பாலு,மதுரை®™ retweetledi

"நான் கீழே போட்டுள்ளது "என்னால் நவம்பர் 2025ல் பதிவிடப்பட்டது.". அதில் அரசியலில் விஜயின் entryயால் வந்திருக்கும் தாக்கத்தை பற்றி எழுதியிருந்தேன். துரதிருஷ்டவசமாக நிறைய RP செய்யப்படாததால், தலைவர் பார்வை வரை செல்லவில்லை. இப்பொழுது மீண்டும் பதிவிடுவதால் எந்த பிரயோசனமும் இல்லைதான். ஆனால் @dmkitwing அனைவரின் posts களில் முக்கியமானவற்றை இனியாவது @mkstalin பார்வைக்கு கொண்டு சென்றால் நல்லது. இது எந்த பலனையும் எதிர்பார்க்காத, திமுகவின் ஒரு சாதாரண ஆதரவாளனின் பதிவு:-"
நவம்பர் 2025 பதிவு
"TN அரசியலில் Vijayயின் entryயால் ஏற்பட்டுள்ள தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை @mkstalin அவர்களும், @udhaystalinம் உளவுத்துறை மூலம் அறிந்திருப்பார்கள். X தளத்திலும் நண்பர்கள் discuss செய்திருப்பார்கள். என்னைப் பொருத்தவரை, @arivalayam தலைவர்கள் "எந்த தாக்கமும் இருக்காது" என்று easyஆக எடுத்துக்கொள்ள கூடாது. அவருக்கு மிகவும் அபரிமிதமாக கூட்டம் தானாக கூடுகிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். "சினிமா நடிகரை பார்க்கவருகிறார்கள், கூடுகிற கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது" என்று சொல்லப்பட்டாலும், உண்மை நிலை என்னவென்று @mkstalin அவர்கள், நம்பகமான surveys மூலம் frequent ஆக அறிந்துகொண்டால் நல்லது.
முக்கியமாக 18 to 35 வயதினரிடம் அடிக்கடி survey எடுத்து பார்ப்பது நல்லது.
"விஜய் தானாக அரசியலுக்கு வரவில்லை, Bjpயால் புகுத்தப்பட்டார்" என்பது அவர் மறுத்தாலும், உண்மை அதுதான். அரசியல் சாணக்கியத்தனம் மிக்க அமித்ஷா போன்றவர்களையுடைய Bjp
பலவித surveys & யோசனைகளுக்கு பின்னால்தான் விஜயை நிறுத்தியிருப்பார்கள். எனவே விஜயை easyஆக எடுத்துக்கொள்ளக்கூடாது.
கடந்த 2024 தேர்தலில், மொத்த வாக்குகளில் 70% poll ஆகியுள்ளது. 30% மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களில் 45% திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். 55% மற்ற கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்கள் திமுகவிற்கு எதிராக தான் வாக்களித்துள்ளார்கள் என்று கருதவேண்டும்.
அதாவது, மொத்தமுள்ள 6.37 கோடி வாக்காளர்களில், சுமார் 4.45 கோடி மக்கள் வாக்களித்தார்கள். அதில் @arivalayam பெற்றது சுமார் 2 கோடி வாக்குகள். இதுவே 80% வாக்குகள் பதிவாகி இருந்தால் 5.1 கோடி வாக்குகள் பதிவாகி இருக்கும். கூடுதலாக பதிவான வாக்குகளில் ஒரு 2% மட்டும் திமுகவிற்கு பதிவாகியிருந்தால், திமுக 44% மட்டுமே பெற்றிருக்கும்.
இருந்தாலும், திமுக பெற்ற வாக்குகளில் இப்பொழுது விஜய்க்கு கூடும் கூட்டமும் இருக்கிறது என்ற உண்மையை திமுக தலைவர்கள்/ நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள், திமுகவிற்கு எதிராக விழுந்த 55%ல்தான் இருப்பார்கள் என்று அலட்சியமாக இருக்கமுடியாது. அதேபோல், திமுக கூட்டணி வாங்கிய 45%ல் விஜய்க்கு ஆதரவாக யாரும் இல்லை என்று உறுதியாக சொல்லமுடியாது. திமுக வாங்கிய வாக்குகளில் ஒரு 5% மக்கள் மட்டும்தான் விஜயை ஆதரிப்பார்கள் என்று வைத்துக்கொண்டாலும், திமுக 40% வாக்குகள் மட்டும்தான் 2026ல் வாங்கும். நிச்சயம் அது திமுகவை danger zoneல் தான் வைக்கும். ஏனென்றால், மொத்த வாக்குகளில் வாக்களிக்காத அந்த 30% பேர் நிலைமை நிச்சயம் ஒரு mystryஆக இருக்கும். ஏனெனில், அவர்களில் மிகவும் குறைவானவர்களே திமுக கூட்டணியை ஆதரித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். எந்த கூட்டணியும் வேண்டாம் என்றிருப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்.
இப்பொழுது அவர்களில், நிறைய மக்கள் விஜயை ஆதரிக்க chance உண்டு. கரூர் incidentற்கு பிறகு விஜயின் செல்வாக்கு எப்படியுள்ளது என்று தெரியவில்லை.
கடைசி நேரத்தில், அமித்ஷாவின் மறைமுக ஆசிர்வாதத்தில், Bjp இல்லாமல், அதிமுகவும்,TVKயும் மட்டும் தேர்தல் உடன்பாட்டிற்குகூட வரமுடியும். அப்பொழுது, திமுக 40% வாக்குகள் வாங்கியிருந்தால், அதைவிட Admk+TVK அதிகமாக வாங்கமுடியும். எனவே, @mkstalin அவர்கள், நம்பகமான திமுக உறுப்பினர்கள் மூலம் மக்களிடம் உள்ள குறைகளை விரைவில் கண்டறிந்து களையவேண்டும். மீண்டும் திமுக ஆட்சி 2026ல் வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த post பதிவிட்டுள்ளேன். நண்பர்கள் விரும்பினால் RP செய்யுங்கள். @mkstalin அவர்களின் பார்வைக்கு சென்றால் நல்லது.@Pugal0405gmail4 @madurai_jinna @gpmohanbabu @Samsu23050686 @Sk01official @Dhanraj91180554 @GNGDMK13 @vjs1730 @Kathir_dmk07 @PrinceNice8 @manifancy74 @SukumarKiruba @pettaikarthi @_Cameo_Siddique @syedgoush @AnbuMattuPothum @VetrivelRa19521
தமிழ்








