Adham Bava

2.6K posts

Adham Bava banner
Adham Bava

Adham Bava

@adham_bava

அஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே ☝️WRITER -PRODUCER -DIRECTOR

Chennai, India Katılım Şubat 2017
306 Takip Edilen2.5K Takipçiler
Sabitlenmiş Tweet
Adham Bava
Adham Bava@adham_bava·
புதியதோர் தமிழகம் படைப்போம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஓர் அறைகூவல் ! தமிழக மக்களுக்கான எனது மனம் திறந்த மடல்... தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பத்தை எதிர்நோக்கி நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.இந்த வேளையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்அண்ணன் சீமான்அவர்கள் வெளியிட்டுள்ள "ஆட்சிச் செயல்வரைபடம்" வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல அது நம் மண்ணின் வளத்தையும்,மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுப்பதற்கான ஒரு புரட்சிகரமான தீர்வு. இலவசங்களா?அல்லது இறையாண்மையா? இன்றுவரை நம்மை ஆண்டுவரும் திராவிடக் கட்சிகளும்,புதிதாக களம் கண்டுள்ள கட்சிகளும் மக்களை வெறும்"வாக்காளர்களாக"மட்டுமே பார்க்கின்றனஅதனால்தான் இலவச அரிசி,இலவசப் பணம் எனப் பல கவர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கி,மக்களைத் தற்காலிக இன்பத்தில் மூழ்கடித்து,அவர்களை நிரந்தரக் கடனாளிகளாகவும்,கையேந்துபவர்களாகவும் மாற்றத் துடிக்கிறார்கள் இந்த"இலவச கலாச்சாரம்"நம் தன்மானத்தைச் சிதைக்கும் செயல் என்பதை நாம் உணர வேண்டும். நாம் தமிழர் கட்சியின் தொலைநோக்கு பார்வை ஏன் முக்கியமானது? தற்சார்பு பொருளாதாரம் கையேந்தும் நிலையை மாற்றி,ஒவ்வொரு தமிழனையும் உற்பத்தியாளராக மாற்றும்"வேளாண்மை அரசுப் பணி"திட்டம்,உலகிற்கே முன்னுதாரணமான ஒரு பொருளாதாரப் புரட்சி. அடிப்படை உரிமைகள் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை வணிகமாக்காமல், அவை அனைவருக்குமான தரமான அரசு சேவைகளாகக் கிடைப்பதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது ! இயற்கைப் பாதுகாப்பு பனை மரங்களை நடுதல் மற்றும் நீர்நிலை மீட்பு போன்ற திட்டங்கள், வெறும் கனவுகள் அல்ல அவை நம் எதிர்காலத் தலைமுறை பாதுகாப்பாக வாழ்வதற்கான அடிப்படைச் சொத்துக்கள். எனது அன்பான வேண்டுகோள் 🙏🏻 விலையில்லாப் பொருட்கள் என்ற போர்வையில் வீசப்படும் தூண்டில் இரைகளுக்குப் பலியாகி உங்கள் வாக்குகளை விற்காதீர்கள். நம் குழந்தைகளுக்குத் தேவை இலவசங்கள் அல்ல தரமான கல்வி, கண்ணியமான வேலைவாய்ப்பு மற்றும் லஞ்சமற்ற நேர்மையான நிர்வாகம் மட்டுமே. "வாக்குக்கு பணம் கொடுப்பவன் பாவி... வாங்குபவன் தேசத்துரோகி!" இந்த உண்மையை நெஞ்சில் ஏந்துவோம். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் "விவசாயி" சின்னத்தில் அறத்துடன் போட்டியிடும் நாம் தமிழர் உறவுகளுக்கு வாக்களிப்போம். இலவசங்கள் உங்கள் ஒரு நாளை மாற்றலாம்,ஆனால் நம்முடைய சரியான கொள்கை முடிவு இந்த இனத்தின் வரலாற்றையே மாற்றும் ! விவசாயத்தைப் புரட்சியாக்குவோம் ! தமிழர் நிலத்தை மீட்டெடுப்போம் ! அன்புடன், ஆதம் பாவா இயக்குநர்,தயாரிப்பாளர் @highlight @Seeman4NT @SeemanOfficial @NaamTamilarOrg @NTKLiveNews @ntkwomenswing @NtKyouthwing @NTKitwingMtp #நாம்தமிழர்கட்சி #சீமான் #நாம்தமிழரேமாற்று
Adham Bava tweet media
தமிழ்
2
78
164
1.6K
Adham Bava retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
பரமக்குடி நாம் தமிழர் வேட்பாளரின் களம் பற்றிய பார்வை... 50 வருட குப்பையை அகற்ற அவரின் தெளிவான பேச்சும் ஈடுபாடும்... மக்களே உங்கள் கவனம் இனி யார் கையில் ஆட்சியை கொடுப்பது என்பதில் மட்டுமே இருக்கவேண்டும்.. புதியவர்கள் ஒரு முறை ஆட்சியில் அமரட்டுமே... வாய்ப்பை கொடுத்து பார்ப்போம் மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட தம்பி, தங்கைகளிடம்.. @_ITWingNTK #பரமக்குடி
Vinoth@kovaiVino

குப்பைகள் எல்லாம் மலையாகவும், மலைகள் எல்லாம் குப்பையாகவும் மாற்றும் வல்லமை நம்ம திராவிடியா கட்சிகளே சாரும்..

தமிழ்
32
654
1.4K
12.9K
Adham Bava
Adham Bava@adham_bava·
“ஜனநாயகன்” இணையத்தில் லீக்கான காட்சிகளில் இந்திய சினிமாக்களின் வழக்கமான இஸ்லாமிய வெறுப்பு தீவிரவாத பார்மூலா ! சிறுபான்மைக் காவலர் பெரியார் பேரன் திரு ஜோசப் விஜய் அவர்களே… ஆம்,நாங்கள் ‘தீவிரவாதிகள்’ தான் ! மழை,வெள்ளம்னு கஷ்டம் வரும்போது மத்தவங்க வர்றதுக்கு முன்னாடி முதல்ல ஓடிப் போய் உணவு,பால், மருந்து கொடுத்து உயிர்களைக் காப்பாத்துற ‘தீவிரம்’ எங்ககிட்ட இருக்கு ! கொரோனா நேரத்துல பெத்தவங்க,சொந்தக்காரங்களே கைவிட்டப்போ... ஜாதி மதம் பார்க்காம, பிணங்களைக்கூட மரியாதையோட அந்தந்த மதச் சடங்குப்படி அடக்கம் செஞ்சோமே,அந்த ‘மனிதாபிமானத் தீவிரம்’ எங்ககிட்ட இருக்கு ! மக்கள் எங்கெல்லாம் துன்பப்படுறாங்களோ,இயற்கை எப்போதெல்லாம் தாக்குதோ... அங்க முதல் ஆளா நின்னு உதவி செய்ற ‘கருணைத் தீவிரம்’ எங்ககிட்ட இருக்கு ! எல்லாத்துக்கும் மேல... மதத்தோட பேரைச் சொல்லி அரசியல் பண்ணி,மக்களைப் பிரிக்க நினைக்கிறவங்ககிட்ட உண்மையை நேருக்கு நேரா கேக்குற ‘தைரியத் தீவிரம்’ எங்ககிட்ட இருக்கு ! அதிகாரத்துல இருக்கிறவங்க தப்பு செஞ்சா,அதைச் சுட்டிக்காட்டி சமூக நீதிக்காகக் குரல் கொடுப்போம் ! வெறுப்புப் பிரச்சாரத்தால மூளைச்சலவை செய்யப்படுறவங்களுக்கு அன்பையும், வரலாற்றையும் சொல்லிக் கொடுப்போம் ! இந்த மனிதத்துவம்,இந்த ஒற்றுமை,இந்த நியாய உணர்வு இதுக்குப்போர் தான் ‘தீவிரவாதம்’ அப்படின்னா நிச்சயமா நாங்க அந்த தீவிரவாதிகளே தான் ! அன்பை விதைப்போம்... மனிதத்தை காப்போம்❤️ ~ஆதம் பாவா இயக்குநர்,தயாரிப்பாளர். @actorvijay #JanaNayagan @NaamTamilarOrg
Adham Bava tweet media
தமிழ்
19
72
199
7.2K
Adham Bava
Adham Bava@adham_bava·
தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான திரு.விஜய் அவர்கள் நடித்து, எனது அருமை நண்பர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையீட்டிற்கு முன்பாகவே இணையதளத்தில் கசிந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும்,வேதனையும் அளிக்கிறது. இது ஒரு தனிப்பட்ட நபரின் பாதிப்பு அல்ல ஒட்டுமொத்தத் திரையுலகின் முதுகெலும்பையே உடைக்கும் ஒரு கீழ்த்தரமான கிரிமினல் செயலாகும் ! ஒரு படைப்பை உருவாக்க நூற்றுக்கணக்கான கலைஞர்கள் சிந்துய வியர்வையையும், தயாரிப்பாளரின் பல கோடி ரூபாய் முதலீட்டையும் திருட்டுத்தனமாகச் சீரழிக்கும் இத்தகைய சமூக விரோதிகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது ! இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகவும், மிகக் கடுமையான முறையிலும் தலையிட வேண்டும். இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட கிரிமினல்களைக் கண்டறிந்து,அவர்கள் மீண்டும் தலைதூக்க முடியாத அளவிற்குச் சட்டப்படியான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் ! திரையுலகின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்தத் திருட்டுத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! ரசிகர்களும்,பொதுமக்களும் இத்தகைய திருட்டுப் பதிவுகளைப் புறக்கணித்து,படைப்பாளிகளின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் திரைப்படத்தைத் திரையரங்குகளில் காண்பது மட்டுமே அறம் ! ஆதம் பாவா, இயக்குநர்,தயாரிப்பாளர் @Hvinothh @Hvinothdire @actorvijay @KvnProductions #jananayagan
Adham Bava tweet media
தமிழ்
0
2
7
246
Adham Bava retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
பல்லாவரம் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளர் தம்பி கார்த்திகேயன் ஒரு மருத்துவர்... மக்களுக்காக இறங்கி அனைத்து போராட்டங்களிலும் நின்றவர்.. அறிவு சார்ந்து மக்களை அழைத்துச்செல்ல முயல்கிறார்.. தனது அரசியல் பயணம் பற்றிய காரணத்தையும், வேட்பாளராக களம் காணும் நோக்கத்தையும் தெளிவாக மக்கள் முன் வைக்கிறார்.. தமிழ்தேசியம் பேசும் இந்த தம்பி சட்டசபையில் நமக்காக உரக்க பேசுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.. தெள்ளத்தெளிவாக சிந்திக்க தெரிந்த வேட்பாளர்களை அனுப்புவோம் சட்டசபைக்கு மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த... வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு.. #விவசாயி @_ITWingNTK @Seeman4TN
மருத்துவர். இரா.கார்த்திகேயன்@DrKarthikeyanR

உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள் #election2026 #pallavaram #NTK4TN #ntkitwing #Seeman4TN

தமிழ்
73
876
2K
22.5K
Adham Bava
Adham Bava@adham_bava·
நாம் தமிழரே மாற்று 🔥 @NaamTamilarOrg @NTKLiveNews #நாம்_தமிழர்_கட்சி
Cheran Pandiyan@CheranDirector

ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல்.. இந்த பரப்புரை நிலை சரிதானா.. இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளையும் பம்பரமாக சுற்றியிருக்க வேண்டாமா... அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜய்யின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம் அந்த தலைமைக்கு... நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமர போகிறார்கள் தினமும்... நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர் தோல்வியை சந்தித்த போதும் தளராமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து, கொட்டும் மழையிலும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார். அந்த தலைவன் எங்கே... முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே.. சிந்தியுங்கள் மக்களே... நீங்கள் யார் வேண்டுமா வேண்டாமா எனக்கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரசச்சாரம் செய்கிறார்.. ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரச்சாரத்தை ரத்து செய்கிறீர்கள்... இப்போ சொல்லுங்க மக்களே.. நிஜப்போட்டி திமுக Vs நாதக தானே....

தமிழ்
0
27
150
1.2K
Adham Bava retweetledi
மு. சிவக்குமார் நாதக
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி பாதி வாய்ப்பு கொடுப்பது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் 🔥
தமிழ்
5
339
992
8.7K
Adham Bava
Adham Bava@adham_bava·
தமிழ்த் தேசியமா ? திருட்டு திராவிடமா ? நம்பிக்கையுடன் களமாடுவோம் நாளை நமதே 🔥 @Seeman4NT @SeemanOfficial @NaamTamilarOrg @NTKLiveNews
Adham Bava tweet media
தமிழ்
1
22
40
368
Adham Bava
Adham Bava@adham_bava·
மூத்தவரின் தரமான சம்பவம் 🔥 @CheranDirector @Seeman4NT @SeemanOfficial @NaamTamilarOrg @NTKLiveNews
Cheran Pandiyan@CheranDirector

புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் .. அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள.. உங்க இருவருக்கும் என்ன ப்ரச்னைன்னு எங்களுக்கு தெரியல.. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன்.. அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி... அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்... நாங்களும் சப்போர்ட் பன்றோம்.. சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசுனா ஏன் ஓட்டு போடனும்னு மக்கள் கேக்குறாங்கள்ல.. இங்க ஐம்பது வருஷமா இருக்க கட்சிகள் மற்றும் பதினைந்து வருஷமா மக்களோட மக்களா களத்துல நின்னு போராடி, புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள் எல்லாம் நிறைய இருக்கு.. எந்த விதத்துல நீங்க அந்த கட்சிகளை விட உயர்வு சொல்லுங்க... எந்த போராட்டத்துல மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க இங்க ரெண்டு கட்சிக்குத்தான் போட்டின்னு சொல்ல... மனசாட்சி இல்லைன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவிங்க விஜய்... உழைப்பை முதல்ல மதிங்க... உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல... இனிமேலும் மக்கள்க்கிட்ட வீரவசனம் மட்டும் பேசாம ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்துலயும் பேசுங்க.. ஒவ்வொரு தொகுதிலயும் என்ன ப்ரச்னைன்னு அலசி ஆராய்ங்க... பொதுவா வீராவேசமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை... மக்கள் களம்... ஏற்கனவே நாங்க 50 வருடத்தை இழந்துட்டு இருக்கோம்.. இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதிங்க.. மறுபடியும் மக்கள் ப்ரச்னை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம்.... மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளையதலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும்... @actorvijay

தமிழ்
4
67
329
2.4K
Adham Bava
Adham Bava@adham_bava·
மகிழ்ச்சி 😁 #நாம்தமிழர்_ஆட்சிவரைவு @NaamTamilarOrg
Adham Bava tweet media
தமிழ்
0
80
323
1.7K
Adham Bava retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.. கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்.. கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
Cheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet media
தமிழ்
275
1.9K
4.1K
90.1K
Adham Bava
Adham Bava@adham_bava·
ஒரு மகிழ்வான தருணம் 💐
Adham Bava tweet media
தமிழ்
0
0
4
91