
k/balachandran
35.2K posts

k/balachandran
@kbrjls
Graduate from Annamalai University





















இறுதி நாட்களிலும் பாசிச போக்கில் மிதக்கும் திமுக அரசு! ஊடகவியலாளர் திரு. @SavukkuOfficial அவர்களின் காணொளியைப் பகிர்ந்த இளைய பாரதம், பேசு தமிழா பேசு, ஃபோர்த் எஸ்டேட் ஆகிய யூடியூப் சேனல்களுக்கு பாசிச திமுக அரசு சம்மன் அனுப்பியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தப்பிறகு கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு இடமில்லையா? ஊடகவியலாளர்கள் மீது இத்தனை அடக்குமுறைகள் ஏவப்படுவது ஏன்? ஐந்தாண்டுகளாக சர்வாதிகார போக்கை கைகொண்டு, ஏவல்துறையின் துணையோடு மாற்று கருத்து உடையோரையும், எதிர்கட்சியினரையும் முடக்கிய திமுக அரசு, ஆட்சியின் கடைசி நாட்களிலும் பாசிச போக்கில் இதுபோன்று மிதமிஞ்சி செயல்படுவது ஏற்புடையதல்ல! ஒன்று நிச்சயம்! எத்தனை வழக்குகளைப் பதிந்தாலும், எத்தனை கைவிலங்குகளைப் பூட்டினாலும், @arivalayam அரசு தனது இந்த அராஜகப் போக்காலேயே வீழ்வதை யாராலும் தடுக்க முடியாது!






















