Sundara Moorthy retweetledi

திருப்பரங்குன்றம் மலை: உண்மையும் பொய்யும்
திருப்பரங்குன்றம் மலையில் ஐந்து முக்கிய அமைப்புகள் உள்ளன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்:
1. மலை அடிவாரத்தில் முருகப்பெருமான் திருக்கோயில் (முதல் படை வீடு)
2. மலையின் நடுப்பகுதியில் தீபத்தூண் (Deepa Thoon / Fire Pillar) எனப்படும் பாரம்பரிய தீப கம்பம் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இங்குதான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது.
3. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் இந்தியாவின் மாபெரும் நில அளவைப் பணி (Great Trigonometrical Survey of India) நடத்தப்பட்டபோது, மலையில் ஒரு குறியீட்டுக் கல்லை (Survey Stone / Marker Stone) நட்டு வைத்தார்கள்.
4. 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மலை உச்சியில் பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர், முந்தைய தீபத்தூணைவிட உயரமான இடத்தில் இருப்பதால், கார்த்திகை தீபம் இங்கே ஏற்றப்பட்டு வருகிறது.
5. மலையில் தனியாக சிக்கந்தர் தர்கா (Sikkandar Dargah) உள்ளது. இது இஸ்லாமிய புனிதத் தலமாகும்.
இன்று இங்கு இந்து சகோதரர்கள் முருகன் கோயிலிலும் பிள்ளையார் கோயிலிலும் வழிபாடு நடத்துகிறார்கள், கார்த்திகை தீபம் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்படுகிறது. முஸ்லிம் சகோதரர்கள் தர்காவில் தொழுகை நடத்துகிறார்கள். நடுத்தரத்தில் உள்ள பழமையான தீபத்தூண் இன்னமும் அப்படியே உள்ளது. பிரிட்டிஷ் அளவைக் கல் தனியாக உள்ளது.
இப்போது சர்ச்சை என்ன?
சங்க பரிவாரத்தைச் சேர்ந்த சிலர், “தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது” என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் காட்டுவது தீபத்தூண் அல்ல – பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று தவறாகக் காட்டுகிறார்கள். இந்த அளவைக் கல் தர்காவுக்கு மிக அருகில் உள்ளது. அதாவது, தர்கா பகுதியிலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
உண்மை என்ன?
தீபத்தூணும் அளவைக் கல்லும் இரண்டு வேறு வேறு என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆர்.எஸ்.எஸ். தரப்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புத்தகத்திலேயே இந்த விவரம் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தீபத்தூண் வேறு, பிரிட்டிஷார் வைத்த அளவைக் கல் வேறு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு
--------------------------------------------
- பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்கெனவே அனுமதி உள்ளது. தீபம் தொடர்ந்து பல தசாப்தங்களாக இங்கு தான் ஏற்றப்பட்டு வருகிறது. 03.12.2025 அன்றும் இங்கு தான் ஏற்றப்பட்டது
- ஆனால் தர்கா பகுதியில் உள்ள அளவைக் கல்லில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை. அதை அரசு அனுமதிக்கவும் இல்லை.
சங்கிகளின் பொய்கள் மற்றும் உண்மை
பொய் 1: “அரசு தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை”
உண்மை: பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்கெனவே ஏற்றப்பட்டு வருகிறது. 03.12.2025 அன்றும் ஏற்றப்பட்டது
பொய் 2: “நாங்கள் தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற விரும்புகிறோம்”
உண்மை: உண்மையான தீபத்தூண் வேறு இடத்தில் உள்ளது. தர்காவுக்கு அருகில் உள்ள அளவைக் கல்லையே “தீபத்தூண்” என்று பொய்யாகக் காட்டுகிறார்கள். இதற்கு ஆதாரம் – ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த புத்தகமே!
திருப்பரங்குன்றம் மலையில் அமைதியும் சகோதரத்துவமும் நிலவுகிறது. இதை சிலர் அரசியலுக்காக சீர்குலைக்க முயல்கிறார்கள். உண்மையை அறிந்து கொண்டால், யாரும் ஏமாற மாட்டார்கள்.
- சிவசங்கரன் சரவணன்
தமிழ்

















