💀வசந்த்
10.4K posts

💀வசந்த்
@vishva0073
#தமிழ்தேயன் #பிராபாகரனிசம் #ஈழஏதிலி #வாழுவாழவிடு #bodybuilding #badminton #ntk #seeman #tamilanstock❤️💛
EELAM, LONDON Katılım Ağustos 2018
515 Takip Edilen1.6K Takipçiler
Sabitlenmiş Tweet
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi

போராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன் லெப். கேணல் ஜெரி .
ஜெரியை தெரிந்த யாரிடமாவது போய்க்கேளுங்கள். ஒரு நேர்த்தியான, அழகான இராணுவச் சீருடை தரித்த உருவத்தையே எல்லோருக்கும் சொல்வார்கள். அது அவனுக்கே தனித்துவமானது. அவனது வாழ்க்கை முறையே சற்று வித்தியாசமானது. எல்லா மனிதர்களும் அப்படி வாழமுடியாது. அதனால் அவனின் இயல்பு எல்லோருக்கும் பிடித்தமானதாகவும் இருக்காது. ஆனாலும் அவனின் இயல்பை எல்லோரும் பெற்றுவிட முடியாது. அந்த மனிதனின் சுவடுகளைத்தான் இந்தக் குறிப்புக்கள் சொல்லி நிற்கின்றன. ஜெரியை வீட்டில் அப்பன் என்றுதான் அழைப்பார்கள். ஆனாலும் சின்ன வயதிலேயே அவனின் செயற்பாடுகள் குழந்தைத்தனமானதாக இருக்கவில்லை. எப்போதும் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருப்பான். அவன் சும்மா இருப்பதில்லை. எதையாவது எடுத்துவைத்து ஆராச்சி செய்துகொண்டிருப்பான். 1985ஆம் ஆண்டு அப்போது அவனுக்கு பதினாறு வயதுதான் ஆகியிருந்தது. நாட்டில் அப்போது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் அவன் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்னால் ஏன் போராட முடியாது? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. ஒரு நாள் அவன் இயக்க முகாமொன்றிற்கு சென்று விட்டான். தானும் போராடப்போவதாகச் சொன்னான். ஆனால் அங்கே நின்ற போராளிகள் ஏற்பதாக இல்லை. இருபத்தி ஒரு நாட்கள் அவர்களுடன் நின்று தானும் போராடப் போவதாகக் கேட்டும், வயது போதாததால் சோகத்தோடு திரும்பினான். தான் எப்படியும் போராட வேண்டும் என்ற அவனின் எண்ணம் கொஞ்ச நாட்கள் கழித்து நிறைவேறியது. அவனுக்கு மனதில் ஆனந்தம். தானும் போராடலாம் என்ற உத்வேகம் அவனுள் உருவாகியது. யாழ். சாவகச்சேரியில் நடைபெற்ற “சாவா – 01” பயிற்சி முகாமில் ஆரம்பப் பயிற்சிகளை அவன் பெற்றுக்கொண்டான். பயிற்சிகள் முடிந்ததும். யாழ். மாவட்ட படையணியில் இருந்து செயற்பட்டுவந்தான். இந்த நாட்களில் தான் இந்திய இராணுவம் எங்களது தேசமெங்கும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்திய இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையேயான சண்டை மூண்டது. சண்டைகள் பரவலாக நடைபெற்றன. ஜெரியும் இந்த சண்டைகளை எதிர்கொண்டான். இந்தச் சண்டையின் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத் தளம் யாழ்ப்பாணத்திலிருந்து மணலாற்றுக் காட்டுக்கு இடம் மாறுகின்றது. உலகத்தின் நான்காவது வல்லரசு நாடு எங்களது போராட்டத்தை நசுக்க முற்பட்டபோது அதை முறியடிக்கத் தலைவன் வகுத்த திட்டத்தில் முதன்மையாய் இருந்தது மணலாற்றுக் காடு. அந்தக் காட்டில் தலைவருடன் முகாமிட்டிருந்த போராளிகளுக்குள் ஜெரியும் இருந்தான். ஆந்த வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும் போராளிகள் எல்லோரும் மகிழ்வாக ஏற்றுக்கொண்டார்கள். காட்டில் எந்த வசதிகளுமே இருக்கவில்லை. எல்லாமே தேடவேண்டும். எல்லாவற்றையும் புதிதாகவே உருவாக்கவேண்டும்.

தலைவர் திட்டங்களை வகுத்து ஒவ்வொன்றாகச் செயற்படுத்தினார். அடிப்படை வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கவேண்டும். எல்லா வளங்களையும் வெளியில் இருந்தே கொண்டு வரவேண்டும். ஆனால் அந்த மணலாற்றுக் காட்டைச் சுற்றி இந்திய இராணுவம் முற்றுகையிட்டுக் கொள்கிறது. வெளியில் இருந்து எதைக் கொண்டுவருவதானாலும் இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கொண்டுவரவேண்டும். சில வேளைகளில் சண்டையிட்டுத்தான் பொருட்களைக் கொண்டுவரவேண்டும். இந்தக் கடினமான பணி ஜெரிக்கும் இருந்தது. நீண்டதூரம் பொருட்களைக் காவிவரவேண்டும். இந்தப் பொருள்காவும் பணியை “கம்பாலா” என்றுதான் போராளிகள் அழைப்பார்கள். ஒரு தடியில் பொருட்களைத் தொங்கவிட்டு, இருவர் தோள்களில் வைத்தபடி கொண்டுவர வேண்டும். கம்பாலா அடித்தால்தான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். அதுவும் போதிய அளவு இருக்காது. ஊடல் சோர்வாக இருந்தாலும் கம்பாலா அடித்தே ஆகவேண்டும். போராளிகள் சில வேளைகளில் உடற்களைப்பில் இருந்துவிடுவார்கள். ஆனால், ஜெரி எப்போதுமே மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். “புறகென்ன நாங்கள் தானே தூக்க வேணும் வாங்கோ போவம்” என்றபடி அவன் புறப்பட்டுவிடுவான். சலிப்பு என்பது அவனிடம் இருந்ததில்லை. எந்த கடினங்களையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் தன்மை அவனிடமிருந்தது. காட்டில் எந்தவேளையும் இந்திய இராணுவத்தை எதிர்பார்த்தபடியே இருக்க வேண்டும். ஒவ்வொரு போராளியும் நீண்ட நேரம் காவற்கடமை புரிய வேண்டும். எஞ்சிய நேரங்களில் சமையல் ஏனைய வேலைகள் என அவர்கள் எப்போதுமே இயங்கிக்கொண்டே இருக்கவேண்டிய நிலை. ஓய்வு என்பதும், உறக்கமென்பதும் மிகக்குறைவே. ஆனாலும் எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஜெரியும் இதைச் சாதாரணமாகவே ஏற்றுக்கொண்டான். குளிப்பதற்கு போதியளவு தண்ணி இருக்காது. கடும் உழைப்பால் உடல் அசதியாக இருக்கும் ஆனாலும் ஜெரி எப்போதும் அழகாகச் சீருடை தரித்து முகச்சவரம் செய்து இராணுவச் சப்பாத்து அணிந்து ஒரு அழகான தோற்றத்தில் காட்சி அளிப்பான்.


தமிழ்
💀வசந்த் retweetledi

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளி ஒருவர் கோரியுள்ளார்
முன்னாள் போராளியான எதிர்மன்னசிங்கம் கிரேசியன் என்பவருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தடுப்பு முகாம்களிலும் சித்திர வதைக்கூடங்களிலும் கழித்துள்ள இவர் தற்போது கடுமையான உடல்நலப் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்
வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு பிரதி அமைச்சரின் அறிவிப்பு வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு 70 இலட்சம் ரூபாக்கும் மேல் செலவு இது குறித்து அவர் தனது ஆதங்கத்தை பகிர்ந்து கொள்கையில் எனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன அவசரமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் இந்தச் சிகிச்சைக்கு உடனடியாகச் செய்யா விட்டால் எனது உயிர் பிரிந்து விடும் அபாயம் உள்ளது அவ்வாறு நேர்ந்தால் எனது மனைவி பிள்ளைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 70 இலட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகும் என மதகப்பிடப்பட்டுள்ளது என்னிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை
எனவே எனது தமிழ் மக்கள் என்னை எந்த நிலையிலும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என அவர் கண்ணீருடன் பணிவன்போடு கோரிக்கை விடுத்துள்ளார்
இந்த நிலையில் உயிர் ஆபத்தான நிலையில் உள்ள இந்த முன்னாள் போராளியின் சிகிச்சைக்கு உதவ விரும்புபவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்தின் ஊடாகவே அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது
வங்கி விபரங்கள்
பெயர்:-எதிர்மன்னசிங்கம் கிரைசியன் (Ethirmannasingam Grashan)
வங்கி:-இலங்கை வங்கி (BOC)
கிளை:-கல்வியங்காடு
கணக்கு இலக்கம்:-94948569
தொலைபேசி இலக்கம்:-0094775621613

தமிழ்
💀வசந்த் retweetledi

💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi

எங்கள் அண்ணன் சீமான் பேரன்புக்காரன்,
ஐயா சிவாஜிலிங்கம் அவர்களின் கிட்னிமாற்று சிகிச்சைக்கு நிதியுதவி அளித்திருக்கிறார்🙏🏽🙌🏽
நன்றிண்ணே @Seeman4TN 🙇🏻♀️🙏🏽♥️💛🫡
இவரைப் பார்த்தாடா நாய்களே திரள்நிதி என்று நகையாடுகிறீர்கள் 💦😡
தமிழ்

அவர நினைத்திருந்தால் எப்படியோ வாழ்ந்திருந்திருக்கலாம்😭❤️😭❤️😭
நெல்லை செல்வின்@selvinnellai87
என் தலைவனுக்கும் ஒரு குடும்பம் உண்டு..
தமிழ்
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi
💀வசந்த் retweetledi

@___Maran @vishva0073 not nice at all. You should really donate that money
English

என்ன AI ல edit பண்ண image ணு தெரியல London , Landon ணு எழுதி வச்சுருக்கு !
இல்ல இப்பிடித்தான் ஊர ஏமாத்திட்டு திரியுரானுகளா ! 🤧.

💀வசந்த்@vishva0073
எம் இனம் காக்க , எம் மொழி காக்க என்னால முடிந்த மற்றுமொறு சிறு பங்களிப்பு, ஒரு ஈழத்தமிழனாக எனது ஆதரவு @Seeman4TN அண்ணணுக்ககே🤗🤗🤗 donate.naamtamilar.org
தமிழ்

@Whisperer2024 @___Maran I realy thought u trusted me , so far u travelled in double mind , thx @Whisperer2024
English





