
VIJAY
2.8K posts






This is behind the Arupadai Veedu temple, the beach stretch close to Kalakshetra Colony in Besant Nagar, - near the north of Thiruvanmiyur Beach. Garbage strewn across the sand, mounds of debris along the shoreline, houses and huts vulnerable to flooding continue. Similar issues were flagged in 2024. Residents alleged that civic issues and Coastal Regulation Zone (CRZ) violations remain unaddressed. Greater Chennai Corporation officials have assured to take action. Here is a glimpse: Watch: instagram.com/reel/DYpy7Lbzm… @THChennai @the_hindu @chennaicorp


சிவகாசி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் அவர்களுக்கான தேவைகள் கேட்டறியப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், நோயாளிகளுக்கான அடிப்படை தூய்மை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர் மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மக்கள் நலனே முதன்மை என்ற நோக்கில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் தொடரும்... #CMJosephVijay #Sivakasi #TamilNadu #Hospital




கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். #CMJosephVijay





















