"மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்" என்று தலைவர் @mkstalin கூறியுள்ளார். நிச்சயம் வருவோம். ஆனால், போனவருடமே கொஞ்சம் சுதாரித்திருந்தால், திராவிடமாடல் 2.0 ஆட்சி இப்பொழுது ஜெகஜோதியாக சென்று கொண்டு இருந்திருக்கும். சினிமா கவர்ச்சியில் மயங்கி மக்கள் வாக்களித்ததால் இப்பொழுது இந்த அழுதுவடியும் TNஐ பார்த்துக்கொண்டு இருந்திருக்க மாட்டோம். அல்லது என்னுடைய இந்த November 2025ல் போடப்பட்ட பதிவை தலைவர் பார்த்திருந்தால், ஓரளவு தற்காப்பு செய்திருப்பார்.
(x.com/i/status/20555…).
மீண்டு வரவேண்டுமானால், திமுகவினர் இரண்டு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
1) தேர்தலுக்கு முன் "திமுக வையும், திரிணாமுல்லையும் அகற்றுவேன்" என்று அமித்ஷா சொன்னார். அவர் சொன்னபடி 2 Govtsம் காலி. எப்படி அவர் சொன்னது நடக்கிறது?. TNல் விஜய் நின்றதால் வாக்களித்துவிட்டார்கள் என்று தெரிவதால் Evmஐ யாரும் சந்தேகிக்கவில்லை. "TNல் இனிமேல் திமுக வராது" என்று அமித்ஷா சொல்லிவிட்டால் "அதற்கு ஏற்றாற்போல் Evmsஐ set செய்கிறார்களா?" என்று check செய்ய உயரிய தொழில்நுட்ப குழுவை திமுக engage செய்யவேண்டும். Evmல் எந்த தவறும் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2) எங்கு தொலைத்தோமோ அங்குதான் தேடவேண்டும். @dmk_youthwing, @DMKWomensWing & @DMKITwing தான் @mkstalinக்கு உதவ வேண்டும். அவர்கள்தான் இளைஞர்கள், பெண்கள் Tvk பக்கம் shift ஆவதை சொல்லி தலைவரை எச்சரிக்கவில்லை. Route Mafia மூலம் திமுக வாக்குகள் எல்லாம் கொள்ளை போகிறது என்பதை சொல்லவில்லை.
எனவே, இப்பொழுது அவர்கள் இளைஞர்கள் மனதை நல்ல அரசியல் சொல்லி மாற்ற வேண்டும். பெண்கள் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்பதை புரிய வைக்கவேண்டும். @DMKITwing தன்னுடைய strengthஐ increase செய்துகொண்டு, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுத்து மக்களை கவரும் வகையில் திமுக சாதனைகளை வெளிப்படுத்தவேண்டும்.
எதிர்வரும் 5 ஆண்டுகளில் மேலும் விஜய் மேல் ஈர்ப்புள்ள புதிய வாக்காளர்கள் சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும்,"@mkstalin TNஐ one trillion dollar economyஐ நோக்கி முன்னேற்றி சென்றுகொண்டு இருந்தார். அவருக்கு வாக்களிக்காமல் TNற்கு அநியாயம் செய்துவிட்டார்கள்" என்று புரியவைக்கவேண்டும்.
இல்லாவிட்டால், எதிர்வரும் சந்ததிகளும் Tvkஐ நோக்கிதான் செல்லும். TN அதலபாதாளத்திற்கு செல்லும்.
"TNஐ காப்பாற்றுவதற்காகவாவது திமுகவை ஆதரியுங்கள்" என்று திமுகவை பிடிக்காதவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
@ShekarJanani@new261989@VEERASU90563715@Dravidaselvan3@Sridharpm3@Irzath_AJ@esezhil09@KathappanDurai@arunpan10833153@DixadinaDMK@vishagaramyaR@TamizhAnbu13@DJEACOUMAR@premkumar_cma@VetrivelRa19521@karthick2237
இளைஞர்கள் எல்லோரும் தற்குறிகள் இல்லை. இத்தனை நாட்கள் அவர்கள் பேசவில்லை.. இப்போது பேச ஆரம்பித்து விட்டார்கள்.. 🔥🔥
இன்னும் வருவார்கள், ஊக்கப்படுத்துவோம்.. 💪💪
#TVKfailsTN
இளைஞர்களே நீங்கள் எப்படி ஏமாற்றப் பட்டுள்ளீர்கள் என்று பின்னூட்டத்தில் உள்ள காணொளியை பாருங்கள், புரியும்.!
உண்மையில் இந்த சதியை செய்தவர் பாஜக அண்ணாமலை. அறுவடை செய்தவர் ஜோஸஃப் விஜய். இது இன்னமும் ஆபத்து.!
🙏🙏🙏Hello my friend please repost 🙏 🙏 🙏
இந்த வீடியோவை ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பார்த்தே ஆக வேண்டும் ஆகவே மக்களே மறு பதிவு (Reposts) பண்ணுங்க உங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பி இந்த main post க்கு வந்து repost ரிபோஸ்ட் பண்ண சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏
@mkstalin@DMKITwing@Udhaystalin@Office_of_Udhay
பேசுபவருடைய இன்ஸ்டாகிராம் ஐடி instagram.com/nambina5?igsh=…
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
உளமார என்ற சொல்லின் வரலாறு –க்கு தெரியுமா ?
தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு வரலாறு, ஒரு கருத்தியல், ஒரு போராட்டத்தின் நினைவுச்சின்னங்கள். அப்படிப்பட்ட சொல் தான் “உளமார”
இன்று நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பதவியேற்பு விழாவில், “உளமார” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது பலரிடமும் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கியுள்ளது.
ஏனெனில், தமிழ்நாட்டில் “உளமார” என்பது வெறும் மொழிச் சொல் அல்ல; அது பகுத்தறிவின் அரசியல் அடையாளம்.
இந்த வரலாற்றின் தொடக்கம் சார்லஸ் பிராட்லா என்ற பிரிட்டிஷ் அரசியல்வாதியிடம் இருந்து ஆரம்பிக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் தீவிர நாத்திகராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் அறியப்பட்ட அவர், 1880-ல் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “கடவுளின் பெயரால்” உறுதிமொழி எடுக்க மறுத்தார்.
“இல்லாத கடவுளை நான் சாட்சிக்கு அழைக்க முடியாது” என்று அவர் வாதிட்டார். இதனால் அவரை நாடாளுமன்றம் ஏற்க மறுத்தது. ஆனால் பிராட்லா தளரவில்லை. மீண்டும் தேர்தல் நடந்தது; மீண்டும் வென்றார். மறுபடியும் மறுக்கப்பட்டார். இப்படியே மூன்றுமுறை மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தும், அதிகார அமைப்பு அவரைத் தடுத்தது.
அப்போது அவர் கூறிய ஒரு கருத்து ஜனநாயக வரலாற்றில் முக்கியமானதாக மாறியது:
“என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் உரிமையை நீங்கள் அவமதிக்கிறீர்கள்.”
இறுதியில் அவரது இடைவிடாத போராட்டத்தால், 1886-ல் “கடவுளின் பெயரால்” என்பதற்குப் பதிலாக “உளமார” அல்லது “மனசாட்சிப்படி” உறுதிமொழி எடுக்க அனுமதி கிடைத்தது. பின்னர் அது சட்டமாகவும் மாறியது.
அதாவது “உளமாற” என்பது ஒரு சொல் அல்ல; மத அதிகாரத்துக்கு எதிராக மனசாட்சியின் வெற்றி.
பிரிட்டனில் தொடங்கிய இந்த சிந்தனைக்கு தமிழ்நாட்டில் அரசியல் உயிர் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா
1967-ல் திராவிட இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தலைமையிலான அமைச்சரவை முதன்முறையாக “இறைவன் பெயரால்” என்ற முறையை நிராகரித்து “உளமார” என்று உறுதிமொழி எடுத்தது. அது வெறும் நடைமுறை மாற்றமல்ல; இந்திய அரசியலிலேயே பகுத்தறிவை அரசின் மொழியாக்கிய தருணம்.
அண்ணா அதற்குக் கொடுத்த விளக்கம் இன்னும் நினைவில் நிற்கிறது:
“கடவுளிடம் பரிகாரம் செய்து சமரசம் செய்யலாம்; மனசாட்சியிடம் முடியாது.”
இந்த ஒரு வரியிலேயே “உளமார ” என்பதின் முழு அரசியல் தத்துவம் அடங்கியுள்ளது.
அதன்பிறகு கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆர் அவர்களும் அந்த மரபைத் தொடர்ந்து “உளமாற” என்றே பதவியேற்றனர்.
பின்னர் வந்த ஜெயலலிதா “ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று கூறி அந்த மரபை மாற்றினார். அதன் பின் அதிமுக ஆட்சிகள் அந்த வழியிலேயே சென்றன. மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ல் “உளமார” என்று முழங்கியபோது, அது ஒரு அரசியல் வார்த்தையாக மட்டுமல்லாமல் திராவிட மரபின் மீள் அறிவிப்பாகவும் பார்க்கப்பட்டது.
இப்போது கேள்வி என்னவென்றால் — இன்று விஜய் தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளியதோடு மட்டுமில்லாமல் “உளமார ” என்பதற்கு பதிலாக “ஆண்டவன் பெயரால்” உறுதி ஏற்றது அவர் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பதற்காக அல்ல.
ஒரு ஜனநாயகத்தில் ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பதும் இல்லாதிருப்பதும் அவரின் உரிமை. ஆனால் தமிழக அரசியலில் “உளமார ” என்பது ஒரு வரலாற்று அரசியல் அடையாளமாக மாறிவிட்ட நிலையில், அதைத் தவிர்த்து “ஆண்டவன் பெயரால்” என்பதைத் தேர்ந்தெடுப்பது இயல்பாகவே ஒரு அரசியல் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தன்னை மாற்று அரசியலின் பிரதிநிதியாகவும், திராவிட கொள்கைகளின் தொடர் அரசியல் கட்சியாக காட்டிக்கொள்ளும் ஒருவர், அண்ணா தொடங்கி வந்த பகுத்தறிவுச் சின்னத்தைத் தவிர்க்கும்போது, விமர்சனங்கள் எழுப்புவது தவிர்க்க முடியாததே.
ஏனெனில் “உளமார” என்பது வெறும் நாத்திகர்களின் சொல் அல்ல;
அது மனசாட்சிக்குப் பொறுப்பேற்கும் அரசியலின் மொழி.
“ஆண்டவன் பெயரால்” என்று சொன்னால் பொறுப்பு மேலுலகிற்கு செல்கிறது;
“உளமார ” என்று சொன்னால் பொறுப்பு நேராக தன்மனசாட்சிக்கே வந்து நிற்கிறது.
இன்று பலருக்கு “உளமார ” என்பது ஒரு சாதாரண நடைமுறை போலத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் சார்லஸ் பிராட்லா போன்றோரின் சிறை, போராட்டம், தேர்தல் தோல்விகள், மீண்டும் எழுச்சிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா போன்றோரின் பகுத்தறிவுப் புரட்சி இருக்கிறது.
அதனால் தான், ஒரு அரசியல்வாதி எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதும் முக்கியமாகிறது.
சில நேரங்களில் ஒரு சொல், ஒரு முழு கருத்தியலை வெளிப்படுத்திவிடும். தமிழக அரசியலில் “உளமாற” அப்படிப்பட்ட ஒரு சொல்.
@Singamonfire அருமை, ஐயா இவ்வளவு விபரமாக நீங்கள் விளக்கம் கொடுத்து எழுதியது வியப்பாக இருக்கிறது., அறிஞர் அண்ணா எப்படி எல்லாம் சிந்தித்து இந்த வார்த்தையை தெரிந்தெடுத்தி ருப்பார்... Great 👍🙏