரிக்கையன்
அந்த பேருந்திலிருந்து இறங்கி நடந்த பெண்ணுக்கு உன்போலவே கழுத்தில் ஒரு மச்சமிருந்தது;
அவள் அணிந்திருந்த கம்மல் நீ அணிந்திருந்த அதேசாயல்;
அவ்வளவு நேர்த்தியாய் உன்போலவே உடை அணிந்திருந்தாள்;
அந்த குட்டிஉதட்டுக்கு அந்த சுருள்முடிகள் சாயம் தீட்டி உன் செம்புற்று இதழை வரைந்து கொண்டிருந்தன
வேறு காரணங்கள்
ஏதுமே இல்லையா..?
நான் உன்நிழலிலே உயிர் ஆற்றிக் கொள்ள;
இனியப்படி ஒரு தவறும் செய்யமாட்டேன்;
உன்னோடு மட்டும் இருந்து கொள்கிறேன்;
நீயல்லாத வாழ்வில் என்னால் என்ன செய்ய முடியும்;
எனத்தேம்பும் ஈரம் மின்னும் கண்களின் காதலை கைவிட்டு தான் உன்னதம் செய்திட முடியும்.
#வாரி