SP Velumani - Say YES to AIADMK

13.6K posts

SP Velumani - Say YES to AIADMK banner
SP Velumani - Say YES to AIADMK

SP Velumani - Say YES to AIADMK

@SPVelumanicbe

Chief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.

Katılım Nisan 2017
150 Takip Edilen226.1K Takipçiler
SP Velumani - Say YES to AIADMK
யுகாதி திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான யுகாதி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளில் தொடங்கும் புதிய தொடக்கங்கள் சிறப்படையவும், அனைவரின் வாழ்விலும் உள்ள துன்பங்கள் நீங்கி, அன்பு, ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி பெருகி, வளமான வாழ்வு அமையவும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMK
SP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
4
49
120
900
SP Velumani - Say YES to AIADMK
தமிழ்நாடு கம்மா நாயுடு மகாஜன சங்கத்தின் முன்னாள் தலைவர், தெய்வத்திரு. கெங்குசாமி நாயுடு அவர்களின் துணைவியார் திருமதி. ராஜலட்சுமி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். @EPSTamilNadu @AIADMKOfficial
தமிழ்
1
37
89
2.2K
SP Velumani - Say YES to AIADMK
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், @BJP4TamilNadu முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்கள் தலைமையில் #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினேன். இந்நிகழ்வில், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி திரு. @V_Jayaraman123, அவர்கள், திரு. @PRGArunkumar அவர்கள், திரு. @AmmanKArjunan அவர்கள், திரு. ஏ.கே.செல்வராஜ் அவர்கள், திரு. @DamodaranMLA அவர்கள், திரு. @kr_jayaram அவர்கள், @MLA_SulurOffl திரு.V.P.கந்தசாமி அவர்கள், திருமதி. @VanathiBJP அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும் விடியா திமுக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் மீது கொஞ்சமும் அக்கறையற்ற இந்த அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிந்து, மாண்புமிகு புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக அரியணை ஏற்றக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். #அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL #AIADMK #Coimbatore
SP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
12
226
749
13.4K
SP Velumani - Say YES to AIADMK retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
#Live மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் twitter.com/i/broadcasts/1…
தமிழ்
36
335
500
5.9K
SP Velumani - Say YES to AIADMK
தனது 50 ஆண்டு கால திரைப் பயணத்தில், தான் சந்தித்த எண்ணற்ற சவால்களை, சாதனைகளாக மாற்றி, தனக்கென தனி முத்திரை பதித்து, மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி என்றும் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர், அன்பு நண்பர், நடிகர் திரு. @rajinikanth அவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர், அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர். அன்பு நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்கள் எந்த அளவுக்கு சுயமாக முடிவெடுக்கக் கூடியவர் என்பதை இந்த நாடறியும். அப்படி இருக்கையில் அரசியலில் ஒன்றுமில்லாதவர்கள், தன்னை ஒரு பெரும் அரசியல் ஆளுமையாகக் காட்டிக்கொள்ள முயல்பவர்கள், திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்துத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயல்வது மிகவும் அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMK
தமிழ்
81
640
1.9K
72.9K
SP Velumani - Say YES to AIADMK
தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம், விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, எனது முன்னிலையில், இன்று மாலை 4 மணிக்கு #கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. விடியா திமுக அரசின் ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான, சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து, பொதுமக்கள் மற்றும் மகளிருக்கான பாதுகாப்பையும் இளைஞர்களின் நல்லதொரு எதிர்காலத்தையும் உறுதிசெய்யும் இந்த ஜனநாயகப் போராட்டத்தில் நம் கழக உடன்பிறப்புகள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். @EPSTamilNadu @AIADMKOfficial @annamalai_k #AIADMK #NDA
தமிழ்
7
182
562
16.8K
SP Velumani - Say YES to AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை திரு. ரஜினிகாந்த் அவர்கள். புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல். @AIADMKOfficial @AIADMKITWINGOFL
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
675
2.8K
9.4K
838.2K
SP Velumani - Say YES to AIADMK retweetledi
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (17.3.2026), மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet mediaAIADMK - SayYesToWomenSafety&AIADMK tweet media
தமிழ்
27
334
447
5.5K
SP Velumani - Say YES to AIADMK
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அது பற்றி திமுகவிற்கு கவலையும் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். @EPSTamilNadu @AIADMKOfficial #EPSfor2026
தமிழ்
5
76
136
1.2K
SP Velumani - Say YES to AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் #அஇஅதிமுக மீண்டும் அமைந்த பின்பு அத்திக்கடவு - அவிநாசி திட்டம் II கொண்டுவரப்படும். @EPSTamilNadu @AIADMKOfficial #EPSfor2026
தமிழ்
4
70
130
1.3K
SP Velumani - Say YES to AIADMK
மக்களிடம் ஓட்டு கேட்கத் தகுதியே இல்லாத கட்சி திமுக! செய்த சாதனைகளை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்கும் தகுதியுடைய கட்சி #அஇஅதிமுக! @EPSTamilNadu @AIADMKOfficial #EPSfor2026
தமிழ்
6
73
158
1.5K
SP Velumani - Say YES to AIADMK
#அஇஅதிமுக ஆட்சியில் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம், கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மகப்பேறுக்குப் பின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும் அம்மா தாய்-சேய் நலப் பெட்டகம் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்பட்டன. @EPSTamilNadu @AIADMKOfficial #EPSfor2026
தமிழ்
1
48
79
674
SP Velumani - Say YES to AIADMK
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் வங்கிக் கடன் கொடுத்து, மகளிரை தொழில் செய்ய வைத்தது #அஇஅதிமுக ஆட்சி! @EPSTamilNadu @AIADMKOfficial #EPSfor2026
தமிழ்
2
58
101
930
SP Velumani - Say YES to AIADMK
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

2021-ஆம் ஆண்டு, @mkstalin தமிழ் நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, திமுக-வினுடைய விடியா ஆட்சியில் தமிழ் நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை இந்த விடியா அரசு உருவாக்கி இருக்கிறது. வேதனையோடு சொல்வதென்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ மாணவிகள்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் நாட்டின் முக்கிய ஊடகங்களிலேயே வெளியிடப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல் துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழ் நாட்டின் முதலமைச்சர் கள்ள மவுனம் சாதித்ததோடு இல்லாமல் விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்திக்கொண்டிருந்தார். போதை கும்பல், கூலிப் படைகள் ஏற்படுத்திய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளில் உச்சமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, வரலாற்றில் முன் எப்போதும் பார்த்திடாத அளவிற்கு மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர். இதிலிருந்து, விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எதைநோக்கிச் செல்கிறது என்பதையும்; வேலியே பயிரை மேய்கிறது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து மிகுந்த வேதனைப்படுகின்றனர். தமிழ் நாட்டு மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். தமிழ் நாடு ரவுடிகளினுடைய புகலிடமாக, கூலிப் படைகளின் ராஜ்ஜியம் நடக்கின்ற இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. திமுக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஏன்? என்கிற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போதைப் பொருள் விற்பனையில் திமுக பிரமுகரே கைதாவதும்; கள்ளச் சாராய விற்பனையில் திமுக பிரமுகரே ஈடுபட்டிருப்பதும்; மணல் கொள்ளை, இயற்கைவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினரே ஈடுபட்டிருப்பதும்; ஏழை, எளிய மக்களை ஏமாற்றி கிட்னி திருடிய வழக்கில் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனையையே குற்றம் சாட்டப்பட்டிருப்பதும்; பல்வேறு பாலியல் வன்கொடுமைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களே முதன்மைக் குற்றவாளிகளாக ஈடுபட்டிருப்பதும்; இந்த குற்றங்களுக்கெல்லாம் ஆளுங்கட்சியும், முதலமைச்சரும் அரணாக நின்று பாதுகாப்பு கொடுக்கிறார்களோ என்கிற பெரும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து, தமிழ் நாடு முழுவதும் இன்றைக்கு மக்கள் பெரும் கோபம் கொண்டிருக்கிறார்கள். விடியா திமுக ஆட்சியின் மேற்கண்ட மக்கள் விரோதச் செயல்களின் வெளிப்பாடுதான், ஆளும் கட்சிக்காரர்களை மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும், வெளியேறச் சொல்லி முழக்கமிட்டும் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். எனவே, இந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களுடைய முகத்திரைகளை கிழிக்கும் வண்ணமும், தமிழ் நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருந்திரளாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, @AIADMKOfficial நிர்வாகிகளும், தொண்டர்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் அனைத்து மக்களும் அலை அலையாகத் திரண்டு வந்து பேராதரவினைத் தர வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிவதற்கு கழகச் சொந்தங்கள் திரண்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன்!! #PackupStalin #ByeByeStalin

QHT
2
86
206
3.1K
SP Velumani - Say YES to AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, #கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகம், #தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, பேரூரில், மகளிர் மாநாடு போல் பிரம்மாண்டமாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். இந்நிகழ்ச்சியில் கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் @vindhyaAiadmk, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் @gautamitads, கழக மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகமாக வங்கிக் கடன் வழங்கி மகளிரை தொழில் செய்ய வைத்தது #அஇஅதிமுக, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கியது #அஇஅதிமுக, தாலிக்கு தங்கம் வழங்கியது #அஇஅதிமுக, கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மகப்பேறுக்குப் பின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும் அம்மா தாய்-சேய் நலப் பெட்டகம் வழங்கியது #அஇஅதிமுக. மகளிர் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களைச் செயல்படுத்தியது #அஇஅதிமுக. கோவை மாவட்டத்திற்கு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியது #அஇஅதிமுக. கடந்த ஐந்தாண்டுகளாக திமுக அரசு எந்தவிதமான வளர்ச்சித்திட்டங்களையும் கொண்டுவரவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் #அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று, மாண்புமிகு அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணை ஏறுவார் என்பதனை உறுதி செய்தது அலைகடலென திரண்டிருந்த இந்த மகளிர் கூட்டம். கழக ஆட்சி அமைந்த உடன் கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் கூறியது போல் அனைத்து குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திமுக அரசால் நிறுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், மகளிர் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். மகளிருக்கு உண்மையான விடிவு காலம் பிறக்கும். @EPSTamilNadu @AIADMKOfficial #AIADMK #WomensDay #Coimbatore
SP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet mediaSP Velumani - Say YES to AIADMK tweet media
தமிழ்
4
93
246
4.4K