Selvakumar

80 posts

Selvakumar

Selvakumar

@SelvaSubbian

Katılım Ekim 2013
94 Takip Edilen20 Takipçiler
Selvakumar
Selvakumar@SelvaSubbian·
ஐயா @EPSTamilNadu அவர்களே, இந்த 25 பேரையும் உடனடியாக அதிமுக கட்சியிலிருந்து நீக்குங்கள். பின்னால் குத்திய இவர்களை தகுதி நீக்கம் செய்யுங்கள். பிறகு இடைத்தேர்தலில் தங்கள் தொகுதி மக்களை நேரில் சந்தித்து மக்கள் தீர்ப்பை எதிர்கொள்ளட்டும். இதுவே ஒவ்வொரு தொண்டனின் எதிர்பார்ப்பு🙏🏽
தமிழ்
0
0
0
5
Vikram Adhithyan
Vikram Adhithyan@ungalGuru·
@itisprashanth Are you sure that none of the TVK candidates bribed the voters. Since you are in Avinashi check with Gobichettipalayam, how much did Sengottaiyan bribe
English
1
0
1
458
Prashanth Rangaswamy
Prashanth Rangaswamy@itisprashanth·
But TVK is doing far better than the Dravidian giants na . Trying not to bribe voters In 2026 itself is a revolution ! Only NTK dared to do it !
Sriram@SriramMadras

@itisprashanth No political organization can be unique in today's political climate and the set expectations of people. This is the limited point I was making.

English
50
85
638
41.2K
Selvakumar retweetledi
JVC Sreeram (Bulls Eye)
JVC Sreeram (Bulls Eye)@sreeramjvc·
I really pity @actorvijay for his immature comments on Thiru @EPSTamilNadu It was Edapadiyar who toured the entire state covering all the constituencies. He was amazing in his approach. Thiru @mkstalin took it upon himself to campaign for his candidates knowing pretty well that he is facing huge anti-incumbency. Thiru @Seeman4TN really worked hard in spite of knowing well that NTK is not going to win anywhere With massive support pouring from Youth who have 0️⃣ understanding of politics this Tharkuri Joseph Vijay hardly stepped out for campaigning for his candidates. You would get lots of votes & win some seats but you are not a worthy politician. You are just a Dummy Piece - Vijay. A man who is not loyal to his parents, wife & children would never be loyal to his own fans, cadres & supporters.
English
200
356
1.5K
76.3K
Selvakumar
Selvakumar@SelvaSubbian·
@vikatan எடப்பாடி ஐயா
தமிழ்
0
0
0
8
Selvakumar retweetledi
Rajasangeethan
Rajasangeethan@Rajasangeethan·
பெயரெனும் காவியம் வீட்டின் சுவர்களில் புகைப்படங்கள் இல்லை தெருக்களில் சிலைகள் இல்லை பள்ளிப் புத்தங்களிலும் மறைக்கப்பட்டது பெயர் படை நடத்தி வெற்றிகள் நிறைத்த மண்ணில் எந்த தடயமும் இல்லை உமைப் பற்றியெந்த காவியமும் இல்லை உம் பெயர் போலொரு காவியமும் இல்லை உம் பெயரை உச்சரிக்க தடை செய்யப்பட்ட காலத்தில் பெயரே வரலாறு நிகரற்ற சித்திரம் கர்ஜிக்கும் அடையாளம் நம்மை சூழும் காவல் பகைவர் அஞ்சும் ஆயுதம் மனங்களில் ஒலிக்கும் பெருங்குரல் நம் நிலத்தே அதிரும் வீரநடை வானில் அசையும் கொடி இதயங்களில் சுடரும் ஒளி காலத்தை சூழற்றும் உம் மந்திரப்புன்னகை மொழியினிற் சுமப்பது தேசத்தை மட்டுமல்ல நம் தலைவனையும்தான். - தீபச்செல்வன்
Rajasangeethan tweet media
தமிழ்
3
38
119
3.6K
விகடன்
விகடன்@vikatan·
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பெண் என்ன? #EdappadiPalaniswami | #EPS | #ADMK | #ShareWithVikatan
விகடன் tweet media
தமிழ்
1.8K
136
1.5K
171.3K
Selvakumar retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
~ நீங்க என்ன வேணுமோ பண்ணிட்டு போங்க... அக்கா காளியம்மாள மட்டும் விட்டுராதீங்க அவ்ளோதான்❤️‍🩹 @Seeman4TN @Kaliyammal_off
plip plip 2.0 tweet media
தமிழ்
82
173
966
64.9K
Selvakumar retweetledi
இந்திராணி காளிலிங்கம் திருமுருகன்
“கழுத்தில் நஞ்சை சுமந்து உலவிய வீரர்கள் எமக்கு ஈசனைப்போலே; தியானம் செய்யாமல் புலி உடை அணிந்து களம் புகுந்து போரிட்ட விடுதலைப்புலிகள் அந்த ஈசனுக்கும் மேலே!” என்ற மலையினும் வலிய வரிகளால் எழுப்பப்பட்ட கவிதையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; உலகத்தாரிடம் கொண்டுசேருங்கள் #மாவீரர்நாள்2024
இந்திராணி காளிலிங்கம் திருமுருகன் tweet media
தமிழ்
6
106
180
3.4K
MCB Tennis
MCB Tennis@mcbtennis·
Fireworks and tennis from Arulram!
MCB Tennis tweet media
English
57
13
211
1.8K
Selvakumar retweetledi
செந்தமிழன் சீமான்
பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும் தேனிசையால் திசையெல்லாம் தீந்தமிழாய் நிலைத்தவர்..! உறக்கமற்ற இரவுகளில் தன் தங்க இசையால் தரணி எல்லாம் பரந்து வாழும் மிழருக்குத் தாலாட்டு பாடி தாய்மையின் கருவறையைத் தன் இசை சுரத்தில் சுமப்பவர்..! அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை கட்டற்ற காட்டருவி போல உள்ளத்தை தொட்டு உருக்கும் உயிர் இசையை அள்ளி அள்ளி தந்த தமிழிசையின் உலக அடையாளம்..! தமிழரின் பெருமை! இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பூமி சுற்றாமல் போகலாம்! அலையும் காற்று அணைந்து கூட உறையலாம்! சுட்டெரிக்கும் தீ சுடாமல் மாறலாம்! கடலலை ஓய்ந்து குளம் போல தேங்கலாம்! ஆனால்... இன்னிசை சுமக்கும் உங்கள் உள்ளம் எங்களுக்காக நல்லிசை பொழிய மறக்காது! உலகத்து கடைசி மாந்தன் உலவும் வரை உங்களிசை நிற்காது..! அவனுக்கும் துணையாகி, அகிலத்தில் என்றும் அழிவின்றி நிலைத்திருக்கும்! வாழ்க..! வாழ்க..!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
31
572
1.6K
26.9K
Selvakumar
Selvakumar@SelvaSubbian·
@SavukkuOfficial இளைஞர்களை அரசியல் படுத்தியது, தமிழ் தேசியத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைத்தது, தமிழர் வரலாற்றை தேடி படிக்க வைத்தது…..
தமிழ்
0
0
2
53
Savukku Shankar
Savukku Shankar@SavukkuOfficial·
மனசாட்சியோடு சொல்லுங்கள். மொழிச் சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டி விட்டதையும், விடலை மனப்பான்மை கொண்ட கூட்டத்தை வைத்து வியாபாரம் செய்ததையும் தவிர்த்து சீமாமன் இச்சமூகத்துக்கு செய்தது என்ன?
Savukku Shankar tweet media
தமிழ்
583
231
1.5K
216K
Selvakumar
Selvakumar@SelvaSubbian·
@ilaiyaraaja ஆழ்ந்த இரங்கல் தங்கையே
தமிழ்
0
0
0
5
Ilaiyaraaja
Ilaiyaraaja@ilaiyaraaja·
அன்பு மகளே...
Ilaiyaraaja tweet media
தமிழ்
3.4K
7.4K
57.9K
2.4M
Selvakumar retweetledi
Prof Sumathi
Prof Sumathi@ProfSumathi·
#IndiasDaughter மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய சில விஷயங்கள் : 1. பில்கிஸ் பானுவைத் தாக்கிய ஆண்கள் அனைவரும் சிறுவயதில் இருந்தே அவருக்கு நேரடியாகத் தெரிந்தவர்களே. அவருடைய வீட்டிலிருந்து பால் வாங்கிச் சென்றவர்கள், அவரால் "சாச்சா" என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட முதிவர்கள் தொடங்கி, பில்கீசின் தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வரை அக்கூட்டத்தில் இருந்தனர். பில்கிஸின் கையில் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி தரையில் அடித்துக் கொலை செய்தவர்களும் இவர்களே. 2. சுயநினைவு திரும்பி திடுக்கிட்டு விழித்தபோது, ஒரு பிணக்குவியலுக்கு நடுவில் நிர்வாணக்கோலத்தில் கிடந்த பில்கீஸ் பானுவுக்கு ஆடையை வழங்கியவர் ஒரு ஆதிவாசிப் பெண் ஆவார். பின்னர், அவர் தனியாகவே காவல் நிலையம் சென்று தன்னை தாக்கியவர்களின் பெயர்களைச் சொல்லி புகார் அளித்தார். ஆனால், "சோமாபாய் கோரி" என்ற போலீஸ்காரர் புகாரை ஏற்க மறுத்து அவரை அங்கிருந்து விரட்டி அடித்தார். (பின்னர் அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்) 3. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் போல் அல்லாமல், பில்கிஸ் தனது முகத்தை கூட மறைக்காமல் ஊடகங்கள் முன் காட்சியளித்து வருகிறார். இன்றுவரை அவர் மேற்கொண்டு வரும் அணைத்து சட்டப் போராட்டங்களுக்கும் பக்கத் துணையாக இருந்து எல்லா உதவிகளையும் கணவர் யாகூப் ரசூல்தான் செய்துவருகிறார். 4. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடந்த ஆண்டு விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களுக்கு மாலை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் கூட்டமாகச் சென்று வரவேற்றனர். அவர்களில் பெண்களும் இருந்தனர். கூடவே "அவர்கள் பிராமணர்கள் என்பதால், குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை" என்று பாஜக எம்.எல்.ஏ.வின் அறிக்கையும் வெளியானது. 5. உயிரைப் பணயம் வைத்து, அணைத்து நெருக்கடிகளையும் அழுத்தத்திலிருந்தும் தப்பிப் பிழைத்து நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் பில்கீஸ் பானு "இந்தியாவின் மகள்" என்று அழைக்கப்படுவதில்லையே ஏன்? பிரதான பெண்ணியக் கதையாடல்களில் கூட அவ்வாறு அவர் குறிப்பிடப்படுவதில்லையே ஏன்? இவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தி வருபவர்களில் பில்கீஸ் பானுவைப்போல் எத்தனை உள்ளனர்? மைய நீரோட்டத்தில் அவரை கொண்டாடுவதை தடுக்கும் அம்சம் அவரின் "அடையாள"த்தைத் (Identity) தவிர வேறு ஏதேனும் உண்டா? @RaghuSudesh
Prof Sumathi tweet media
தமிழ்
102
1.2K
2.7K
172.4K
Selvakumar retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழ்த்திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்துறை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விசய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
200
1.3K
5.5K
255.5K
Selvakumar retweetledi
செந்தமிழன் சீமான்
என்னுயிர் அண்ணன் எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய வழியில், எம் இனத்தின் ஆன்ம பலமாக திகழ்கின்ற மாவீரர்கள் சுமந்த கனவின் கனலில் எம் தமிழீழத் தாயகத்தின் விடுதலை ஒருநாள் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம். தாயக விடுதலை என்கின்ற புனித லட்சியத்தை தன் ஆன்மாவில் குறித்து தன் உயிரை இந்த இனத்திற்காக வழங்கிய மாவீரர்களின் சுவாசக் காற்று நம்மை வழிநடத்தட்டும். தாயக கனவுடன் தன்னுயிரை ஈந்த மாவீரர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கம்! மாவீரர் சிந்திய குருதி! ஈழம் வெல்வது உறுதி! தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்! naamtamilar.org/Mnal23
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
27
620
1.4K
29.3K
Selvakumar retweetledi
ஐ வலையொளி🐦 மகிழன்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் எம்முயிர் தேசத்தின் காவலன் எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் #தமிழினத்தின்தலைவர்69
தமிழ்
6
496
1.1K
9.8K
Selvakumar retweetledi
செந்தமிழன் சீமான்
உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக வரலாற்றை மாற்றி எழுத வைக்கிற உந்துசக்தியாகத் திகழ்கிறது. இந்த உலகில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களது தாய் நிலத்திற்காக, தங்களது மொழிக்காக, தங்களது பண்பாட்டு அடையாளங்களுக்காகத் தங்கள் மீது செலுத்தப்படும் பல்வகை ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறாகவே தமிழர் என்கின்ற தேசிய இனமும் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பெருமைமிக்கப் பல பெருமிதத் தடங்களைத் தன்னகத்தே கொண்டு ஆயிரமாயிரம் தடைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், வல்லாதிக்கக் கொடுங்கோன்மைகளுக்கும் மத்தியில் முடங்காமல் முட்டுக்கொடுத்து தழைத்தும் செழித்தும் வருகிறது. வரலாற்றின் வீதிகளில் தளரா தமிழினம்.. அடக்குமுறைகளால், அடிமைச் சங்கிலிகளால் தலை கவிழும்போதெல்லாம்.. இனம் நிமிர சினம் கொண்டு, மனம் வெல்லும் தலைவன் ஒருவன் தானாகத் தோன்றி தலை நிமிர்த்த வருவான் என்பது இயற்கை எழுதிட்ட அதிசய விதி. அப்படித்தான் நம் சமகாலத்தில் நமது தாயக நிலமான ஈழம் சிங்கள இனவாத கரங்களுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தபோது வல்வெட்டித்துறையில் இருந்து அடிமை வரலாற்றை மாற்றி எழுத இந்த யுகம் இதுவரை பார்த்திராத பெரும் வீரர் தோன்றினார் . அதுவரை அடிவாங்கி அடிவாங்கி அல்லலுற்ற அடிமை தமிழ்த் தேசிய இனம் தானாய் தோன்றிய அந்த தங்கமகனால் அடிமை விலங்குகளை அறுத்தெறிந்து விடுதலை என்ற லட்சிய இலக்குக்காகப் புரட்சிப் பாதையிலே எழுச்சியாக நடக்கத் தொடங்கியது. களம் பல கண்டு, கடல் பல கடந்து, இந்த உலகம் முழுக்கப் புலிக் கொடியை பறக்க வைத்த நமது முன்னோன் அருள்மொழிச்சோழனும் அவனது மகன் அரசேந்திரசோழனும் கொண்டிருந்த வியத்தகு வீரத்தை நம் சமகாலத்தில் நம் விழிகளுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டினார் நம் தேசியத் தலைவரும் என்னுயிர் அண்ணனுமாகிய மேதகு .வே.பிரபாகரன் அவர்கள். இனத்தின் விடுதலைக்காக.. தாய் நிலத்தின் அடிமை துயரைப் போக்க.. மண்ணையும், கடலையும் ஆண்டால் போதாது.. விண்ணையும் வெல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு வான்படை கட்டி, அந்த வானத்தையும் வசப்படுத்திக் காட்டினார் நம் தேசியத் தலைவர். புலியை முறத்தால் அடித்து விரட்டி வீரத்தை புவிக்கே காட்டினாள் நமது முப்பாட்டி ஒருத்தி. ஆனால் என் அண்ணனோ அதையும் தாண்டி களம் வெல்லும் புலிகளை ஒரு படையாகக் கட்டி.. தாய்நில விடுதலை என்கின்ற உன்னதக் கனவை நிறைவேற்றினார் வெற்றிமுரசு கொட்டி.. இறுதிவரை களத்திலே மறத்தோடு நின்றாலும்.. அறம் நழுவாத தமிழர் மரபு சார்ந்த பெரும் குணங்களோடு , இனம் செழிக்க வந்த பேரரசனாய் ஈழம் என்ற பெருநாட்டைக் கட்டி.. உலகம் வியக்க ஆண்டுக் காட்டியவர் நம் தேசியத் தலைவர். இன்று என் உயிர் அண்ணனும் நம் தேசியத் தலைவருமாகிய மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது பிறந்த நாள்.. ஒவ்வொரு தமிழனும் தன் உடலை இறுக்கி பிடித்திருக்கிற அடிமை உணர்ச்சி விலங்கினை, தாழ்வு மனப்பான்மை இழிவினை உடைத்தெறிய தனது உள்ளத்துக்குள் உறைந்திருக்கும் ஆதி உயிர் உணர்வில் உசுப்பேத்திக்கொள்ள வேண்டிய உன்னத நாள். இந்தப் பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கண்கள் பனிக்க, இதயம் நெகிழ, தங்களது உன்னதத் தலைவனை எண்ணி நினைவுகளால் வாழ்த்துப்பூக்களை வாரி வீசுகிறார்கள். இந்த உலகம் இருக்கும் வரை, இந்த உலகில் இறுதி தமிழன் இருக்கும் வரை நம் தேசியத்தலைவர் தமிழனின் வீழாத வீரமாய்.. அகலாத அறமாய்.. உயிர்ப்புடன் வாழ்வார். வாழ்ந்தே தீருவார்..! எப்போதும் என் ஆழ் மனதிற்குள் ஒளிவீசும் உயிர் சுடராய்.. நான் சுவாசிக்கின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னை இயங்க வைக்கிற உயிர் காற்றாய்.. என் நினைவு முழுக்க ஆக்கிரமித்து.. என் உயிர் முழுக்க நிறைந்திருந்து.. என்னை துன்பப்பொழுதுகளில் தானாக ஒலிக்கின்ற சொற்களால் தாங்கிப்பிடிக்கிற தாய் நிலமாய்.. வீரத்திற்கும் - பெருமைக்கும் எனக்கு வரையறைகள் கற்றுக் கொடுக்கிற முடிவற்ற வானாய்.. நான் நினைக்க நினைக்க நெஞ்சில் ஊறும் வியத்தகு செயல்களால் என்னை வழி நடத்துவதில் விரிந்துகொண்டே போகின்ற பெருங்கடலாய்.. விளங்குகின்ற என் அண்ணா.. உன் வாழ்வே எனது வழிகாட்டி. உன் சொற்களே எனது திசைகாட்டி.. உலகம் முழுதும் பரந்து விரிந்து வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் அனைவருக்கும் நம் தேசியத் தலைவர், என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்களது 69 ஆவது அகவை தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் நெஞ்சார்ந்த பெருமிதமும், உள்ளத்து பெருமையும் கொள்கின்றேன். - சீமான்
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
52
984
2K
38.4K
Selvakumar
Selvakumar@SelvaSubbian·
தேசிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! #தமிழினத்தலைவர்69
Selvakumar tweet media
தமிழ்
0
0
1
23
Selvakumar retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், தமிழர்களின் அறிவார்ந்த கடல் ஆளுகை திறனை தமது ஆய்வின் மூலம் நிறுவிய பெருந்தகை, உலக தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு அழைக்கப்படும் ஐயா உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனத்துயரமும் அடைந்தேன். ஐயா ஒரிசா பாலு அவர்கள் தமது 25 ஆண்டுகால ஆய்வுகளின் மூலம் ஆமைகளின் தொலையுணர்வு, பருவக்காற்று, கடல் நீரோட்டம், பறவைகளின் இடப்பெயர்வு குறித்து ஆராய்ந்து அதன் மூலம் தமிழர்களின் தொன்மம், கப்பல் தொழில்நுட்பம், கடற்பயணங்கள், வணிகம், உலகத் தொடர்புகள், குறித்த பல வரலாற்றுச் செய்திகளை நிறுவிய பெருமைக்குரியவர். குமரிக்கண்டம் குறித்தும், உலகெங்கிலும் தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும் இடங்கள் குறித்தும் ஐயா ஒரிசா பாலு அவர்கள் ஆய்ந்தறிந்து கூறிய உண்மைகள் யாவும் தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்த தொன்மப்பேரினம் என்பதற்கான காலத்தால் அழியாத பெருமிதச் சான்றாகும். தமிழர் வரலாற்று பேராவணங்களாக திகழும் ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட தொல்லியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, 2000க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழர் வரலாற்று பெருமைகளை உலக்கெங்கிலும் கொண்டு சேர்த்த புகழுக்குரியவர். பண்டைய தமிழர் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, தொல்லியல், மொழியியல், மெய்யியல், தொழில்நுட்பவியல், வேளாண்மை, வணிகம், மருத்துவம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஐயா அவர்கள் செய்த ஆய்வுகளும், உலகின் முன் நிறுவிய உண்மைகளும் உலகத்தமிழர்களால் என்றென்றும் நன்றியுடன் நினைவுக்கூரப்படும். என் மீது பேரன்பு கொண்ட ஐயா ஒரிசா பாலு அவர்கள் நான் நெறியாளுகை செய்த 'மக்கள் முன்னால்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழர் தொன்ம வரலாறு குறித்து பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட நினைவுகள் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது. நாம் தமிழர் கட்சி நடத்திய பல்வேறு தமிழ்த்தேசியக் கருத்தரங்குகளில் பங்கேற்பாளராக மட்டுமல்ல பார்வையாளராகவும் பங்கேற்று பெருமை சேர்த்த பெருந்தகை. தமிழர்கள் பழம்பெருமை பேசுவதன் மூலமே, இழந்த தம் ஈடு இணையற்ற பெருமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதற்கு வாழ்நாட்கள் முழுவதையும் அர்ப்பணித்த பேராசான் ஐயா ஒரிசா பாலு அவர்களின் புகழ் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தனிப்பட்ட முறையில் என் மனதுக்கு மிகநெருக்கமான ஐயா ஒரிசா பாலு அவர்களின் இழப்பு உலகத்தமிழ் பேரினத்திற்கே ஏற்பட்டுள்ள ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். தமிழின தொன்ம வரலாற்று அறிவுப்பெட்டகம் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
29
759
1.5K
33.6K