Manikandan

23 posts

Manikandan

Manikandan

@ManikandanADH

Chennai, Tamilnadu, India Katılım Eylül 2017
259 Takip Edilen14 Takipçiler
Manikandan retweetledi
செந்தமிழன் சீமான்
தோட்டக்கலைத்துறையைச் சீரழிக்கும் வகையில், அதனை மற்ற துறைகளுடன் இணைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கீழ் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில் வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 4 துறைகளையும் ஒருங்கிணைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. பழங்கள், காய்கறிகள், பூக்கள், காளான்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் தோட்டக்கலைத்துறையை, மற்ற துறைகளுடன் ஒன்றாக இணைப்பது அதன் தனித்துவத்தை இணைக்கச் செய்யும் கொடுஞ்செயலாகும். அரசு வேளாண் துறையின் கீழ் ஒரு வேளாண் அலுவலர் சராசரியாக 6 கிராமங்களைக் கவனித்துவரும் நிலையில், வேளாண் துறையின் உட்பிரிவு துறைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஒரு அலுவலருக்கு 3 கிராமங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால், விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை எளிதில் அணுக முடியும் என்று அரசு கூறுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளில் தனித்தனி நிபுணத்துவம் பெற்றவர்கள். கடந்த 17 ஆண்டுகளாகத் தங்கள் துறைகளில் அனுபவம் பெற்ற அதிகாரிகளிடம், அவர்களுக்குத் தொடர்பில்லாத மற்றொரு துறையின் தொழில்நுட்ப ஆலோசனைகளைக் கேட்கச் சொல்வது, விவசாயிகளைத் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்லும் ஆபத்துடையதாகும். தமிழ்நாடு அரசால் கடந்த 2008ஆம் ஆண்டு வேளாண் துறையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட தோட்டக்கலைத் துறை, கடந்த 17 ஆண்டுகளாக வேளாண் உற்பத்தியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் வெறும் 14 விழுக்காடு சாகுபடி பரப்பில் மட்டுமே தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டாலும், மொத்த வேளாண் உற்பத்தியில் 32.5 விழுக்காடும், விளைபொருள் ஏற்றுமதியில் 65 விழுக்காடும் பங்களிக்கிறது. இச்சூழலில், தனித்துவமிக்கத் துறைகளை மீண்டும் ஒருங்கிணைப்பது என்பது மறைமுகமாக தோட்டக்கலைத் துறையின் சீரான வளர்ச்சியை முடக்கும் செயலாகும். ஏற்கனவே, தமிழ்நாட்டின் வேளாண்துறை திமுக அரசின் நிர்வாகத் திறமையற்ற செயல்பாடுகளால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்கும் முன் கடந்த 2020-21ஆம் ஆண்டில் 4.5 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியானது நடப்பாண்டில் - 0.09 விழுக்காடு என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த 2021-22 நிதியாண்டில் 10 விழுக்காடாக இருந்த தானிய உற்பத்தி தற்போது 2 விழுக்காடாகக் குறைந்துள்ளது. 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வேளாண்மை பெருமளவு சீரழிந்துள்ள நிலையில், முற்று முழுதாக வீழ்ந்துவிடாமல் காக்கும் துறையாகத் தோட்டக்கலைத் துறையே உள்ளது. அதனையும் அழிக்கும் திமுக அரசின் முயற்சியே தோட்டக்கலைத் துறையை மற்ற துறைகளுடன் ஒன்றிணைக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ஆகும். இந்தத் திட்டத்தால் தோட்டக்கலைத்துறையின் தனித்துவம், நிபுணத்துவம் முற்றாகப் பாதிக்கப்படும். திமுக அரசிற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் மீதும், வேளாண் துறை வளர்ச்சியின் மீதும் அக்கறை இருக்குமாயின், வேளாண் துறைகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, வேளாண் துறையில் ஏற்கனவே காலியாக உள்ள வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதே விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பதாக அமையும். ஆகவே, தமிழ்நாடு அரசு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்ற பெயரில், வேளாண் துறைகளை ஒன்றிணைப்பதைக் கைவிட்டு, தோட்டக்கலை மற்றும் வேளாண் துறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
13
391
666
6.7K
Manikandan
Manikandan@ManikandanADH·
🏛️ tnmanifesto.ai - என் பரிந்துரைகள் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக என் கருத்துகளைப் பகிர்ந்தேன்: தோட்டக்கலைத் துறை தனி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். தோட்டக்கலை பல்கலைக்கழகம் புதியதாக உ... #TNManifesto #TamilNadu tnmanifesto.ai
தமிழ்
0
0
0
13
Manikandan retweetledi
TANHOWA
TANHOWA@TANHOWA_1979·
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UATT 2.0) ரத்து செய்யக்கோரி இரண்டாவது நாளாக தொடரும் தொடர் காத்திருப்பு போராட்டம். நேரலை youtube.com/live/nfE8GDj6F…
YouTube video
YouTube
தமிழ்
0
13
18
151
Manikandan retweetledi
Vanathi Srinivasan
Vanathi Srinivasan@VanathiBJP·
உழவர் 2.0 திட்டத்தினை கைவிடுக..! ஒருபுறம் மத்திய அரசு இயற்கை வேளாண்மை, விவசாயிகளின் நலன் காக்க திட்டங்கள், விவசாய ஆராய்ச்சிகள், கொள்முதல் விலை உயர்வு என்று செயல்படுத்தி வரும் வேளையில் தமிழகத்திலோ விவசாயத்துறையை நவீன மயமாக்குகிறேன் என்று உருப்படியில்லாத உழவர் 2.0 திட்டத்தினை செயல்படுத்தும் நோக்கில் வோளாண், தோட்டக்கலை அலுவலர்களையும், விவசாயிகளையும் குழப்பி வருகிறது தமிழக அரசு. வேளாண் துறையையும், தோட்டக்கலைத்துறையையும் இணைக்கும் வகையில் உழவர் 2.0 திட்டத்தின்படி கூடுதல் பணிகளை உருவாக்கி களப்பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமையையும், கட்டாய இடமாறுதலையும் அளித்து அவர்களின் வாழ்வாதரத்தினை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறது இந்த விடியா திமுக அரசு..! மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் UATT 2.0 தற்போதைய வடிவில் இலட்சக்கணக்கான சிறு/குறு விவசாயிகளுக்கும், துறைகளின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தோட்டக்கலைதுறை அலுவலர்களின் கோரிக்கைகளான அவசர பணிப்பெயர்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும். UATT 2.0 திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். தோட்டக்கலைத் துறையை தனித்துறையாக பாதுகாத்து சிறு/குறு விவசாயிகளின் நலன் காக்க வேண்டும். இலட்சக்கணக்கான சிறு/குறு விவசாயிகளுக்கு சரியான நிபுணத்துவ சேவை தொடர்ந்து கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் போன்றவற்றை நிறைவேற்றி உழவர்கள் நலனையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நலனையும் காத்திட விடியா @arivalayam அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
2
30
70
1.5K
Manikandan retweetledi
TANHOWA
TANHOWA@TANHOWA_1979·
ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இருந்தும் தோட்டக்கலை ஊழியர்களின் கோரிக்கைகள் செவிசாய்கப்படாத காரணத்தினால் இரவு பகலாக தொடரும் தோட்டக்கலை துறை அலுவலர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்! #StopUATT2_0 #SaveTnHorticulture @Office_of_Udhay @mkstalin @Udhaystalin @CMOTamilnadu
TANHOWA tweet media
தமிழ்
2
37
34
744
Manikandan retweetledi
K.Annamalai
K.Annamalai@annamalai_k·
திமுக அரசு வெளியிட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 (UATT 2.0) தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288, “கள அலுவலர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில், தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இன்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்டக்கலை சாகுபடி பரப்பு 13.5% மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.5% மற்றும் தமிழக வேளாண் ஏற்றுமதியில் 58–60% பங்கு. இத்தகைய உயர் மதிப்புத் துறைக்கு தனி நிர்வாகமும் துறைசார் நிபுணத்துவமும் அவசியம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறைத் திட்டங்களை ஒப்படைப்பது, நிர்வாக குழப்பத்தையும் செயல்திறன் குறைவையும் உருவாக்கும். தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில், தொழில்நுட்ப அலுவலர்கள் பலருக்கு முன் அறிவிப்பு இன்றி, தொலைதூர மாவட்டங்களுக்கு அவசர பணியிட மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடுமையான பொருளாதார சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களது குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1000 தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்தத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் முதலீடு ஆகியவை நீண்டகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, UATT 2.0 – அரசாணைகள் எண் 252 & 288 உடனடியாக முழுமையாக ரத்து செய்வதோடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்
46
613
1.7K
24.6K
Manikandan retweetledi
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழக அரசின் உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்: ஆபத்தான திட்டத்தைக் கைவிட வேண்டும்! தமிழ்நாட்டில்  உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில் வெவ்வேறு  பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து,  அனைத்துப் பணிகளையும் செய்யும்படி திமுக அரசு கட்டாயப்படுத்துகிறது.  அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை திமுக அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நல   அமைச்சகத்தின் கீழ் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் துறைகளின் பணிகளும், நோக்கங்களும் வெவ்வேறானவை. அதை கருத்தில்  கொண்டு தான் 1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஒன்றாக இருந்த இந்தத் துறைகள் காலப்போக்கில் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. ஆனால், இப்போது  உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் இந்தத் துறைகளில் பணியாற்றும் கள அதிகாரிகள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, அனைத்துத் துறை பணிகளையும் செய்ய வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  எடுத்துக்காட்டாக நெல் பயிர்கள் தொடர்பான ஆலோசனைகளை மட்டும் உழவர்களுக்கு வழங்கி வந்த உதவி வேளாண்  அதிகாரிகள், இனி காய்கறிகள், ப்ழங்கள் தொடர்பான தோட்டக்கலை பயிர்களுக்கும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அனைத்துத் துறை அதிகாரிகளும் இனி நெல், கரும்பு, வாழை, காய்கறி பயிர், பசுமை குடில்களை கண்காணிப்பதோடு, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் செயல்படுத்தும் திட்டங்களையும் கண்காணிக்க வேண்டியிருக்கும். இது சாத்தியமற்றது. அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அவர்களை அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாகும். வே்ளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்ட்க்கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது. அதேபோல், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு நெற்பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. இந்தத் திட்டத்தைச்  செயல்படுத்துவதன் மூலம் கள அதிகாரிகளுக்கு பணிச்சுமை குறையும்; இதுவரை 10 முதல் 12 கிராமங்களை கவனித்து வந்த அதிகாரிகள் இனி 3 முதல் 4 கிராமங்களை கவனித்தால் போதுமானது என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் திட்டத்தின் மூலம் உழவர்களுக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படலாம். இது வேளாண் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். 55 மாத திமுக ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் முதன்மையானது வேளாண் துறை. கடந்த இரு ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும், மேலும் அத்துறையை சீரழித்து விடக் கூடாது. எனவே,  உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்
5
71
126
3.1K
Manikandan retweetledi
TANHOWA
TANHOWA@TANHOWA_1979·
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 அரசாணைகளை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி பெருந்திரள் முறையீடு #SaveTnHorticulture #StopUATT2_0
TANHOWA tweet mediaTANHOWA tweet mediaTANHOWA tweet media
தமிழ்
3
11
19
218