
Monic Kumar G
154 posts

Monic Kumar G retweetledi

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi

தமிழ்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்கு தள்ளி, முதலமைச்சராக பதவியேற்ற திரு @TVKVijayHQ அவர்களுக்கு வாழ்த்துகள்!!
சிறந்த எதிர்கட்சியாக செயல்படப்போகும் @arivalayam திமுகவிற்கு வாழ்த்துகள்!
அஇஅதிமுக சிதறாமல் இருக்க @EPSTamilNadu அவர்களுக்கு எச்சரிக்கைகள்!
#MissUStalin
#TNபோராடும்
தமிழ்
Monic Kumar G retweetledi

அரசியல் மாண்பிற்கும், மக்களின் தீர்ப்பிற்கும், கூட்டணி கட்சிகளை கையாளும் திறமைக்கும் புதிய அத்தியாயங்களை எழுதி, ஒரு நவீன வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கிறார், சமகாலத்தின் அரசியல் மேதகை திரு @mkstalin அவர்கள்…
தமிழ்
Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi

Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi

#TNElectionResults #DMK #TVK
History should remeber the chronological order right
Vijay starts a party called TVK and bites DMK 24/7
Stalin and Co never responded to any of his hate speeches
As a result, Stalin lost in his own constituency
Vijay was in need of coalition to form government
Congress backstabbed DMK
Governor denies Vijay to form government without proving majority
Every left party except Vijay protested against it
ADMK tried to convince DMK to form the government but MKS DENIED IT AS IT IS DETRIMENTAL TO THE PEOPLE'S MANDATE
TVK sought support from CPI, CPM, VCK and IUML
IUML outrightedly denied it for the loyalty towards DMK
All the leftists went to discuss with MKS before making their decisions
All the 3 parties has extended their support towards TVK to form the government
Finally, MKS the man himself stresses Governor to let Vijay form the government
This is the order history must remember 🛐📈
English
Monic Kumar G retweetledi

இத்தனை ஆண்டுகளாக அரசியல் பார்த்திருக்கிறோம். ஆனால் Dravida Munnetra Kazhagam எம்எல்ஏக்கள் ‘அங்கே அடைக்கப்பட்டிருக்காங்க, இங்கே ரிசார்ட்டில் வைத்திருக்காங்க’ என்ற மாதிரி செய்திகளை இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்லை. அதுதான் இந்த இயக்கத்தின் ஒழுக்கத்தையும் வித்தியாசத்தையும் காட்டுகிறது. அதனால்தான் திமுக என்பதில் எனக்கு பெருமை… 🖤♥️
தமிழ்
Monic Kumar G retweetledi

எனக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குது. Vijay வெற்றி பெற்றுவிட்டார் ok. GenZ ஓட்டு போட்டார்கள், ok. 108 தொகுதியில் வெற்றி ok..
108 தொகுதிகளில் மட்டும் தான் GenZ இருக்கிறார்கள்? Vijay தோற்ற தொகுதிகளில் gen Z இல்லையா?
Tsunami என்றால் 200 kku மேல் தானே இருக்க வேண்டும். GenZ ஒரு பாக்கெட் la மட்டும் இருந்தா பரவாயில்லை?
உதாரணம்: விராலிமலையில் விஜயபாஸ்கர் 61,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தவெக போட்டியிட்டது. இந்த தொகுதியில் gen Z ஓட்டுக்கள் இல்லையா?
விஜய் வெற்றியில் கூட சந்தேகம் உள்ளது.
தமிழ்
Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi

மக்களின் தீர்ப்பை விமர்சிக்க மனம் இல்லை… ஆனால், திரு @mkstalin அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது!! தநா’ட்டின் தலைசிறந்த முதல்வர்களில் அவருக்கான இடம் தனிச்சிறப்பு வாய்ந்தது. என்றும் அவரோடு தோள் நிற்கும் அணியில் நானும் ஒருவன் என்பதில் மாற்றம் இருக்காது.
தமிழ்
Monic Kumar G retweetledi

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.

தமிழ்
Monic Kumar G retweetledi
Monic Kumar G retweetledi

#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.
🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
🗳️ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.
🗳️ "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
🗳️ தமிழ்நாடு வாக்களித்துவிட்டது,
மே 4 தமிழ்நாடு வெல்லும்!
#வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்
Monic Kumar G retweetledi

தமிழ்நாடு வெல்லும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#DMKSweeping2026

தமிழ்
Monic Kumar G retweetledi

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!

தமிழ்







