Sudhagar Pitchaimuthu

293 posts

Sudhagar Pitchaimuthu

Sudhagar Pitchaimuthu

@vedichi

Associate Professor, Heriot-Watt University,UK

United Kingdom Beigetreten Ekim 2009
198 Folgt2.3K Follower
Sudhagar Pitchaimuthu retweetet
DMK NRI Wing
DMK NRI Wing@DMKNRIWing·
கல்லூரி காலத்திலிருந்தே ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட விஞ்ஞானி. ஸ்காட்லாந்து பேராசிரியர். கடல் கடந்து வென்றாலும், தான் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் துணையாய் நிற்கும் பண்பாளர் சுதாகர் பிச்சைமுத்து. #VoteForDMK
தமிழ்
3
129
230
3.1K
Vetri Dmk
Vetri Dmk@VETRISe98406132·
@senbalan நாந்தான் அண்ணா . நன்றி 🙏🏾
தமிழ்
5
0
4
153
Sen Balan
Sen Balan@senbalan·
யார்யா இந்த பசங்க… இவங்க பேசுறதை பார்த்து நம்மலாம் எப்ப இப்படி பேசுவோம்ன்னு எண்ணம் வந்துருச்சு…. யோவ் அருமைய்யா…
Surya Born To Win@Surya_BornToWin

Goosebumps 🔥🔥🔥 Must watch அரசியல்படுத்தப்பட்ட Gen -Z 2 K kids👌👏🏻👏🏻👏🏻

தமிழ்
8
125
526
13.3K
M.M.Abdulla
M.M.Abdulla@pudugaiabdulla·
Stop the fear-mongering. It’s called Capital Investment, not 'Alarming Debt'. Here is the reality check: Debt is a burden only when there is no growth. But Tamil Nadu has recorded a massive 39% Growth in the last 5 years, expanding to a ₹17.3 Lakh Crore economy! We are growing faster and bigger than the very states you are trying to compare us with. This is productive investment. We borrow to build infrastructure and create assets, not to pay salaries. Learn the difference between 'Bad Debt' and 'Smart Growth'. It takes a special kind of stupidity to look at a booming ₹17.3 Lakh Crore economy and only see the debt column. Educate yourself before you embarrass yourself further. - M M Abdulla MBA (finance)
M.M.Abdulla tweet media
Praveen Chakravarty@pravchak

TN has the highest outstanding debt of all states In 2010, UP had more than double the debt of TN Now, TN has higher debt than UP👇🏽 TN’s interest burden (%) is 3rd highest after PB & HR TN’s debt/gdp is still much higher than pre-covid levels TN’s debt situation is alarming!

English
64
300
795
68.4K
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
2025 நோபல் பொருளாதார விருது - உலகை மாற்றிய தொழில்நுட்ப வளர்ச்சி: நிலைத்த வளர்ச்சியின் ரகசியம் ------------------------------------------------------------ 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பொருளாதார விருது (The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2025) மூன்று முக்கிய பொருளாதார அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: ஜோயல் மோக்கியர் (Joel Mokyr), பிலிப் அகியோன் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt). ஜோயல் மோக்கியர் Northwestern University, Evanston, IL, USA“for having identified the prerequisites for sustained growth through technological progress” பிலிப் அகியோன் Collège de France and INSEAD, Paris, France, The London School of Economics and Political Science, UK பீட்டர் ஹோவிட் Brown University, Providence, RI, USA “for the theory of sustained growth through creative destruction” இந்த மூவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு தற்காலிக முன்னேற்றத்திலிருந்து நிலைத்த வளர்ச்சியாக மாறியது என்பதை வெவ்வேறு கோணங்களில் விளக்கியுள்ளனர். எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகளவில் தொழில்நுட்ப முன்னேற்றம் வழியாக நிலைத்த பொருளாதார வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை இந்த ஆண்டின் நோபல் பொருளாதாரப் பரிசு பெற்ற அறிஞர்கள் கணித மாதிரிகள் மற்றும் வரலாற்றுப் பகுப்பாய்வுகள் மூலம் விளக்கி நிரூபித்துள்ளனர். இதற்கான முக்கிய காரணம் - ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமூகங்கள் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பழையவற்றை மாற்றியமைத்த திறன் கொண்டிருந்ததே ஆகும். உதாரணத்திற்கு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொலைபேசியில் (Telephone) இருந்து அலைபேசி (Mobile phone) வரை ஏற்பட்ட மாற்றங்களையும் நாம் விரைவாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் ஓர் பகுதியாக மாற்றிக் கொண்டோம். இவ்வாறான தொடர்ச்சியான புதுமை ஏற்றுக்கொள்ளுதல் தான் வளர்ச்சியின் அடிப்படை என கூறலாம். இப்போது நமக்கு முன் நிற்கும் இரண்டு முக்கியமான கேள்விகள்: 1. புதுமை வழியிலான பொருளாதார வளர்ச்சி எதனால் நிலைத்ததாக மாறியது? 2. புதிய தொழில்நுட்பங்கள் பழையவற்றை மாற்றியபோது ஏற்பட்ட முரண்பட்ட நலன்களை வளர்ச்சி எவ்வாறு சமாளித்தது? ஜோயல் மோக்கியர், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் எவ்வாறு ஒருவரையொருவர் ஊக்குவித்து “சுயமாகத் தொடரும் வளர்ச்சியை” உருவாக்கும் செயல்முறையை விளக்கினார். அவர் கூறுவது, சமூகங்கள் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்குடன் இருந்தால் மட்டுமே அறிவியல் முன்னேற்றம் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதாகும். பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் இணைந்து 1992 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஆக்கப்பூர்வமான அழிவு (Creative Destruction) முறைமையில், நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்கி, பழைய தொழில்கள் மற்றும் பொருட்களை மாற்றியமைத்து, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கின்றன என விளக்கினர். இது “படைப்பு” என்பதால் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது; அதேவேளை “அழிவு” என்பதால் பழைய தொழில்நுட்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இம்மூவரின் ஆராய்ச்சிகள் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல; மாறாக அது அறிவு (knowledge), புதுமை (innovation), தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் சமூக திறந்த மனப்பாங்கு ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதை நமக்கு அவர்களது ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து காட்டியுள்ளனர். 2025 நோபல் பொருளாதார விருது, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை காரணம் புதுமைதான் (Innovative) என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது — “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வழி நிலைத்த வளர்ச்சி” என்பது இவ்விருதின் மையக் கருத்தாகும். இன்று விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, நோபல் குழுவினர் விருதாளர்களில் ஒருவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் அகியோன் (Paris School of Economics) அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினர். அந்த நேரத்தில் நிருபர்கள் கேட்ட முக்கியமான கேள்வி — “நீங்கள் பெற்றிருக்கும் நோபல் பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?” அதற்கு பிலிப் அகியோன் மகிழ்ச்சியுடன், தனது விருது தொகையை பாரிஸ் பொருளாதாரப் பள்ளியில் (Paris School of Economics) உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முயற்சிகளுக்காக ஒதுக்கப் போவதாக தெரிவித்தார். மேலும், “செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் உதவியுடன் எவ்வாறு நமது பொருளாதார ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி, எதிர்காலப் போக்குகளை ஆராயலாம் என்பதையே கவனமாகப் ஆராய்ச்சி செய்ய‌ விரும்புகிறேன்,” என்று கூறினார். அவர் மேலும், தற்போதைய முக்கிய சவால்களில் ஒன்றான தொழிற்சாலை கார்பன் உமிழ்வு (Industrial carbon Emission) குறித்து — “கார்பன் வரி, குறை கார்பன் உமிழ்வு தொழில்நுட்பங்கள் போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும்” என்பதையும் ஆராயப்போவதாக தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு நுட்பம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை குறைக்குமா?, அல்லது புதிய தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்குமா? என்ற நம் கேள்விகளுக்கான பதில்களை நோபல் பரிசு பெற்ற இவ்வாய்வுகள் வழங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. “புதுமை வழியிலான தொழில்நுட்ப முன்னேற்றமே எதிர்கால உலகின் திசையை நிர்ணயிக்கும்” என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மேலும், தரவு சார்ந்த முடிவெடுப்புகள் (Data-driven decisions) இனி ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய முதலீட்டு கருவியாக உருவெடுக்கும். எதிர்கால முன்னேற்றங்களும், கொள்கை வடிவமைப்புகளும், ஆராய்ச்சி முடிவுகளும் அனைத்தும் தரவின் ஆதாரத்தில் நிலைநிறுத்தப்படும் என்கிற திசையில் புதிய யுகம் துவங்கியுள்ளது. - பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து PhD, FRSC கெரியட்-வாட் பல்கலைக் கழகம் ஸ்காட்லாந்து, பிரிட்டன் Picture Courtesy: The Royal Swedish Academy of Sciences & Nobel Foundation
Sudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet media
தமிழ்
0
0
1
300
Arun Bala
Arun Bala@ItsArunBala·
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜயகாந்த் அஜித் என பலர் உச்ச நடிகர்களாக இலட்சக்கணக்கான ரசிகர்களோடு இருந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் ஒரு முறை கூட தன் ரசிகர்களை பண்ணை விலங்குகளாக நடத்தி சாகவிட்டு பார்த்ததில்லை. ஏனெனில் அவர்கள் யாரும் சாடிஸ்ட் சைகோ இல்லை. #PsychoKillerVijay
தமிழ்
3
8
16
1.9K
வியாசன்
வியாசன்@viyasank·
@vedichi இந்த பிச்சைமுத்து சார் சொல்வதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இவர் குறிப்பிடும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி, இது உண்மையா என்று கேட்டாலும் விளக்கம் தருவார்கள். யாராவது ஊடகவியலாளர் செய்யலாம். 😂😂
தமிழ்
1
0
1
286
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா! 1925-ல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு நூறாண்டுகளை நிறைவு செய்கிறது! இதனைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி (St Antony’s College, University of Oxford) மற்றும் பலியோல் கல்லூரி (Balliol College, University of Oxford) இணைந்து, "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப்டம்பர் 4-5, 2025 அன்று சர்வதேச கருத்தரங்கை நடத்தின. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் (Asian Centre for Research) ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் ஜிம் மாலின்சன் (Jim Mallinson, University of Oxford),மற்றும் பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி (Faisal Devji (St Antony's College)) ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் (22 speakers) இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பின்வரும் தலைப்புகளில் ஆய்வு விவாதங்களை முன்வைத்தனர்: • பெரியார் மற்றும் திராவிட இயக்கம் • பெண்ணியம், திருமணம் மற்றும் கண்ணியம் • சாதி மற்றும் சமூக நீதி • அறிவு, நினைவு மற்றும் சட்டம் • உலகளாவிய மற்றும் பிராந்திய மரபுகள் • அரசியல் மற்றும் பண்பாட்டு அங்கீகாரம் முதல்வரின் சிறப்புரை! தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1983 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடைபெற்ற‌ சுயமரியாதை இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் மானமிகு ஆசிரியர் திரு கி வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதை முதல்வர் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவரது உரையில், தந்தை பெரியார் உலகளவில் மானுட நீதிக்காக ஆற்றிய பணிகளையும், அவரது பேரனாக இந்நிகழ்வில் பங்கேற்றதையும் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்தார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் சுயமரியாதை இயக்கம் குறித்து அவர் பேசிய "ஆண்டவன் பெயரால், மதம், சாதி, இதிகாச புராணங்களின் பெயரால் தாழ்த்தப்பட்டுகிடந்த மக்களை பீடுநடை போடச் செய்த சிறப்புகுரிய இயக்கமாக சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது" குறிப்பினை மேற்கோள் காட்டினார். தந்தை பெரியாரின் திருவுருவப்படம் திறப்பு! இந்நிகழ்வில், தந்தை பெரியாரின் திருவுருவப்படம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது. இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர் திரு. தோட்டா தரணி அவர்கள் நேர்த்தியாக வரைந்துள்ளார். இப்படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் (St Antony’s College, University of Oxford) நிரந்தரமாகப் பொருத்தப்பட உள்ளது. உலகமயமாகும் பெரியார்! சுயமரியாதை இயக்கம் மூடநம்பிக்கைகளை உடைத்து, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற்றுத் தந்தது. இன்று, பெரியாரின் பங்களிப்பு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவரது மரபு விவாதிக்கப்படுவது நமக்குப் பெருமை! அனைவருக்கும் அழைப்பு! பிரிட்டனுக்கு வரும் நண்பர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (St Antony’s College, University of Oxford) தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தைப் பார்வையிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர், ஆராய்ச்சியாளர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உளமார்ந்த நன்றி! இப்பெருமைமிகு விழாவில் எனது நண்பர்களுடன் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா - தமிழர்களின் பெருமிதம்! -பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து, PhD, FRSC ஸ்காட்லாந்து, செப்டம்பர் 5, 2025 @mkstalin @TRBRajaa #Periyar100 #SelfRespectMovement #OxfordUniversity
Sudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet media
தமிழ்
19
136
427
16.9K
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
On behalf of Briton Tamil Diaspora, We are honoured to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, @mkstalin, to deliver the commemorative speech at the Self-Respect Movement and its Legacies Conference at University of Oxford University, UK, on 4 September, 2025. 🌍📖 #SelfRespectMovement #Oxford
English
13
109
428
11.7K
Sen Balan
Sen Balan@senbalan·
நாடாளுமன்ற வேலை நாட்களில் @pudugaiabdulla அண்ணன் 90% வருகைப்பதிவு வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது. எவ்வளவு முக்கிய வேலை இருந்தாலும், அனைத்து தினங்களும் அவைக்கு சென்றுவிடுவாரே, எப்படி அந்த 10% மிஸ் ஆனது என ஆராய்ந்து பார்க்கும் போது தான் தெரிந்தது, தொகுதி மறுசீரமைப்பு போன்ற மாநில உரிமை பிரச்சனைகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாட்கள் என. சஸ்பெண்ட் ஆன தினங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் 100% வருகைப் பதிவு வைத்திருக்கிறார் அண்ணன் 🎉 🎊 👏🏻 திமுக என்றாலே உழைப்பு 💐
Sen Balan tweet media
தமிழ்
2
51
177
4.2K
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
திராவிட மாடலின் மையம் "எல்லோருக்கும் எல்லாம்". அதாவது, சாதி, மத, பேதங்களை தாண்டி, அனைத்து சமூகப் பிரிவினருக்கும் சம உரிமைகள் மற்றும் அரசியல், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவையில் சம பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் அடித்தளம். அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், அரசின் அதிகாரபூர்வமான பதவிகளில், எளிய பின்னணியில் இருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளை நியமிப்பது மிகவும் முக்கியமானது. இது சமூக நீதி மற்றும் நியாயத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும். இந்த பணியில் மிகுந்த சவால்கள் இருந்தாலும், மனித வள மேம்பாட்டுக்கான திறன் பயிற்சியை இலக்குகளுடன் திட்டமிட்டு, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முதலீட்டை சரியான நேரத்தில், சரியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியமான பணியாகிறது. இதை தெளிவாகக் கணித்த தமிழ்நாடு அரசு, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் Rs 7,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த உதவித் தொகை, மாணவர்கள் தேர்வில் முழு கவனம் செலுத்த, அவர்களுக்கு ஒரு உறுதியான ஊன்றுகோலாக இருந்தது. இன்று யூ.பி.எஸ்.சி. (UPSC) தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று, உதவித் தொகை பெற்ற 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக தேர்ச்சி பெற்ற 1009 பேரில், 4.95% பேர் தமிழ்நாட்டிலிருந்து, இந்தத் திட்டத்தின் பயனாளிகளே என்பதுவே மிகப் பெருமிதமான செய்தியாகும். இந்தப் பெரிய வெற்றிக்கான முதல் படியை, “நான் முதல்வன்” திட்டம் மூலம் தமிழக அரசு வெற்றிகரமாக அமைத்திருக்கிறது. @naan_mudhalvan இத்திட்டத்தை உருவாக்கி, சமூகத்தின் அடித்தளத்தை உயர்த்தும் இந்த நெறியில் செயல்பட்டு சாதனை படைத்த தமிழ்நாடு முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்! ‍ -முனைவர் சுதாகர் பிச்சைமுத்து 22/04/2025
Sudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet media
தமிழ்
0
5
21
1.3K
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
@simtaankaaran அற்புதமான நடை. உங்கள் நண்பர் வாயிலாக நான் என் நண்பர்களை நினைவு கூர்ந்தேன்.
தமிழ்
1
0
1
76
அன்பு
அன்பு@simtaankaaran·
I am sorry if it was traumatic for some of you. என் பாரத்தை யாருக்கும் கடத்தணும்னு இத எழுதல. மனசுல அவனை பத்தி இருக்கிறதையெல்லாம் கொட்டிரணும்னும், எழுத்தாகிட்டா அவன் இன்னும் ரொம்ப நாளைக்கு இருப்பான்ங்கிற எண்ணத்துலயும் எழுதுனது தான் இது. எங்கள் செல்வத்தை முழு மனதோடு ஆரத் தழுவி, உங்கள் செல்வமாக ஏற்றுக் கொண்ட உள்ளங்களுக்கு பேரன்பும் நன்றிகளும் ♥️.
அன்பு@simtaankaaran

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். முப்பதாயிரம் அடி உயரத்தில், வெறுமை மட்டுமே நிரம்பியிருக்கும் இந்த நீண்ட கணங்களில், மனம் திரும்பத் திரும்ப செல்வத்தின் நினைவுகளில் அலைபாய்கிறது. செல்வத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை இப்போது எழுதித் தீர்த்து விட்டால், சுற்றியிருக்கும் வெறுமையின் அடர்த்தி சற்று லேசாகக் கூடும். செல்வம், பிக்காலி என்றுதான் என்னை எப்போதும் அழைத்திருக்கிறான். என்னை மட்டுமல்ல, சுரேசையும் அப்படித் தான் அழைத்திருக்கிறான். “பிக்காலி” சுரேசிடம் இருந்து செல்வத்துக்கு தொற்றிக் கொண்ட சொல். “மாமா”, “மாப்ள” என்பது போல, பிக்காலி சுரேசுக்கு விருப்பமான ஒரு விளிப்புச் சொல்லாக இருந்தது. தமிழ்ச்சமூகத்தில் இன்று புழக்கத்தில் இருக்கும் பல சொற்களைப் போல வடிவேலுவின் வசனம் ஒன்றிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல். சுரேசும் நானும் மூன்றாம் வகுப்பில் இருந்து ஒன்றாகப் படித்தோம். ஆனால், எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவன் இருந்த போலீஸ் குவார்ட்டர்ஸ் அருகே நாங்கள் வீடு மாறிப் போன பிற்பாடுதான் நெருக்கம் அதிகரித்தது. சனி ஞாயிறு மதிய வேளைகளில், சைக்கிளை எடுத்துக் கொண்டு சுரேசின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். அவன் வீட்டுக்கு எதிரே இருந்த வேப்பமரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்திவிட்டு, வெளேர் என்று அடிக்கும் வெயிலை வேடிக்கை பார்த்தபடி அம்மஞ்சல்லிக்குக் கூட பிரயோசனம் இல்லாத எதையாவது பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். எனக்கு மிகவும் பிடித்த அது போன்ற தருணங்கள், சுரேசுக்கு உவப்பானதாக இருந்ததில்லை. “மத்தியானம் கறி கிறி தின்னா பேசாம தூங்குடா. மொட்டை வெயில்ல சைக்கிள எடுத்துட்டு வந்துருக்க, பிக்காலிப் பயலே, வீட்டுக்குப் போடா” என்பான். இருந்தாலும் உரையாடல் தொடரும். இந்த வழக்கம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. நாங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். அதே வெளேர் வெயில், அதே வேப்பமரம், அதே சைக்கிள் செட்டப்பில் நின்றிருந்தோம். சுரேஷ் ஹேண்டில்பாரில் கை வைத்து சாய்ந்து நின்று கொண்டிருந்தான். கேரியரில் உட்காந்திருந்த நான், இறங்கி கைலியை அரைக்கட்டாக கட்டிக் கொண்டிருக்கும் போது, “அண்ணேன் இங்க பாருங்க” என்று, வாய் நிறைய பல்லோடும், கையில் ஒரு பெரிய கரட்டாண்டியோடும் செல்வம் வந்தான். அது கயிற்றில் இருந்த விடுபட முயன்று துள்ளிக் கொண்டிருந்தது. கூடவே அவனது நண்பன் விஜியும். “பிக்காலிப் பயலே இத எங்கடா புடிச்ச” என்று சுரேஷ் கேட்க. “தோட்டத்துல தான், மூக்குப் பொடி வாங்கப் போறோம், வர்றீங்களா” என்றான். “லூசுப் பயலே, அத வுடுறா போகட்டும்” என்று சுரேஷ் சொல்லியதை செல்வமும், விஜியும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கரட்டாண்டியைத் தொங்கவிட்ட படி, மளிகைக் கடையை நோக்கிச் சென்றார்கள் போஸ்ட் கம்பத்தை தாண்டும் வரை, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ், என்னிடம் திரும்பி “பூரா ஒன்னைய மாதிரித் தாண்டா இருக்காய்ங்க. மொட்டை வெயில்ல ஓணான் புடிக்கிறாய்ங்களாம். மத்தியானம் கறி கிறி தின்னா தூங்குங்கடா,பிக்காலிப் பயலுகளா” என்றான். இது நடந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை செல்வம் தொடர்பான நினைவில் என் மனதில் பசுமையாக பதிந்திருப்பது, அரை டவுசரோடும், கரிச்சாமண்டையோடும், சிரித்தபடி கரட்டாண்டியோடு அவன் வந்து நின்ற காட்சி தான். செல்வம், சுரேசுக்கு பக்கத்து வீடு. எங்களை விட நான்கைந்து வயது இளையவன். சுரேசைப் பார்க்க அவன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம், செல்வத்தைப் பார்ப்பேன். ஆரம்ப காலங்களில் அதிகம் பேசிக் கொண்டதில்லை. பன்னிரெண்டாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏழாங் கிளாஸ் பயல்களிடம் பேச பெரிதாக ஒன்றும் இருந்திருக்கவில்லை. சில மாதங்களில், சுரேஷ் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், செல்வமும் வரத் தொடங்கினான். அதன் பிறகு கிரிக்கெட், டீக்கடை, கிணற்றடி, கோயில் திருவிழா என்று தெருப்புழுதியாய் சுற்றியதில் என்று வெகு நெருக்கமாகிவிட்டோம். பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்காக மதுரை சென்ற பிற்பாடும் வாரத்திற்கு ஒரு முறை சந்திக்கும் வழக்கம் தொடரத் தான் செய்தது. வேலைக்காக சென்னை, பின்னர் பெங்களூரு என்று வாழ்க்கை அடுத்தடுத்த கியர்களை மாற்றும் போதுதான் சற்று இடைவெளி விழுந்தது. தீபாவளி, பொங்கல் இன்னபிற விடுமுறை நாட்களின் போது மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிந்தது. 2010 வாக்கில் நான் பெங்களூரில் இருக்க, சுரேஷ் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நான் சென்னை செல்லும் போது, சுரேஷ் வீட்டில் தங்குவது வழக்கம். வேளச்சேரி கங்கை நகரில் இருந்த அந்த வீட்டில், சுரேசுடன் இன்னும் சில நண்பர்களும் இருந்தார்கள்.  அப்படி ஒரு முறை கங்கை நகரில் இருந்த அந்த வீட்டிற்குச் செல்லும் போது தான் பல ஆண்டுகள் கழித்து செல்வத்தை மீண்டும் பார்த்தேன். நன்றாக முடி வளர்த்து, தாடி, பெரிய மீசை என்று ஆளே வேறு மாறியிருந்தான். “ஹே..பிக்காலி…எப்டி இருக்கீங்க” என்று கட்டிக்கொண்டான். “என்னடா காட்டெருமை மாதிரி ஆயிட்ட” என்றவுடன். “வஞ்சனை இல்லாத மனசு இருந்தா அப்டிதான் பிக்காலி இருக்கும்” என்றான். எம்.சி.ஏ முடித்துவிட்டு சுரேசுடன் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்தான். இடைப்பட்ட காலத்தில் டூட்டியில் இருக்கும் போதே அவனது அப்பா தவறியிருந்தார். அது ஒரு மாதிரி அவனை சீரியஸாக்கியிருந்தது. இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் குழந்தைத்தனம் அவ்வப்போது மீறிக்கொண்டுதான் இருந்தது. “அப்பா வேலையக் குடுத்தாங்கண்ணே. நாந்தான் எம்.சி.ஏ முடிச்சிட்டன்ல. அதான் அக்காவ எடுத்துக்கச் சொல்லிட்டேன். அது போலீஸாயிருச்சுன்னா கொஞ்சம் தெம்பா இருக்கும்ல. பெருசு பரவால்ல, சிறுசுக்கு தைரியம் பத்தாதுண்ணே. நான் வேலைக்குப் போற வரைக்கும் அம்மாவை அது பாத்துக்கிட்டா, அதுக்கப்புறம் நான் பாத்திக்கிருவேண்ணேன்” என்றான். இதைச் சொல்லும் போது அவனுக்கு 23-24 வயது இருக்கும். அப்பாக்களுக்கும், இளவட்ட மகன்களுக்கும் இடையே, எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும், எவ்வளவு வாக்குவாதங்களைக் கடந்தாலும், தங்கள் இருபதுகளில் அப்பாக்கள் தவறும் பொழுது, மகன்கள் உண்மையில் தவங்கித்தான் விடுகிறார்கள். ஆனால், அதிலிருந்து வெகு வேகமாக விடுபட்டு, அசுரத்தனமாக உழைத்து முன்னேறி, குடும்பத்தை மேடேற்றுவதும் அவர்கள் தான். சகோதரிகளோடு இருப்பவர்கள் அண்ணனாக, தம்பியாக மட்டுமல்ல, தகப்பனாகவும் மாறுவதை நேரில் உணர்ந்திருக்கிறேன். ஓரிரு நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு பெங்களூர் சென்று விட்டேன். சில மாதங்கள் கழித்து, சுரேஷுக்கும் கல்யாணம் நிச்சயமானது. கல்யாண தேதி குறித்து தகவல் சொல்ல போன் செய்தவன், “வேளச்சேரி வீட்டை அடுத்த மாசம் காலி பண்றோம்டா. செல்வத்தை தான் என்ன செய்றதுண்ணு தெரியல. எங்கயாது தங்க இடம் கிடைச்சிட்டா போதும், பாத்துக்கிரலாம்” என்றான். “ம்ம்” கொட்டிவிட்டு ஃபோனை வைத்து விட்டேன். உண்மையில் எனக்கும் பெங்களூரு செட் ஆகவில்லை. இடமாறுதல் தேவைப்பட்டது. அந்த உரையாடல் நடந்து இரண்டு வாரங்களில் எனக்குச் சென்னையில் வேலை கிடைத்தது. சுரேசுக்கு போன் செய்தேன். “சென்னை மாறி வர்றண்டா. இனிமே அங்கதான். வீட்டைக் காலி பண்ண வேண்டாம், செல்வம் என்கூட இருக்கட்டும். பிரபாவும் என் கூட வருவான்” என்றவுடன் ஜாலியாகிவிட்டான். பிரபா எங்களுக்கு ஸ்கூல் ஜீனியர். பெங்களூரில் என்னோடு தங்கி படித்துக் கொண்டிருந்தான். அதன் பிறகான இரண்டு வருடங்கள் செல்வம், பிரபா, கணபதி நான் என்று கங்கை நகரில் அட்டகாசமாகக் கழிந்தன. செல்வத்துக்கு மட்டும் வேலை அமையவில்லை. அவனுக்கு வேலை தேட இசவாக இருக்கும் என்று, ஊரில் இருந்த பைக்கை சென்னைக்குக் கொண்டு வந்தேன். பைக் வந்த ஒரு மாதத்தில், செல்வத்துக்கு பிஎஸ்என்எல் சப்போர்ட்டில் காண்டிராக்ட் வேலை கிடைத்தது. மதியம் ரெண்டு மணி ஷிஃப்ட். நந்தனத்தில் இருந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டு, இரவு பத்து மணி வாக்கில் வருவான். அதன் பிறகு இருவரும் சென்று விஜயநகர் சுதர்லேண்ட் அருகே டீக்குடித்துவிட்டு, அரட்டை அடித்துவிட்டு வருவோம். “பதினோரு மணி ஆச்சு. வீட்டுக்குப் போயி தூங்குங்கடா. ரோடல்யே நிக்கிறானுக. பிக்காலிப்பயலுக” என்று சுரேஷ் திட்டுவான். செல்வத்துக்கு ஒரு காதல் இருந்தது. கல்லூரியில் உடன் படித்த ஒரு தெலுங்கு பெண்ணை காதலித்துக் கொண்டிருந்தான். “சொல்ட்டியாடா” என்றேன். “இல்லண்ணே, நான் லவ் பண்றேன்னு சொல்லி அதுபாட்டுக்கு ஓகே சொல்லிருச்சுன்னா, டபுள் சைட் ஆயிரும். அப்புறம் நேரத்துக்குப் பேசணும், பாக்கணும். சரிப்பட்டு வராதுண்ணே. இதுண்ணா ஒன்-சைட் பாருங்க. என் இஷ்டம், நான் பாட்டுக்கு ஜாலியா லவ் பண்ணுவேன்ல” என்றான். “என்னடா வித்தியாசமா லவ் பண்றீங்க” என்றதற்கு, “அந்தப் பிள்ளைக்கும் என்னை புடிக்கும்ணே. இப்ப நான் கேட்டா ஓகே சொல்லிரும். வேலை இல்ல எனக்கு இன்னும், அது வீட்ல தெரிய வந்துச்சுன்னா, வேற மாதிரி பஞ்சாயத்து ஆயிரும். கொஞ்சம் பொறுப்போம்னு பாத்தேன். என்ன ஆயிரப் போகுது” என்றான். இடையிடையே அந்தப் பெண்ணைப் பற்றிப் பேசுவான். ஹாலில் ஒரு ஒரமாகப் படுத்து மெசேஜைப் படித்து சிரித்துக் கொண்டு இருப்பான். இதற்கிடையே, எப்போதோ எழுதியிருந்த ஒரு மத்திய அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தான். நேர்காணலுக்கு டெல்லி வரச் சொல்லியிருந்தார்கள். உயர்பதவி, நல்ல சம்பளம். செல்வத்தைத் தனியாக அனுப்பவும் யோசனை. பின்னர் வழக்கம் போல, அண்ணன் ஒருவர் மூலமாக நண்பன், நண்பனின் நண்பன், நண்பனின் நண்பனுக்கு நண்பன் என்று ஒருவரைப் பிடித்தேன். அவரிடம் பேசி தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். செல்வம் அங்கேயே சென்று தங்கி, நேர்காணலையும் முடித்து விட்டு வந்துவிட்டான். “பண்ணிருக்கேன் பிக்காலி. பாப்போம்” என்று சுரத்தில்லாமல் சொன்னான். சிரமம்தான் போல என்று அதனை மறந்து விட்டோம். டெல்லி சென்று வந்த பின்பும் அதே பிஎஸ்என்எல் வேலையில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தான். பல மாதங்கள் கழித்து, ஒரு மட்ட மத்தியானத்தில், வேளச்சேரி முருகன் கல்யாண மண்டபத்துக்கு அருகே இருந்த டீக்கடை வாசலில், ஊரில் உள்ள மொத்த வெயிலையும் நாங்கள் எங்கள் தலையில் வாங்கிக் கொண்டிருந்த போது, அந்த நற்செய்தி வந்தது. செல்வம் அந்தப் பணிக்குத் தேர்வாகியிருந்தான். கடையில் டீ சொல்லும் போது பி.எஸ்.என்.எல் காண்டிராக்ட் எம்ப்ளாயியாக இருந்தவன், டீ-க்ளாஸை வைக்கும் போது மத்திய அரசுப் பணியில் குரூப்-ஏ ஆபீசர் ஆகியிருந்தான். அந்த நொடியில் செல்வத்தின் வாழ்க்கை மேடேறத் தொடங்கியது. கைகளை இறுக்கிக் கொண்டு, கண்கள் பனிக்க, சிரித்துக் கொண்டே, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான். வெகு நிதானமாக இருந்தான். நானெல்லாம் எனக்கு வேலை கிடைத்த போது சன்ன சலம்பலில் இருந்தேன். அவன் கடந்து வந்த சோதனைகள் அவனை அத்தனை பக்குவப்படுத்தி இருந்தன. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்தது. டெல்லியில் சேரச் சொல்லி உத்தரவு. ஆனால் போஸ்டிங் அந்தமான் தீவுகளில். ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிவிட்டோம். அவனுக்கு முழுதாக விருப்பமில்லை, ஆனால் இப்படி ஒரு வாய்ப்பை எப்படி நிராகரிக்க முடியும். “இல்ல பிக்காலி, அஞ்சு வருசம் இருந்தா டிரான்ஸ்பர் வாங்கிக்கலாமாம். மெட்ராஸே வாங்கிட்டு வந்துருவென். டோண்ட் ஒர்ரி” என்றான். அந்தமானில் போர்ட் ப்ளேர் என்றால் கூட பரவாயில்லை. அங்கிருந்து ஆறு மணி நேரப் பயணதில், மாயா பந்தர் என்றொரு இடத்தில் போஸ்டிங் போட்டிருந்தார்கள். அலுவலகத்தில் மட்டும் சிக்னல் கிடைக்கும். அங்கிருந்து தான் போன் பேசுவான். வருடத்திற்கு ஒரு முறை பொங்கலை ஒட்டி வருவான். சென்னைக்கு வந்து, இங்கிருந்து கயத்தாறு அருகே இருந்த சொந்த ஊருக்கு சாமி கும்பிடச் செல்வான். அவனது அப்பாவை அங்கே தான் அடக்கம் செய்திருந்தார்கள். இதற்கிடையே எனக்கு திருமணம் நிச்சயமானதை அவனுக்கு தகவல் சொன்னேன். “ரெண்டு மூணு நாளு முன்ன வர முடியுமான்னு தெர்ல பிக்காலி. ஆனா கல்யாணத்தன்னைக்கு வந்திருவேன். டோண்ட் ஒர்ரி” என்றான். எனது திருமணத்திற்கு ஒரிரு வாரங்கள் முன்பு ““A real short bluff” என்ற தலைப்பிட்டு, ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தான். அவன் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது குறித்து வெகுவாக வருத்தப்பட்டிருந்தான். நண்பர்கள் உடன் இல்லாத ஏதோ ஒரு தீவில் தனிமை வேறு அவனை சிரமப்படுத்தியிருக்கிறது. அவன் அப்பா தவறியது, அவன் கஷ்டபட்டதை எல்லாம் சொல்லி “என்கிட்ட வேலை இல்லாதப்ப, பாக்கெட் காலியா இருந்தப்ப நீங்க, அந்தப் பொண்ணு எல்லாரும் என் கூட இருந்தீங்க. இப்ப வேலை இருக்கு, பாக்கெட் நிறைய காசு இருக்கு. ஆனா நீங்க யாரும் என் கூட இல்ல. அந்தப் பொண்ணும் என் கூட இல்ல.  I feel bad and unlucky. ஆனா இந்தத் தனிமை கூட எனக்கு பிடிச்சிருக்கு, ஏன்னா நான் அழுதா யாருக்கும் தெரியாதுல்ல” என்ற ரீதியில் எழுதி அனுப்பியிருந்தான். படித்துவிட்டு நான் பதில் எதுவும் எழுதவில்லை. அதன் பிறகு எனது திருமணத்திற்கு வந்தான். அவனது அக்கா திருமணத்திற்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். எனக்கு மகள் பிறந்த போது தகவல் சொன்னேன். சொன்ன நாளில் இருந்து என் மகளின் பிறப்புச் சான்றிதழைக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தான். “அத வச்சு என்னடா செய்யப்போற” என்றதற்கு, “ஹலோ..அனுப்புன்னா அனுப்பணும். நான் பெரியவனா, நீங்க பெரியவனா. சொல் பேச்சுக் கேட்டுப் பழகுங்க” என்றான். ஓரிரு மாதங்கள் கழித்து ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் அவனிடம் இருந்து ஈமெயில் வந்தது. எனது மகளின் பிறப்புச் சான்றிதழில், பச்சை மையில் கையெழுத்திட்டு, அவனது பதவிக்கான சீல் வைத்து, அதனை ஸ்கேன் செய்து “Thanks for all you have done for me” என்று எழுதி அனுப்பியிருந்தான். அவன் க்ரூப்-ஏ ஆபீசர் ஆகி, அட்டெஸ்டேஷன் செய்து கையெழுத்திட்ட முதல் சான்றிதழ் என் மகளுடையது. என் மகளுக்கான முதல் சான்றிதழில் முதல் அட்டெஷ்டேஷன் செல்வத்தினுடையது. இப்படி யோசித்து செய்வான் என்று நான் நினைக்கவில்லை. அந்த ஒற்றைக் கையெழுத்தின் பின்னால் இருக்கும் உழைப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் விட என்ன பெரிய பரிசினை அவனோ நானோ என் மகளுக்குக் கொடுத்துவிட முடியும். “சந்தோசம்டா” என்பதைத் தவிர அவனிடம் வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை எனக்கு. அது தவிர, எப்போதும் போல பொங்கலை ஒட்டி வரும் போது மட்டும் நேரில் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஒருமுறை வீட்டுக்கு வரும் போது மரத்தால் செய்த ஒரு அழகான கிருஷ்ணர் சிலை ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தான். “இத வச்சு நான் என்னடா செய்ய” என்றதற்கு, “குடுத்தா வாங்கி வச்சிக்கணும். கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது, புரியுதா, மண்ட பத்ரம்” என்றான். “எப்படா இங்கிட்டு வரப் போற. போயி ஆறு வருசம் ஆகப் போவுது. அஞ்சு வருசத்துல டிரான்ஸ்பர் வாங்கிரலாம்ன” “வந்துரும் பிக்காலி. கேட்டுருக்கேன்” “நீ இருக்க ஊருக்கு எவனும் பொண்ணு குடுக்க மாட்டாண்டா. இங்கிட்டு வந்தாத்தான் ஆச்சு” என்றதற்கு “எனக்கு எவன் பொண்ணு தரமாட்டேங்கிறவன்” என்றான். அன்றைக்கு ஏர்போர்ட் சென்று விட்டு “You will not find your brown color leather shoes in your shoe stand. Don’t search for those. They have come with me. Thank you” என்று மெசேஜ் அனுப்பியிருந்தான். அனைத்திலிருந்தும் வெளிவந்து நார்மல் ஆகிவிட்டான் என்று நினைத்தேன். மேற்சொன்ன உரையாடல் நடந்து சரியாக ஒரு ஆண்டு கழித்து, ஒரு நாள் மதியம் அலுவலக மீட்டிங்கில் இருந்த போது, சுரேஷ் ஃபோன் செய்தான். அவன் அப்போது வேலை விசயமாக துபாய் சென்றிருந்தான்.  மீட்டிங்கில் நான் பேசிக்கொண்டு இருந்ததால், அவன் இரண்டு முறை போன் செய்த போதும் எடுக்கவில்லை. மனதில் எதோ பிசிறு தட்ட, போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, சுரேஷுக்கு டயல் செய்தேன். நான்கைந்து ரிங் கழித்து சுரேஷ் போனை எடுத்தான். சர்வ நிச்சயமாக கெட்ட செய்தி எதோ சொல்லப் போகிறான் என்று தெரிந்தது. “ஹலோ” என்றான். “சொல்றா..போன் பண்ணிருந்த…மீட்…” என்று முடிப்பதற்குள். “செல்வம் செத்துட்டாண்டா” என்றான். எதுவும் பேச முடியாமல், தலையில் கைவைத்து, அலுவலகத்தின் கண்ணாடி சுவர் வழியாக ரோட்டை வெறித்துக் கொண்டிருந்தேன். மொட்டை வெயில் வெளேரென்று அடித்துக் கொண்டிருந்தது. செல்வம், எப்போதும் போல பொங்கலுக்கு ஊருக்கு வரக் கிளம்பியிருக்கிறான். அவன் இருக்கும் இடத்தில் இருந்து போர்ட் ப்ளேருக்கு ஜீப்பில் வந்து, பின்னர் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு வருவான். அன்றைக்கும் அதே போல அவனது ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான். இடையே ஒரு காட்டுப்பகுதியில் இருந்த செக் போஸ்டில் கையெழுத்திட்டவன், அங்கேயே சுருண்டு விழுந்து இறந்திருக்கிறான். மாரடைப்பு. அருகில் அவசர சிகிச்சைக்குக் கூட மருத்துவமனை கிடையாது. வேறு சில தொடர்புகளின் மூலம் அவனது அலுவலகத்தின் சென்னைக் கிளையில் இருந்த ஒரு உயர் அலுவலரை தொடர்பு கொண்டோம். நிறைய உதவி செய்தார்கள். போஸ்ட் மார்ட்டம் முடிந்து அவனது உடலை விமானம் மூலம் ஊருக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார்கள். “போர்ட் ப்ளேரில் இருந்து சென்னைக்கு ஃப்ளைட்ல அனுப்பி, அங்க இருந்து மதுரை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி, வீட்டுல கொண்டு போயி இறக்கிருவோம். ஆனா ஃபார்மாலிட்டீஸ் லேட் ஆகும். நீங்க நேரா final ritesக்கு வீட்டுக்கு போயிருங்க” என்றார் அங்கே இருந்த அதிகாரி. சுரேஷ் அன்றே துபாயில் இருந்து வந்து சேர்ந்தான். அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, மதுரை சென்றோம். பிரபாவும், விஜியும் மதுரையில் எங்களோடு சேர்ந்து கொண்டார்கள். செல்வம் இல்லை என்று நம்பவே முடியவில்லை. யாருக்கும் அழுகை கூட வரவில்லை. கயத்தாறு போகிற வழியில் நிறுத்தி நிதானமாக டீ எல்லாம் கூட குடித்தோம். வெகு சாதாரணமான பயணம் போல் இருந்தது. செல்வத்தின் உடல் வருவதற்கு சற்று முன்னரே அவனது ஊருக்குச் சென்று விட்டோம். கயத்தாறு தாண்டி, கிழக்கே செல்ல வேண்டும். மிகவும் பின்தங்கிய, சிறிய ஊர். இங்கிருந்து தொடங்கிய ஒருவன், தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்று, டெல்லி வரை சென்று நேர்காணலில் தேர்வாகி, மத்திய அரசில் ஒரு நல்ல பதவியை அடைந்தான் என்று நினைக்கவே சிலிர்த்தது. ஊர் முக்கில் இருந்த புளியமரத்தின் அருகே மொத்த ஊரும் காத்திருந்தது. போஸ்ட் மார்ட்டம் செய்த உடலை வீட்டுக்குள் எடுத்துச் செல்ல, சில ஊர்களின் கட்டுப்பாடுகள் அனுமதிப்பதில்லை. ஊருக்குள் இறக்கி வைத்து, அப்படியே இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். செல்வத்தின் அம்மாவும், அக்காமாரும் அழுது ஒய்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் ஒரு வெள்ளை நிற வேன் ஊருக்குள் வந்தது. அது ரிவர்ஸ் எடுத்து நிற்கவும், அழுகைச் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. செல்வத்தின் பெயர் எழுதிய, வெள்ளைத்துணி சுற்றப்பட்ட ஒரு சவப்பெட்டியை வேனுக்குள் இருந்து இறக்கினார்கள். காத்திருந்தோர் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்கள். வேனில் உடன் வந்த ஒருவர், பெட்டியைத் திறந்தார், செல்வம் தூங்குவது போல சலனமில்லாமல் படுத்திருந்தான். அழுகை ஓலமாக மாறியது. செல்வம் படுத்திருப்பதையும், சுற்றியிருப்போரின் ஓலத்தையும் தாங்க முடியாமல் விலகி நின்று விட்டேன். விஜியும், சுரேசும் அவனைப் பார்த்தபடியே நின்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில், பெட்டியை மூடி இடுகாடு நோக்கி கொண்டு செல்ல, கூடவே சென்றோம். அவனது அப்பா அடக்கம் செய்யப்படிருந்த இடத்துக்கு அருகே, கல்லறைக்கு இடம் தயார் செய்திருந்தார்கள். செல்வம் இருந்த பெட்டியை கயிற்றில் கட்டி இறக்கினோம். மண்ணை மூடி நிரப்பும் போது, அங்கிருந்து விலகி, இடுகாட்டின் அருகே இருந்த வேப்பமரத்தின் நிழலில் நின்றிருந்தேன். சுரேஷ் மரத்தில் கையை வைத்து, சாய்ந்தபடி நின்றிருந்தான். விஜி கைகளைக் கட்டியபடி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். எப்போதும் எங்களுடன் இருக்கும் வெயில் அன்றும் வெளேரென்று அடித்துக் கொண்டிருந்தது.  நான், சுரேஷ், விஜி, வேப்பரம், வெயில் என்று, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நான் செல்வத்தை முதன்முதலில் பார்த்த போது இருந்த அனைத்தும் அன்றும் இருந்தன, செல்வத்தைத் தவிர. என்னைவிட சுரேசுக்கு தான் செல்வம் நெருக்கம். சுரேஷ் அவனை சொந்த தம்பியாகத்தான் பாவித்தான். இன்னமுமே அவன் இல்லாமையை சுரேஷ் எப்படி தாங்கிக் கொள்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. செல்வம் இறந்த பிற்பாடு, மாயா பந்தரில் அவன் இருந்த வீட்டுக்கு சென்று பொருட்களை எடுத்து வருவோம் என்று சுரேஷ் அழைத்த போது நான் செல்ல மறுத்து விட்டேன். எனக்கு அவன் இருந்த வீட்டையோ, அந்த இடத்தையோ பார்க்கும் தெம்பு இல்லை. “நீயும் போகாத. கஷ்டமா இருக்கும். அவனே இல்லன்னு ஆயிருச்சு. பொருளைக் கொண்டு வந்து என்ன செய்யப் போற. பேசாம இரு” என்றேன். சில மாதங்கள் கழித்து, ஒரு மத்தியானத்தில் சுரேஷை பார்க்க வேளச்சேரி வீட்டுக்குச் சென்றேன். வாசலில் இருந்த ஒரு வேப்பமரத்தின் நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். புல்லட்டில் நான் உட்கார்ந்திருக்க, சுரேஷ், ஹேண்டில் பாரில் கையை வைத்து சாய்ந்து நின்றிருந்தான். “அந்த வண்டியைப் பாத்தியா” என்று கைகாட்டினான். எதிரே ஒரு கருப்பு நிற பொலீரோ ஜீப் நின்று கொண்டிருந்தது. சுரேஷ் அந்தமான் சென்று பொருட்களை மட்டுமல்லாது. செல்வத்தின் ஜீப்பையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கிறான். “டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தா, உன் வீட்டு வாசல்ல இதக் கொண்டு வந்து நிறுத்தணும்னு சொன்னான். ஊருக்கு அனுப்பப் போறேன். சாவி எடுத்துட்டு வரவா. பாக்குறியா ?” என்றான். எப்போதோ ஒரு உரையாடலில் எனக்கு பொலீரோ மிகவும் பிடிக்கும் என்று சிலாகித்துச் சொன்னதை அத்தனை நாட்கள் நினைவில் வைத்திருந்திருக்கிறான். “வேணாம்டா” என்று மறுத்து விட்டேன். தூசி படிந்து நின்ற அந்த கருப்பு நிற பொலீரோ இன்னும் வெகு காலத்திற்கு என் நினைவில் நிற்கும். பல நேரங்களில் செல்வம் இன்னும் எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாக மனதுக்கு தோன்றினாலும், அவன் இல்லை என்ற நிதர்சனத்தின் கனம் அவ்வப்போது உறுத்தும். பெருஞ்சோகங்களின் கனத்தை லேசாக்கும் ஆற்றல் எழுத்துக்கு உண்டு. வெகு நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து, இதோ எழுத்தின் மூலம் அந்தக் கனத்தை சற்று இறக்கி லேசாக்கிக் கொண்டேன். எழுத்தாகி விட்ட எங்கள் செல்வம் இனி தொடர்ந்து வாழ்வான். பிக்காலி.

தமிழ்
8
4
42
2.6K
Suriya Krishnamorthy
Suriya Krishnamorthy@SuriyaKML·
தமிழ்நாட்டு குழந்தைகள் அறிவற்றவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும் யாரையும் பொறுத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.
Sun News@sunnewstamil

#கேள்விக்களம் | “தமிழ்நாட்டு மாணவர்களை அசிங்கப்படுத்துறீங்க.. நாங்க பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கணுமா?” பாஜக பிரமுகருக்கு எதிராக கொந்தளித்த திமுகவின் சூர்யா கிருஷ்ணமூர்த்தி #SunNews | #SuriyaKrishnamoorthy | #BJP

தமிழ்
92
362
990
17.5K
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
தமிழ்நாட்டில் மும்மொழி விவகாரம்: தமிழ், ஆங்கிலம் படித்து முன்னேறியவர்கள் கூறுவது என்ன? - BBC News தமிழ்தமிழ்நாட்டில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் "இரு மொழிக் கொள்கையே" (bilingual policy) போதுமானது. மேலும் ஆங்கிலத்தை இன்னும் திறன்பட பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இதை விடுத்து மூன்றாவது மொழியை கற்றல் என்பது குழந்தைகளுக்கு கூடுதல் சுமை என்பதோடு, அது பெரிய அளவில் பலனும் அளிக்காது. இது குறித்து எனது கருத்தை பிபிசி தமிழ் நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டேன். பிபிசி தமிழ் நிறுவனம் இன்று பிரசுரம் செய்துள்ள "இருமொழிக் கொள்கையால் தடைகள் இருந்ததா? தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் கூறுவது என்ன?" என்ற கட்டுரையில் எனது கருத்தை வாசிக்கலாம். கட்டுரைக்கான லிங் bbc.com/tamil/articles…
Sudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet mediaSudhagar Pitchaimuthu tweet media
தமிழ்
1
42
83
3.9K
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன்
நாளை மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்க இருக்கும் இந்த விழாவிற்கு நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். 🙏 அவசியம் வாங்க. சந்திப்போம்.
SKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன் tweet mediaSKP KARUNA - தமிழ்நாட்டை தலைக்குனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
23
64
243
14.1K
Suriya Krishnamorthy
Suriya Krishnamorthy@SuriyaKML·
தி.மு.கழக செய்தித்தொடர்பு துணைச் செயலாளராக நியமித்த கழகத் தலைவர் அவர்களுக்கும், இளம் தலைவர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. *********** சுந்தரபெருமாள் கோயில் கிளைக் கழகத்தில் நிறுவன நாள் உறுப்பினர் தாத்தா. அதே கிளை கழகத்தின் வார்டு பிரதிநிதியாக பணியாற்றியவர் அப்பா. ஊராட்சிக்கு வெளியே சொல்லத்தக்க அரசியல் செல்வாக்கற்ற எளிய குடும்பத்தில் பிறந்தவன் நான். சாதி, பொருளாதாரம், செல்வாக்கான அரசியல் பின்புலம் என ஏதுமற்றவனுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தின் செய்தித்தொடர்பு மாநிலத் துணைச் செயலாளராக பணியாற்றும் மகத்தான வாய்ப்பை வழங்கியுள்ளார் கழகத்தின் தலைவர் - தமிழ்நாட்டின் ஈடு இணையற்ற மக்கள் தலைவர் @mkstalin. இயக்க மேடைகளில் பேசிக் கொண்டிருந்தவனை, கழக மேடை ஏற்றி பேச வைத்தது தொடங்கி கழக செய்தித் தொடர்பு மாநில துணைச் செயலாளர் என்கிற பெரும் பொறுப்பு வரையில், ஒவ்வொரு தருணத்திலும் தோளில் தட்டி அங்கீகரித்து, வழிநடத்தி வருகிறார் கழக இளம் தலைவர் @Udhaystalin. அவரால் கிடைத்தது இவையெல்லாம். நல்லவை, தீயவை எல்லாவற்றிலும் ஓர் ஆசிரியராக இருந்து அழைத்துச் செல்கிறார் கழக மருத்துவ அணிச் செயலாளர் மரு @Dr_Ezhilan. கொள்கைக்காக, கழகத்திற்காக, இயக்க இலட்சியங்களுக்காக பேசுகிறவன் என்கிற ஒரே நம்பிக்கையில், கழகம் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. கழகத் தலைவர், கழக இளம் தலைவர் ஆகியோரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என்கிற பொறுப்புணர்வு மட்டும் தான் மனதெல்லாம் நிறைந்துள்ளது. எளிய தொண்டனுக்கு, தலைமைக் கழக நிர்வாகிகள் வரிசையில் - செய்தித்தொடர்பு மாநில துணைச் செயலாளர் என்கிற வாய்ப்பை வழங்கிய தலைவர் அவர்களுக்கும், இளம் தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Suriya Krishnamorthy tweet media
தமிழ்
283
250
1.3K
33.7K
Sudhagar Pitchaimuthu
Sudhagar Pitchaimuthu@vedichi·
ஜப்பானில் வசித்தாலும், தொடர்ந்து தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகை, அரசுப் பள்ளிகளுக்கு உட்கட்டமைபினை மேம்படுத்த நன்கொடை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கல்வி அறப்பணிகளில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, வட சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் உதவி வருவது தனிப்பட்ட வகையில் பாராட்டுகுரியது. மேலும் தோக்கியோ நகரில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பணியில் தங்களின் முன்னெடுப்பிற்கு பாராட்டுகள் அண்ணா. ஜப்பானிய மண்ணில் தமிழ் இலக்கியம் சார்ந்து தாங்கள் தொடர்ச்சியாக எடுத்து வரும் முன்னெடுப்புகள், நம் இலக்கியத்தை ஜப்பானியர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படி, தாங்கள் செய்த உதவிகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். திராவிட வரலாறு குறித்து தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வரும் உங்களை "திராவிடத்தால் நான்" வரிசையில் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் அறப்பணி தொடரட்டும்.
S.R.RAJA - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@srrajamla

சிறுவயதிலேயே கலைஞரின் பேச்சால் திராவிட அரசியலின் அவசியத்தை புரிந்து கொண்ட செந்தில்குமார், ஜப்பானில் தமிழ் மாணவர்களுக்கான உதவி, மக்கள் நலப் பணிகள் என ஆர்வமாக ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel

தமிழ்
0
13
32
1.9K